ரிசர்வ் பெட்டியில் கூட்டமா ஏறி டார்ச்சர் பண்ணுறாங்களா? இதை பண்ண சொல்லி ரயில்வே நிர்வாகமே சொல்லிடுச்சு

முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டியில் டிக்கட் இல்லாமல் பலர் ஏறி சீட்டுகளை ஆக்கிரமிப்பு செய்த சம்பவத்தை சுட்டிக்காட்டி பயணி ஒருவர் தனது சமூகவலைதள பக்கங்களில் பகிர்ந்த சம்பவத்திற்கு ரயில்வே நிர்வாகம் பதில் அளித்துள்ளது. இப்படியான சூழ்நிலையில் எப்படி உதவிகளை பெறுவது எனவும் தெரிவித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியா முழுவதும் ரயில் போக்குவரத்து என்பது மிக முக்கியமான போக்குவரத்து வசதியாக இருக்கிறது. தினம் தோறும் ஆயிரக்கணக்கான ரயில்கள் பயணம் செய்து வருகின்றன. அதில் லட்சக்கணக்கான பயணிகள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணம் செய்து வருகிறார்கள். இந்தியாவிலேயே மிகக் குறைந்த விலையில் நீண்ட தூரம் பயணம் செய்ய இருக்கும் ஒரே வழி ரயில் வசதி தான்.

ticketless passengers occupy reservation compartment

இந்தியா முழுவதும் ரயில்கள் அதிகமாக இயக்கப்பட்டாலும் பெரும்பாலும் இரவு நேரங்களிலேயே நீண்ட தூர ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது இந்த ரயில்களில் டிக்கெட் குறைவாக இருப்பதால் அதிகமான எண்ணிக்கையிலான மக்கள் இந்த ரயில்களில் பயணம் செய்ய திட்டமிட்டு வருகிறார்கள். இப்படியாக ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்டு முன்பதிவு செய்யப்படாத பெட்டி என இரண்டு பிரிவுகளாக பெட்டிகள் உள்ளன.

இந்நிலையில் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள் அதிக அளவில் விற்பனையானால் அந்த டிக்கெட்டுகளை எடுத்த பல பயணிகள் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில் ஏறி பயணம் செய்கிறார்கள். இதனால் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளுக்கு மிகப் பெரிய தொந்தரவாக இருக்கிறது. இது இந்தியா முழுவதும் இருக்கும் பெரும் பிரச்சினையாக இருக்கிறது.

ticketless passengers occupy reservation compartment

குறிப்பாக தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு, வடமாநிலங்களுக்கு பயணிக்கும் ரயில்களில் இப்படியான பிரச்சனைகளை பலர் சந்தித்து வருகிறார்கள். படுக்கை வசதி கொண்ட பெட்டி மட்டுமல்லாமல் ஏசி பெட்டிகளிலும் இப்படியாக முன் பதிவு செய்யப்படாத டிக்கெட்கள் எடுத்தோ அல்லது டிக்கெட் எடுக்காமலோ பல பயணம் செய்து வருகிறார்கள். இதனால் முன்பதிவு செய்த பயணிகளுக்கு பெரும் தொந்தரவாக இருக்கிறது.

இப்படியான சூழ்நிலையில் சிக்கிய ஒருவர் தற்போது இதை பொதுவெளியில் பேசி அதற்கான தீர்வையும் பெற்றுள்ளார். எக்ஸ் தள பக்கத்தில் பாபு பையா என்பவர் சமீபத்தில் ஒரு பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த பதிவின்படி அவர் குஜராத் மாநிலம் புஜ் பகுதியில் இருந்து சாலிமர் வரை பயணிக்கும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளார்.

ticketless passengers occupy reservation compartment

இவர் இந்த ரயிலில் உள்ள எஸ்5 கோச்சில் பயணம் செய்துள்ளார். அந்த கோச்சில் முன்பதிவு டிக்கெட் இல்லாத பயணிகள் பலர் ஏறி பயணம் செய்துள்ளனர். இதனால் அந்த பெட்டியில் பயணித்த அனைவருக்கும் தொந்தரவு ஏற்பட்டுள்ளது. இதை புகைப்படம் எடுத்து அவர் பதிவு செய்து அந்த பதிவில் ரயில்வே நிர்வாகம் மற்றும் ரயில்வே துறை அமைச்சரை டேக் செய்து பதிவு செய்துள்ளார்.

இப்படியாக தினம் தோறும் பல்வேறு ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் டிக்கெட் இல்லாத பலர் பயணம் செய்து வருகின்றனர். அவர்கள் முன்பதிவு செய்த பயணிகளுக்கு தொந்தரவு தருகின்றனர் என்ற பேச்சு எழுந்து வருகிறது. இதற்கு தீர்வு கிடைக்காமல் பலர் தவித்து வரும் நிலையில், பாபா பையா பதிவு செய்த இந்த பதிவிற்கு ரயில்வே நிர்வாகம் பதில் அளித்துள்ளது.

இந்த பதிவில் குறிப்பிட்ட சம்பவம் குறித்து நடவடிக்கை எடுப்பதற்காக புகார் அளித்தவரின் செல்போன் நம்பரை கேட்டு ரிப்ளை செய்துள்ளது. இது மட்டுமல்லாமல் இது குறித்த புகார்களை செய்வதற்காக 139 என்ற எண்ணிற்கு டயல் செய்யலாம், அல்லது ரயில் மதாத் என்ற இணையதளத்தில் இது குறித்து புகார் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தமிழகத்திலும் இதுபோன்று டிக்கெட் எடுக்காமல் முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்யும் அவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக அவ்வப்போது புகார்கள் எழுந்து கொண்டே வருகின்றன. இது குறித்து என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு தெரியாமல் இருந்தது இனி அவர்கள் 139 என்ற என்ன டயல் செய்து, இது குறித்து புகார் அளிக்கலாம், அல்லது ரயில் மதாது என்ற இணையதளத்திலும் புகார் அளிக்கலாம் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 27, 2024, 17:05 [IST]
English summary
Ticketless passengers occupy reservation railway reacts
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X