இந்த ஹெல்மெட்ல இவ்வளவு சூப்பரான விஷயங்கள் இருக்குதா? சூப்பரான வீடியோ!
டூவீலரில் ஓட்டும் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதிமுறை இருப்பது நமக்கு தெரியும். இதனால் பல மார்க்கெட்டில் விற்கும் சாதாரண ஹெல்மெட்டை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் பல்வேறு சிறப்பம்சங்களுடன் வடிவமைக்கப்பட்ட ஹெல்மெட்டுகள் பல மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. இதை பயன்படுத்துவதன் மூலம் வாகனம் ஓட்டும் போது நமக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கின்றன.
இப்படியாக டிரிவியா நிறுவனம் BUZZ Noir என்ற ஹெல்மெட்டை விற்பனை செய்து வருகிறது. இது மார்க்கெட்டில் உள்ள சிறந்த ஹெல்மெட்டலில் ஒன்றாக இருக்கிறது. இந்த ஹெல்மட்டை வாங்கி நாங்கள் சோதனை செய்தோம். இந்த ஹெல்மெட்டில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது என்ற விபரங்களை விரிவாக உங்களுக்கு வீடியோவாக வழங்கியுள்ளோம். அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
இந்நிறுவனம் தற்போது மூன்றாம் தலைமுறை ஹெல்மட்டை விற்பனை செய்து வருகிறது. இந்த ஹெல்மெட்டை தான் நாம் வாங்கி பயன்படுத்தி உள்ளோம். இந்த ஹெல்மெட்டின் பின்புறம் தங்க நிற ஸ்பாய்லர்கள் வழங்கப்பட்டுள்ளது. தான் இந்த ஹெல்மெட்டின் மிக முக்கியமான அம்சமாகும். ஏரோடைனமிக்ஸ் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இதை வழங்கியுள்ளார்கள். இதை தங்க நிறத்தில் வழங்கியுள்ளார்கள்.

இந்த ஹெல்மெட் போலார் ஒயிட் நிறத்தில் இருக்கிறது. இரவு நேரத்தில் இதை பார்க்கும் போது மின்னும் வகையில் இது பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இதனால் இரவு நேரத்தில் இந்த ஹெல்மெட்டை அணிந்து செல்லும்போது எதிரில் வரும் வாகன ஓட்டிகளுக்கு இது சிறப்பான விசிபிலிட்டியை கொடுக்கும் இப்படியாக இந்த ஹெல்மெட்டில் ஏகப்பட்ட அம்சங்கள் இருக்கின்றன. இந்த ஹெல்மெட் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








