மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கூரையில் ஏறி தூக்கம் போட்ட காட்டுப்புலி!
தென் ஆப்ரிக்காவிலுள்ள ஜான் வர்திஸ் புலிகள் சரணாலயம் பிரபல சினிமா தயாரிப்பாளர் ஜான் வர்திஸுக்கு சொந்தமானது. அவர் தனது மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவியில் சரணாலயத்தை வலம் வந்தார். அப்போது, ஒரு இடத்தில் காரை நிறுத்தியிருந்தபோது, அங்கு மெதுவாக வந்த புலி ஒன்று காரின் மீது ஏறி லாவகமாக படுத்துக் கொண்டது.
மேலும், கேரியரில் வைக்கப்பட்டிருந்த டயரை கடித்து குதறியதுடன், அந்த டயரை தலையணை போல வைத்துக் கொண்டு தூங்கி விட்டது. இதனை மற்றொரு காரில் சென்ற ஒருவர் படமாக்கி யூ ட்யூபில் வெளியிட்டுள்ளார்.

புலி தூங்கிவிட்டதை உணர்ந்த ஜான் வர்திஸ் காரை மெதுவாக நகர்த்தி செல்ல முயன்றார். அப்போது, மேடு பள்ளங்களில் கார் சென்றபோது தூக்கம் கலைந்த அந்த புலி காரிலிருந்து குதித்து வெளியேறுகிறது. யூ ட்யூபில் அதிகம் பார்வைகளை பெற்ற அந்த வீடியோ இதோ உங்களுக்காக...
<center><center><center><iframe width="100%" height="450" src="//www.youtube.com/embed/LscN5C44Zqk?rel=0" frameborder="0" allowfullscreen></iframe></center></center></center>


Click it and Unblock the Notifications








