வோடஃபோன் ZooZoo விளம்பரம் பாத்திருக்கீங்களா!.. இதை டைரக்ட் செய்தவர் இப்போ என்ன காருல போயிருக்காரு பாருங்க!!
இந்தியாவில் படங்களைப் போலவே சில டிவி விளம்பரங்களும் இந்தியர்களின் மனதைக் கவர்ந்ததாக மாறியிருக்கின்றன. அந்த மாதிரியான விளம்பரங்களில் ஒன்றே தொலைத்தொடர்பு நிறுவனமான வோடஃபோனின் 'ஸுஸு' (Vodafone Zoozoo) ஆகும். இந்த விளம்பரத்தை விரும்பாதவர்களே இருக்க முடியாது. குறிப்பாக, இளம் காதலர்கள் மத்தியில் இந்த விளம்பரத்திற்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. இத்தகைய விளம்பரத்தை எடுத்தவரே பிரகாஷ் வர்மா. இவர் இந்த விளம்பரத்தை மட்டுமல்ல இதுபோன்று இன்னும் பல விளம்பரங்களை அவர் எடுத்திருக்கின்றார்.
இதுமட்டுமல்ல படம் ஒன்றிலும் அவர் நடித்திருக்கின்றார் என்பது கவனிக்கத்தகுந்தது. சமீபத்தில் வெளியாகிய துடரும் எனும் படத்திலேயே அவர் நடித்திருக்கின்றார். இந்த ஒரு படத்தில் மட்டுமே அவர் நடித்துள்ளார் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த நிலையிலேயே அவர் பிரகாஷ் வர்மா தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் மிகப் பெரிய மைல்கல்லை எட்டியிருப்பது தெரிய வந்திருக்கின்றது.

அவர் ஒரு லக்சூரி காரை கொள்முதல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக அந்த அவர் அந்த ஆடம்பர காரில் பயணிக்கும் வீடியோ தற்போது வெளியாகி இருக்கின்றது. பிராஷ் வர்மா, ஆரஞ்சு லம்போர்கினி உருஸ் காரையே வாங்கி இருக்கின்றார்.
இது ஓர் அதிக ஆற்றலை வெளியேற்றும் திறன் கொண்ட எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். 4.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜட் வி8 பெட்ரோல் மோட்டாரே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 657 எச்பி மற்றும் 850 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
மேலும், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 300 கிமீ ஆகும். இதுமட்டுமல்ல இந்த காருக்கு பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்ட வெறும் 3.3 செகண்டுகளே போதுமானது ஆகும். இத்தகைய அதிக ஆற்றலை உருவாக்கும் காரிலேயே பிரகாஷ் வர்மா கொச்சியின் முக்கிய சாலையில் பயணித்திருக்கின்றார்.
இந்த வீடியோவே இப்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டு உள்ளது. இந்தியாவில் இந்த கார் மாடலின் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே ரூ. 4.18 கோடிக்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

இந்த காரை இந்தியாவில் பிரகாஷ் வர்மா மட்டுமே பயன்படுத்தவில்லை, இன்னும் பல பிரபலங்களும், முக்கிய பிரதிநிதிகளும் பயன்படுத்தி வருகின்றார் என்பது கவனிக்கத்தகுந்தது. ஏஆர் ரஹ்மான், அம்பானி, ரஜினியின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த், ரோஹித் ஷெட்டி மற்றும் கார்த்திக் ஆர்யன் என முக்கிய பிரபலங்கள் பலரே இந்த காரை பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சூப்பர் கார்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்த நிலையிலேயே பிரகாஷ் வர்மா இந்த காரை வாங்கி இருக்கின்றார். இவர் யூஸ்டு கார் மார்கெட்டில் இந்த காரை வாங்கி இருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது. காரின் பதிவெண் மஹாராஷ்டிராவின் பதிவெண்ணைக் கொண்டிருப்பதை வைத்தே இவ்வாறு யூகிக்கப்படுகின்றது. ஆனால், இதுபற்றிய அதிகாரப்பூர்வ வார்த்தைகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









