இந்தியாவே கடவுளா நினைக்கற ஆள்! மும்பையை கலக்கிய பச்சை தமிழன்! ரெண்டரை கோடி ரூபா காரில் வந்து இறங்கியது அவரா!

இந்திய செல்வந்தர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் (Mercedes Benz S-Class). சொகுசு செடான் (Luxury Sedan) ரகத்தை சேர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் காரை, பாலிவுட் திரையுலக நட்சத்திரங்கள் பலரும் வைத்துள்ளனர். இதில், அமிதாப் பச்சன் (Amitabh Bachchan), ஷாருக்கான் (Shah Rukh Khan), சல்மான் கான் (Salman Khan) மற்றும் தீபிகா படுகோனே (Deepika Padukone) போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் கார் மிகவும் விலை உயர்ந்தது.

இந்த காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் (S 350d) விலையே 1.79 கோடி ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் டாப் வேரியண்ட்டின் (S450 4Matic) விலையோ 1.90 கோடி ரூபாயாக உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். ஆன்-ரோடு விலை (On-road Price) முறையே 2.25 கோடி ரூபாய் மற்றும் 2.40 கோடி ரூபாய் என்ற அளவில் வரும்.

Kamal Haasan Spotted In Mercedes Benz S-Class

மிகவும் விலை உயர்ந்ததாக இருந்தாலும் கூட, சொகுசு வசதிகள் நிரம்பிய கார் என்பதால், திரையுலக நட்சத்திரங்களின் முதன்மையான தேர்வாக இது உள்ளது. அத்துடன் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் காரின் செயல்திறனும் சிறப்பாக இருப்பதால், இந்த காரில் பயணம் செய்வதை, திரையுலக நட்சத்திரங்கள் விரும்புகின்றனர்.

இந்த சூழலில், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர், மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் காரில் வந்து இறங்கிய வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. மும்பையில் (Mumbai) உள்ள ஜூஹூ (Juhu) பகுதியில் இந்த வைரல் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

Kamal Haasan

இந்த பகுதியில்தான் பாலிவுட் திரையுலக நட்சத்திரங்கள் பலரும் வசித்து வருகின்றனர். எனவே பாலிவுட் திரையுலக நட்சத்திரங்களை அங்கு அடிக்கடி பார்க்க முடியும். அப்படிப்பட்ட ஒரு இடத்திற்கு சென்று ஊடகங்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பியிருப்பது ரசிகர்களால் ஆண்டவர் என அழைக்கப்படும் கமல் ஹாசன் (Kamal Haasan) ஆவார்.

கமல் ஹாசன், சிலம்பரசன் (Silambarasan) மற்றும் த்ரிஷா (Trisha) உள்ளிட்டோர் நடித்துள்ள தக் லைஃப் (Thug Life) திரைப்படத்தை மணி ரத்னம் (Mani Ratnam) இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் (A. R. Rahman) இசையமைத்துள்ள தக் லைஃப் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி (Release Date) வரும் ஜூன் 5ம் தேதி (June 5) என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றுக்கு மும்பை ஜூஹூ பகுதிக்கு கமல் ஹாசன் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் காரில் வந்தபோதுதான் தற்போது வைரலாக பரவி வரும் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மற்ற பெரும்பாலான முன்னணி நடிகர்களை போலவே கமல் ஹாசனும் மிகவும் விலை உயர்ந்த கார்களில் பயணம் செய்வதை விரும்ப கூடியவர் ஆவார்.

இதற்கு அவரிடம் உள்ள விலை உயர்ந்த கார் கலெக்ஸனே (Car Collection) சாட்சி. கமல் ஹாசனிடம் இருப்பதில், பிஎம்டபிள்யூ 730எல்டி (BMW 730LD) மற்றும் லெக்ஸஸ் எல்எக்ஸ் 570 (Lexus LX 570) போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும். இந்த 2 கார்களின் மொத்த மதிப்பு மட்டுமே சுமார் 4 கோடி ரூபாய் என்ற அளவில் இருக்கும் என கூறப்படுகிறது.

கமல் ஹாசன் மட்டுமல்லாது, அவரது மகளும், நடிகையுமான ஸ்ருதி ஹாசனும் (Shruti Haasan), மிகவும் விலை உயர்ந்த கார்களை விரும்ப கூடியவர்தான். அவரிடம், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் (BMW 7 Series), லேண்ட் ரோவர் ஸ்போர்ட் ஹெச்எஸ்இ (Land Rover Sport HSE), லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் எவோக் (Land Rover Range Rover Evoque), ஆடி க்யூ7 (Audi Q7) போன்ற கார்கள் எல்லாம் இருப்பதாக கூறப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மும்பையில் கமல் ஹாசன் பயன்படுத்திய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் கார், இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் மற்றும் ஆடி ஏ8 (Audi A8) போன்ற சொகுசு செடான் கார்களுக்கு எல்லாம், மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக திகழ்கிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 21, 2025, 13:33 [IST]
English summary
Thug life star kamal haasan spotted in mercedes benz s class viral video check all details here
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+