புடவை அணிந்து யமஹா ஆர்15 பைக்கில் டிர்பிள்ஸ் சென்ற சாகச பெண்கள்..!! (வீடியோ)

Written By:

பெண்கள் சூப்பர்திறன் பெற்ற பைக்குகள் ஓட்டுவதை ஆண்கள் பார்த்தால், அவர்களுக்கு நிச்சயம் கிலி அடித்து விடும்.

அப்படி ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தக் கூடிய வீடியோ ஒன்று இன்றைய இணைய உலகில் வைராகியுள்ளது.

யமஹா ஆர்15 பைக்கில் புடவையில் ரைடிங் சென்ற பெண்கள்..!!

ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப் என எந்த சமூக ஊடகங்களையும் விட்டு வைக்காமல், சும்மா பரபரப்பு கிளப்புகிறது அந்த வீடியோ.

யமஹா ஆர்15 பைக்கில் புடவையில் ரைடிங் சென்ற பெண்கள்..!!

ஒய்.இசட்.எஃப் ஆர்15 வி2.0 இந்த சூப்பர் பைக் மாடல் யமஹா நிறுவனத்திற்கு சொந்தமானது. இதை ஓட்டுவதற்கு முறையான பயிற்சி தேவை.

யமஹா ஆர்15 பைக்கில் புடவையில் ரைடிங் சென்ற பெண்கள்..!!

நிலைமை இப்படி இருக்க, ஹைதராபாத்தில் யமஹாவின் இந்த சூப்பர் பைக்கில் மூன்று பெண்கள் டிர்பிள்ஸ் போனது பரபரப்பை கூட்டியுள்ளது.

யமஹா ஆர்15 பைக்கில் புடவையில் ரைடிங் சென்ற பெண்கள்..!!

இந்தியாவில் பைக்குகளில் டிர்பிள்ஸ் போவது சட்டப்படி குற்றம், மேலும் அந்த மூன்று பெண்களும் ஹெல்மெட் அணியவில்லை.

யமஹா ஆர்15 பைக்கில் புடவையில் ரைடிங் சென்ற பெண்கள்..!!

இதைவிட அந்த வீடியோ வைரலாக பரவுவதற்கு காரணமாக அமைந்தது என்ன என்றால்,

யமஹா ஒய்.இசட்.எஃப் ஆர்15 வி 2.0 பைக்கை ஓட்டிய பெண் புடவை அணிந்திருந்தார். மேலும் மற்றொரு பெண்ணும் புடவையில் தான் இருந்தார்.

யமஹா ஆர்15 பைக்கில் புடவையில் ரைடிங் சென்ற பெண்கள்..!!

புடவையில் இருந்த பெண்கள் சூப்பர் பைக்கில் சென்றதை பார்த்து, உடன் சென்ற கார் பயணி அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.

மூன்று பெண்கள் சூப்பர் பைக்கில் செல்வதை பார்த்து பலர் ஆச்சர்யம் அடைந்துள்ளனர். இருந்தாலும் ஹெல்மெட் இல்லாமல், புடவை அணிந்து பைக்கில் செல்வது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானது என்பதும் நிதர்சனம்.

சூப்பர்பைக்கில் செல்லும் பெண்களின் வீடியோ:

யமஹா ஆர்15 பைக்கில் புடவையில் ரைடிங் சென்ற பெண்கள்..!!

யாரையும் பற்றியும் கவலைப்படமால, தைரியமாக பெண்கள் இதுபோன்ற சூப்பர் பைக்கில் சென்றால் அதை வரவேற்பது தான் நம் கடமை.

யமஹா ஆர்15 பைக்கில் புடவையில் ரைடிங் சென்ற பெண்கள்..!!

இதுபோன்ற இடங்களிலும் பெண்களுக்கு முன்னேற்றம் உள்ளது என்பதை ஹைதராபாத் 'பெண்கள் பைக் ரைடிங்' சம்பவம் வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது.

யமஹா ஆர்15 பைக்கில் புடவையில் ரைடிங் சென்ற பெண்கள்..!!

ஆனால் ஒரு பாதுகாப்பில்லாத பயணத்தை யாரு மேற்கொண்டாலும், அது கண்டிக்கத்தக்கது தான். அதற்கான சூழலை ரைடர்கள் புரிந்துக்கொள்வது அவசியமாகிறது.

யமஹா ஆர்15 பைக்கில் புடவையில் ரைடிங் சென்ற பெண்கள்..!!

மோட்டார் சைக்கிள் ஓட்டுவதில் எப்போதும் கவனம் தேவை. சாலையில் செல்லும் போது கியர்களை இயக்கும் விதத்தில் தான் ரைடரின் பாதுக்காப்பே உள்ளது.

யமஹா ஆர்15 பைக்கில் புடவையில் ரைடிங் சென்ற பெண்கள்..!!

ஹெல்மெட்டுகள், கிளவுவ்ஸ், ஜாக்கெட்ஸ், க்கினீ மற்றும் எல்போ கார்ட்ஸ் போன்றவை பார்க்க ஃபேன்சியாக தெரிந்தாலும், அவை ரைடரை பாதுகாக்கவே வடிவமைக்கப்பட்டுள்ளன.

யமஹா ஆர்15 பைக்கில் புடவையில் ரைடிங் சென்ற பெண்கள்..!!

இந்த சூழ்நிலையில் யமஹா ஒய்.இசட்.எஃப் ஆர்15 வி 2.0 மாடலை போன்ற ஒரு சூப்பர் பைக்கை பெண்கள் புடவையுடன் ஓட்டி செல்வது பெரிய ஆபத்து தான்.

யமஹா ஆர்15 பைக்கில் புடவையில் ரைடிங் சென்ற பெண்கள்..!!

பெண்கள் சூப்பர் பைக்குகள் ஓட்டுவதால் மகிழ்ச்சி தான். ஆனால் அதற்கான அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் ஏற்று போக்குவரத்து விதிகளின் படி நடக்க வேண்டும்.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Three Women Wearing Sarees Ride A Yamaha R15 In Hyderabad; Video Goes Viral. Click for Details...
Story first published: Friday, December 1, 2017, 16:36 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark