திபெத்தில் முதல் புல்லட் ரெயில் சேவையை துவங்கி அழகு பார்க்கும் சீனா!! அருணாச்சல பிரதேசத்திற்கு அருகாமையில்

திபெத்தில் முதல் புல்லட் ரெயில் சேவையை சீனா கொண்டுவந்துள்ளது. நமது அருணாச்சல பிரதேசத்திற்கு மிக அருகில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த புல்லட் ரெயில் சேவையை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

திபெத்தில் முதல் புல்லட் ரெயில் சேவையை துவங்கி அழகு பார்க்கும் சீனா!! அருணாச்சல பிரதேசத்திற்கு அருகாமையில்

இந்தியா- சீனா இடையே ஏற்கனவே எல்லை பிரச்சனை இருப்பது உங்கள் எல்லோர்க்குமே நன்றாகவே தெரியும். சீனாவுடன் நாம் பகிர்ந்துள்ள எல்லை சிறியது தான், என்றாலும் நமக்கு வடகிழக்கில் எல்லை நாடுகளாக உள்ளவைகளை சீனா தானே தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

திபெத்தில் முதல் புல்லட் ரெயில் சேவையை துவங்கி அழகு பார்க்கும் சீனா!! அருணாச்சல பிரதேசத்திற்கு அருகாமையில்

அவ்வாறு சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் நாட்டில் புல்லட் ரெயில் சேவை நாட்டிலேயே முதல்முறையாக துவங்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் சேவையை துவங்கி வைத்திருப்பதும் சீனா தான்.

திபெத் தலைநகர் லாசாவையும், எல்லை நகரமான யிங்சியையும் இணைக்கும் விதத்தில் இந்த புல்லட் ரெயில் சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் 435.5 கிமீ தொலைவிலான இந்த புல்லட் ரெயில் வழிதடத்தில் சேவை நேற்று (ஜூன் 25) முதல் துவங்கப்பட்டுள்ளது.

திபெத்தில் முதல் புல்லட் ரெயில் சேவையை துவங்கி அழகு பார்க்கும் சீனா!! அருணாச்சல பிரதேசத்திற்கு அருகாமையில்

சீனாவில் ஆளுங்கட்சியாக இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவு வருகிற ஜூலை 1ஆம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகவே தற்போது திபெத்தில் இந்த புல்லட் ரெயில் சேவை துவங்கப்பட்டுள்ளது.

இத்துடன் சீனா தனது கொண்டாட்டத்தை நிறுத்தி கொள்ள போவதில்லை. அதிபர் ஜி ஜின்பிங் சீனாவின் முக்கிய வர்த்தக நகரமான சிசுவான் பகுதியில் இருந்து திபெத்தின் யிங்சி நகர் வரையிலான புல்லட் ரெயில் திட்ட பணிகளை விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

திபெத்தில் முதல் புல்லட் ரெயில் சேவையை துவங்கி அழகு பார்க்கும் சீனா!! அருணாச்சல பிரதேசத்திற்கு அருகாமையில்

சீனாவின் சிசுவான் மாகாணத்தின் தலைநகரமான செங்சூடு நகரத்தில் இருந்து துவங்கவுள்ள இந்த புதிய புல்லட் ரெயில் திட்டம், யான் மற்றும் காம்டோ வழியாக திபெத் நாட்டிற்குள் நுழைந்து லாசா வரை செல்கிறது. இதன் மூலம் செங்குடு- லாசா வரையிலான பயணம் 48 மணிநேரத்தில் இருந்து 13 மணிநேரமாக குறையும்.

திபெத்தில் முதல் புல்லட் ரெயில் சேவையை துவங்கி அழகு பார்க்கும் சீனா!! அருணாச்சல பிரதேசத்திற்கு அருகாமையில்

எல்லை உரிமைகளை பாதுகாப்பதில் இந்த புதிய ரெயில் பாதை முக்கிய பங்கு வகிக்கும் எனவும் சீன அதிபர் தெரிவித்துள்ளார். தற்போது புல்லட் ரெயில் சேவை துவங்கப்பட்டுள்ள யிங்சி பகுதி, இந்திய எல்லை மாநிலமான அருணாச்சலப் பிரதேச எல்லையை ஒட்டி உள்ள நகரம் ஆகும்.

சீனா, திபெத் நாட்டில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதுடன், எல்லை நகரங்களில் உட்கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறது. இந்தியா -சீனா இடையில் ஏற்கனவே சில பிரச்சனைகள் உள்ளதால், இந்த புல்லட் ரெயில் சேவையை சீனா துவங்கியிருப்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Tibet gets first bullet train, links Lhasa to border with India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X