இந்த காரோட ஒரு யூனிட்டை வாங்கவே நாக்கு தள்ளிடும்! இதுல அண்ணன் தம்பிகள் 3பேர் ஆளுக்கொன்னு வாங்கியிருக்காங்களா
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன் தம்பிகள் மூன்று பேர் ஒரே கார் மாடலை ஆளுக்கு ஒன்று என தனி தனியாக வாங்கி இருக்கும் நிகழ்வு இந்தியாவில் அரங்கேறியிருக்கின்றது. அவர்கள் மூவரும் வாங்கி இருப்பது லேண்ட் ரோவர் (Land Rover) நிறுவனத்தின் அதிக சொகுசு அம்சங்களைத் தாங்கிய கார் மாடலான டிஃபெண்டர் (Defender) ஆகும். இந்த கார் மாடலின் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே ரூ. 1.03 கோடிக்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது. இது ஆரம்ப நிலை வேரியண்டின் தொடக்க விலை என்பது குறிப்பிடத்தகுந்தது.
மேலும், இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்தியாவில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. மஹிந்திரா தார் (Mahindra Thar) கார் மாடலை போலவே அது மூன்று மற்றும் ஐந்து டோர்கள் ஆப்ஷன்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 110, லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 90 மற்றும் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 130 ஆகியவையே அவை ஆகும். இதில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 110-னே ஆரம்ப நிலை தேர்வு ஆகும். இதையே அண்ணன் தம்பிகள் மூன்று பேரும் வாங்கி இருக்கின்றனர்.
இதுவே இந்தியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் ஒரே நேரத்தில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 110 காரை ஆளுக்கு ஒன்று என வாங்குவது முதல் முறையாகும். இந்தியாவில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார் மாடலுக்கு பெரும் தொழிலதிபர்கள், செல்வந்தர்கள் மற்றும் திரை பிரபலங்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
இதை உறுதிப்படுத்தும் விதமாகவே அண்ணன், தம்பிகள் மூன்று பேர் ஒரே நேரத்தில் இந்த கார் மாடலை வாங்கியிருக்கின்றனர். அண்ணன் தம்பிகள் மூன்று பேரும் வாங்கியிருக்கும் அந்த கார் மாடல் ஒரே வண்ணத்தைக் கொண்டதாகவும் காட்சியளிக்கின்றன. இவர்கள் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 110 ஓர் 5 கதவுகளைக் கொண்ட சொகுசு எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். ஆகையால், இதன் வீல் பேஸும் சற்று நீளமாக இருக்கும். தொடர்ந்து, இந்த காரை இரண்டு விதமான எஞ்சின் ஆப்ஷன்களிலும் வாங்கிக் கொள்ள முடியும்.
2.0 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 3.0 லிட்டர் 6 சிலிண்டர் மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட எஞ்சின் ஆகியவையே அவை ஆகும். முதல் ஒன்று அதிகபட்சமாக 296 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க்கை வெளியேற்றும்.
இதேபோல், அடுத்த ஒன்று 394 பிஎச்பி ஆற்றலையும், 550 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இரண்டிலும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் வழங்கப்படுகின்றது. இதுபோன்ற சூப்பரான ஆற்றலை உருவாக்கும் திறனைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே இந்த காருக்கு இந்திய பணக்காரர்கள் மத்தியில் மிக அருமையான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
குறிப்பாக, இந்த காரை கரீனா கபூர், அர்ஜுன் கபூர், சஞ்சய் தத், கேல் ராகுல், சுனில் ஷெட்டி போன்ற முக்கிய பிரபலங்கள் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். ஏன் நம்முடைய தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின்கூட டிஃபெண்டர் கார் மாடலையே சில நேரங்களில் பயன்படுத்தி வருகின்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் சொகுசு கார் மாடல்களைப் போலவே லேண்ட் ரோவர் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு சான்றாகவே தற்போதைய நிகழ்வு அமைந்திருக்கின்றது. அதிக சொகுசு வசதி மற்றும் அட்வான்ஸ்டு தொழில்நுட்பங்களுக்கு பெயர்போனதாக லேண்ட் ரோவர் நிறுவனத்தின் தயாரிப்புகள் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








