பைக்கில் சென்ற இளைஞரை விரட்டி சென்ற புலி.... நெஞ்சை பதைபதைக்க வைக்கும் அதிர்ச்சி வீடியோ!

பைக்கில் இரு இளைஞர்களை புலி ஒன்று மிக வேகமாக விரட்டிச் செல்லும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. நெஞ்சை பதைபதைக்க வைக்கும் இந்த வீடியோகுறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

பைக்கில் சென்ற இளைஞரை விரட்டி சென்ற புலி.... நெஞ்சை பதைபதைக்க வைக்கும் அதிர்ச்சி வீடியோ!

இந்தியாவின் தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை இணைக்கும் பகுதியாக மேற்கு தொடர்ச்சி மலை இருக்கின்றது. இந்த மலையின் இயற்கை வளமானது, பல்வேறு உயிரினங்களின் முக்கிய வாழ்வாதரமாக இருந்து வருகின்றது. மேலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின், மழை மற்றும் நீர் வளத்திற்கும் இதுவே காரணமாக இருக்கின்றது.

பைக்கில் சென்ற இளைஞரை விரட்டி சென்ற புலி.... நெஞ்சை பதைபதைக்க வைக்கும் அதிர்ச்சி வீடியோ!

இத்துடன், புலி, சிறுத்தை, யானை, கரடி, செந்நாய், கழுதைப்புலி, காட்டெருமை, மான் உள்ளிட்ட வன விலங்குகளின் வசிப்பிடமாகவும் இது திகழ்கின்றது. அதிலும் மிக முக்கியமாக, இந்த மேற்குத் தொடர்ச்சி மலையானது புலிகளின் முக்கிய வசிப்பிடமாக இருந்து வருகின்றது. அந்தவகையில், இங்கு ஒட்டுமொத்தமாக 74க்கும் மேற்பட்ட புலிகள் இருப்பதாக கூறப்படுகின்றது.

பைக்கில் சென்ற இளைஞரை விரட்டி சென்ற புலி.... நெஞ்சை பதைபதைக்க வைக்கும் அதிர்ச்சி வீடியோ!

ஆகையால், இந்த பகுதியில் அவ்வப்போது புலிகளின் நடமாட்டம் இருப்பதை அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் மலை வாழ்மக்கள் சிலர் கண்டுள்ளனர்.

இந்நிலையில், கேரள மாநிலத்தின் வயநாடு பகுதியில் இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலை பாதையில் சென்றுக் கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டிகளை புலி ஒன்று விரட்டி செல்வதுப் போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த வீடியோவை என்கேடி என்ற யுடியூப் தளம் வெளியிட்டுள்ளது.

பைக்கில் சென்ற இளைஞரை விரட்டி சென்ற புலி.... நெஞ்சை பதைபதைக்க வைக்கும் அதிர்ச்சி வீடியோ!

புலிகள் பெரும்பாலும் அடர்ந்த வனப்பகுதியில் வசிப்பவை. அவை, அதிகபட்சம், இரவு நேரங்களைத் தவிர, பகல் நேரங்களில் சாலையோர பகுதிகளுக்கு வராது. இருப்பினம், சில சமயங்களில் இறையைத் தேடுவதற்காக அவ்வப்போது, காட்டை விட்டு வெளியேறுகின்றன. இத்தகைய சூழலில்தான், இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

பைக்கில் சென்ற இளைஞரை விரட்டி சென்ற புலி.... நெஞ்சை பதைபதைக்க வைக்கும் அதிர்ச்சி வீடியோ!

சம்பவத்தின்போது, இரு இளைஞர்கள் காட்டு வழியாக சென்றுள்ளனர். அதில், பின்பக்கம் அமர்ந்து வந்தவர், அவரது செல்போனில் காட்டைப் படம் பிடித்தவாறு வந்துள்ளார். அப்போது, திடீரென அவர்களுக்கு முன்பாக தோன்றிய புலி ஒன்று இருவரையும் விரட்டிச் செல்ல ஆரம்பித்துள்ளது.

பைக்கில் சென்ற இளைஞரை விரட்டி சென்ற புலி.... நெஞ்சை பதைபதைக்க வைக்கும் அதிர்ச்சி வீடியோ!

அப்போது, பைக்கை அந்த இளைஞர் அதிவேகமாக ஆரம்பித்தார். ஆகையால், இந்த சம்பவத்தில் வாகன ஓட்டிகள் இருவரும் நூலிழையில் உயிர் தப்பித்தனர். இதுகுறித்த காட்சிகளே அதில் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

அந்த வீடியோவில், புலி இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மிக நெருக்கமாக வந்துச் செல்வதை நம்மால் காண முடியகின்றது. இந்த சம்பவானது, அவர்களுக்கு துரதிர்ஷ்டமான நாளாகும், ஆச்சரியமளிக்கும் நாளாகவும் அமைந்துள்ளது. இருசக்கர வாகன ஓட்டி புலி வருவதை உணராமல் இருந்திருந்தால், அவர்கள் இருவரும் பெரும் ஆபத்தைச் சந்தித்திருக்க நேர்ந்திருக்கும்.

பைக்கில் சென்ற இளைஞரை விரட்டி சென்ற புலி.... நெஞ்சை பதைபதைக்க வைக்கும் அதிர்ச்சி வீடியோ!

இதன்காரணமாகவே, வனப்பகுதிக்குள் செல்லும்போது அதிகபட்ச கவனத்தில் செல்ல வேண்டும் என வனத்துறை அதிகாரிகள், வாகன ஓட்டிகளுக்கு அறிவுறை வழங்கி வருகின்றனர். அதிலும், மிக முக்கியமாக இரவு நேர பயணங்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகள், அடர்ந்த வனப்பகுதியை கடக்கும்போது, குறைந்தபட்ச வேகத்துடன் அதிக கவனத்துடன் செல்லும்படி கூறுகின்றனர்.

பைக்கில் சென்ற இளைஞரை விரட்டி சென்ற புலி.... நெஞ்சை பதைபதைக்க வைக்கும் அதிர்ச்சி வீடியோ!

ஏனென்றால், பொதுவாக வன விலங்குகள் இரவு நேரத்தில் காட்டை விட்டு வெளியே வரும் வழக்கம் கொண்டவை. அந்த நேரத்தில், வாகனங்கள் அதி வேகத்தில் சென்றால், பெரும் விபத்துகள் ஏற்படும் என்ற காரணத்தால் இவ்வாறு, வனத்துறை அதிகாரிகள் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

பைக்கில் சென்ற இளைஞரை விரட்டி சென்ற புலி.... நெஞ்சை பதைபதைக்க வைக்கும் அதிர்ச்சி வீடியோ!

அதேசமயம், வாகன ஓட்டிகள் பெரும்பாலும், அடர்ந்த வனப்பகுதியில் செல்லும்போது உச்சபட்ச கவனத்துடன் செல்ல வேண்டும். ஏனென்றால், வன உயிரினங்கள், எப்போது சாலைக்கும் வரும் என்பது யாருக்கும் தெரியாது. அதேபோன்று, சில நேரங்களில் அவை மரம், செடிகளுக்கு இடையே மறைந்திருந்து தாக்கும். ஆகையால், அதிகபட்சம் இரு சக்கர வாகனங்களில் அடர்ந்த வனப்பகுதியில் இரவு நேர பயணம் மேற்கொள்வதைத் தவிர்ப்பது சிறந்தது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Tiger Chasing Bikers: Near Death. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X