இந்த காசுல 4-5 பிரம்மாண்டமான ஷங்கர் படமே எடுக்கலாம் போலயே! டிக்கெட் கேன்சல் செய்ததிலேயே இவ்வளவு காசா?
பயணிகள் ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்வது மூலம் மட்டும் ஆண்டுக்கு ரூபாய் 2109 கோடியை வருமானமாக ஈட்டி உள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பதிவுகள் வைரலாக பரவி வருகின்றன. இது பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் பாருங்கள்.
இந்தியாவில் ரயில் டிக்கெட் விலை புக் செய்ய ஆன்லைனில் ஐஆர்சிடிசி என்ற தளம் செயல்பட்டு வருகிறது. இந்த தளத்தை தினம்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் ஆயிரக்கணக்கான ரயில்களில் பயணிக்க ரயில் டிக்கெட் விலை இந்த தளத்தில் மட்டுமே அதிகாரப்பூர்வமாக புக்கிங் செய்ய முடியும். இப்படியாக தான் ரயில் பயணிகளின் டிக்கெட்டுகள் புக்கிங் செய்யப்பட்டு வருகிறது.

இப்படியாக புக்கிங் செய்யப்படும் ரயில் டிக்கெட் கேன்சல் செய்யப்பட்டால் கேன்சல் செய்யப்பட்ட டிக்கெடிற்கு ஒரு டிக்கெட் புக் செய்ய இவ்வளவு கட்டணம் என சேவை கட்டணம் பிடித்தம் செய்யப்பட்டது போக மீதி கட்டணம் தான் பயணிகளின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்படும். இப்படியாக டிக்கெட்களை கேன்சல் செய்வது மூலம் மட்டும் இந்திய ரயில்வே நிர்வாகம் ஒரே ஆண்டில் ரூ2109 கோடியை வருமானமாக ஈட்டி உள்ளதாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு அளிக்கப்பட்ட பதில் குறித்த விபரம் வந்துள்ளதாக இந்த பதிவு வைரலாக பரவி வருகிறது பல சரிபார்க்கப்பட்ட எக்ஸ் தள பக்கங்கள் கூட இந்த பதிவுகளை பகிர்ந்து வருகின்றன. இது பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த தகவல் உண்மைதானா இல்லையா என்று இதுவரை எந்த விபரமும் தெரியவில்லை. இந்த பதிவு வைரலான நிலையில் இதற்கு ரயில்வே நிர்வாகமும் எந்த பதிலும் அளிக்கவில்லை.

இந்த பதிவின்படி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் ரயில்வே நிர்வாகம் டிக்கெட் கேன்சல் செய்வதன் மூலம் 2022-23-ம் நிதியாண்டு, 2023-24-ம் நிதியாண்டில் எவ்வளவு வருமானத்தை ஈட்டியுள்ளது என கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அளிக்கப்பட்ட பதிலில் 2022-23-ம் நிதியாண்டில் ரூ2109 கோடியை கேன்சல் செய்யப்பட்ட டிக்கெட்டிலிருந்து கிடைத்த வருமானமாகவும், 2023-24ம் நிதியாண்டில் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை மட்டும் ரூ1762 கோடியை ஈட்டியுள்ளதாக பதில் அளிக்கப்பட்டுள்ளது.
இது ரயில் பயணிகளை அதிர்ச்சியை ஆக்கியுள்ளது. பொதுவாக ரயில் டிக்கெட் புக் செய்யும் பயணிகள் பலர் காத்திருப்பு பட்டியலில் டிக்கெட் விலை புக் செய்கிறார்கள். இப்படியாக காத்திருப்பு பட்டியலில் புக் செய்யப்பட்ட டிக்கெட் எல்லாம் ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகள் தங்கள் டிக்கெட்டுகளை ரத்து செய்தால் அந்த இடத்திற்கு இவர்கள் நகர்த்தப்பட்டு இவர்களுக்கு டிக்கெட் கன்ஃபார்ம் செய்யப்படும்.

இப்படியாக தங்கள் டிக்கெட் எப்படியாவது கன்ஃபார்ம் ஆகிவிடும் என பலர் காத்திருப்பு பட்டியலில் டிக்கெட்களை புக் செய்கிறார்கள். ஆனால் சிலருக்கு டிக்கெட் கடைசி நேரம்வரை கன்ஃபார்ம் ஆகாமல் கேன்சலாகி விடுகிறது. இப்படியாக கன்ஃபார்ம் ஆகாத டிக்கெட்டிற்க்கும் சேவை கட்டணமாக குறிப்பிட்ட அளவு பணத்தை பிடித்தம் செய்து கொண்டு பாக்கி பணத்தை தான் ரயில்வே நிர்வாகம் டிக்கெட் எடுக்க பணம் செலுத்தப்பட்ட வங்கி கணக்கு திரும்ப செலுத்துகிறது.
உதாரணமாக 240 ரூபாய்க்கான டிக்கெட்டை ஒருவர் காத்திருப்பு பட்டியலில் புக் செய்து கடைசிவரை அவர் கன்பார்ம் ஆகாமல் காத்திருப்பு பட்டியலில் இருந்து நேரடியாக டிக்கெட் ரத்து செய்யப்பட்டால் அவருக்கு ரூபாய் 180 மட்டுமே வங்கி கணக்கிற்கு திரும்ப அனுப்பப்படும். பாக்கியுள்ள பணம் சேவை கட்டணமாக வசூல் செய்யப்படும். இப்படியாக வசூல் செய்யப்பட்ட பணம் தான் ஆண்டுக்கு ரூ2109 கோடியாக இருப்பதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த தகவல் தற்போது உறுதியான தகவலாக இல்லாவிட்டாலும் இவ்வளவு அதிகமான தொகை பிடித்தம் செய்யப்பட்டால் இது நேரடியாக மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கும் ஒரு முயற்சி என மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இவ்வளவு அதிக பணம் சேவை கட்டணமாக வசூல் செய்ய வேண்டிய தேவை இல்லை. ரயில்வே நிர்வாகம் அதிகமான கட்டணத்தை வசூல் செய்கிறது என்ற பேச்சு மக்கள் மத்தியில் இருந்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஐஆர்சிடிசி ரயில்வே நிர்வாகம் ஆன்லைன் மூலம் டிக்கெட் சேவையை ஆரம்பித்த காலத்தில் ஆன்லைன் தளங்களை பயன்படுத்துவது சற்று விலை அதிகமாக இருந்தது. அதனால் டிக்கெட்களை கேன்சல் செய்தால் அதிக பணம் பிடித்தம் செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்தது. ஆனால் இன்று மலிவு விலையிலேயே ஆன்லைன் சேவைகளை பெற முடியும். இது இதற்கு ஏற்ப டிக்கெட் கேன்சல் கட்டணத்தையும் குறைத்து ஐஆர்சிடிசி புதிய விதிமுறையை கொண்டு வர வேண்டும்.


Click it and Unblock the Notifications









