திஜில் ராவ்... கார் ரேஸில் இந்தியாவின் இளம் நம்பிக்கை நட்சத்திரம்!!

By Saravana Rajan

சர்வதேச கார் பந்தயங்களில் தென் இந்திய வீரர்களின் பங்களிப்பு அபரிதமாக இருந்து வருகிறது. அந்த வகையில், தற்போது இந்திய கார் பந்தய துறையில் பெங்களூரை சேர்ந்த 15 வயதே நிரம்பிய திஜில் ராவ் இளம் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். சென்னையை சேர்ந்த மொமென்டம் மோட்டார்ஸ்போர்ட்ஸ் அணி சார்பில் பங்கேற்று வரும் இந்த இளம் கார் பந்தய வீரர் தொடர்ந்து பல்வேறு நிலைகளில் அசத்தி வருகிறார்.

திஜில் ராவ்... கார் ரேஸில் இந்தியாவின் இளம் நம்பிக்கை நட்சத்திரம்!!

தேசிய ரேஸிங் சாம்பியன்ஷிப் பந்தயத்தில் நான்கு முறை பட்டம் வென்ற தீபக் பால் சின்னப்பா வழிகாட்டுதலுடன் திஜில் ராவ் தேசிய ரேஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்த ஆண்டு சீசனில் களமிறங்கி இருக்கிறார். கடந்த மாதம் 22 முதல் 24 வரை நடந்த முதல் சுற்றில் திஜில் ராவ் அனுபவ வீரர்களுடன் சளைக்காமல் போட்டியிட்டு முதல் பந்தயத்தில் 10வது இடத்தையும், மூன்றாவது பந்தயத்தில் 11வது இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளார்.

டாப்-5 இடத்தை குறிவைத்து இறங்கிய திஜில் ராவுக்கு இரண்டாவது பந்தயத்தில் தொழில்நுட்ப பிரச்னையால் ஏமாற்றமே மிஞ்சியது. எனினும், கோவை கரி மோட்டார் ஸ்பீடுவே பந்தயகளத்தில் ஒரு சுற்றை 1.09 நிமிடங்களில் கடந்து முதல்முறையாக களமிறங்கும் வீரர்களில் அதிவேகத்தில் கடந்த சாதனையை படைத்துள்ளார்.

திஜில் ராவ்... கார் ரேஸில் இந்தியாவின் இளம் நம்பிக்கை நட்சத்திரம்!!

ஃபார்முலா எல்ஜிபி 1300 என்ற என்ற துவக்க நிலை ஃபார்முலா வகை பந்தயங்களில் திஜில் ராவ் களமிறங்கி இருக்கிறார். மாருதி ஸ்விஃப்ட் அடிப்படையிலான இந்த பந்தய கார்களில் மாருதி எஸ்டீம் மற்றும் பழைய மாருதி ஸ்விஃப்ட் கார்களில் பயன்படுத்தப்பட்ட 1.3 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பந்தய கார்களில் எலக்ட்ரானிக் கருவிகளும் மாருதி ஸ்விஃப்ட் காரிலிருந்து பெறப்பட்டு இருக்கிறது. 13 அங்குல எம்ஆர்எஃப் ரேஸிங் ஸ்லிக்ஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கார்கள் மணிக்கு 175 கிமீ வேகம் வரை செல்லும். மிக இளம் வயதில் தேசிய அளவிலான போட்டியில் சாதிக்க துடிக்கும் இந்த இளம் வீரரின் பின்னணி பற்றிய தகவல்கள் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகின்றன.

திஜில் ராவ்... கார் ரேஸில் இந்தியாவின் இளம் நம்பிக்கை நட்சத்திரம்!!

கார் பந்தயத்தில் கலக்கி வரும் திஜில் ராவ் பிறக்கும்போதே கால்களின் பாதங்கள் உட்புறமாக வளைந்த நிலையில் இருந்துள்ளது. மூன்றரை மாத குழந்தையாக இருக்கும்போதே, கால் பாதங்களை சரிசெய்வதற்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருக்கிறது. அதன்பிறகு மூன்று ஆண்டுகளில் அடுத்து ஒரு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மேலும், 4.5 கிலோ எடையுடன் பிறந்த திஜில் ராவ் பல்வேறு உடல் குறைபாடுகளுடன் பிறந்தாலும், தொடர்ந்து விடா முயற்சி காரணமாக பல்வேறு ஆச்சர்யங்களை நிகழ்த்தினார்.

ஆம், கால்களில் குறைபாடு இருந்தாலும், நீச்சல் மற்றும் கூடைப்பந்து உள்ளிட்டவற்றில் கலக்கி வருகிறார். இதுதவிர, ஸ்கேட்டிங் விளையாட்டில் மாநில அளவில் முன்னிலை வகிக்கிறார். அத்துடன் தற்போது கார் பந்தயத்திலும் கலக்கி வருகிறார். மேலும், கார் பந்தயமே நிறைவு தருவதாக அவர் கூறுகிறார். தற்போது மிராம்பிகா ஸ்கூல் ஃபார் நியூ ஏஜ் பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வருகிறார் திஜில் ராவ்.

திஜில் ராவ்... கார் ரேஸில் இந்தியாவின் இளம் நம்பிக்கை நட்சத்திரம்!!

விளையாட்டுப் போட்டிகளில் அதீத ஆர்வம் காட்டும் திஜில் ராவ் 2014ம் ஆணடு பெங்களூரில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவிற்கு சென்றிருக்கிறார். அங்கிருந்த ரேஸ் கார் மாடல்களை பார்த்து கார் பந்தயத்தில் நுழைய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டு இருக்கிறது. இதைத்தொடர்ந்து மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக தற்போதைய ஃபார்முலா ஜிபி2 பந்தய வீரரான அர்ஜுன் மெயினியிடம் பயிற்சி பெற்றிருக்கிறார். அவரது வழிகாட்டுதலின்படி, மிக விரைவாக காரை எவ்வாறு விரைவாக செலுத்துவது என்பதை கற்றுக் கொண்டதுடன், பந்தய களங்களில் சுற்றுகளை மிக விரைவாக கடக்கும் யுக்திகளில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.

திஜில் ராவ்... கார் ரேஸில் இந்தியாவின் இளம் நம்பிக்கை நட்சத்திரம்!!

BPC கோ கார்ட் ரேஸிங் அணியில் சேரும் வாய்ப்பை பெற்ற திஜில் ராவ் அலியிடம் சிறந்த முயற்சியில் பயிற்சி பெற்றிருக்கிறார். அத்துடன், தேசிய அளவிலான கோ கார்ட் ரேஸ்களில் கலந்து கொணம்டிருக்கிறார். கோ கார் பந்தயஙகளில் ஒவ்வொரு போட்டியிலும் மிகச் சிறப்பான முன்னேற்றத்தை தொடர்ந்து பதிவு செய்து ஒட்டுமொத்த அளவில் 7வது இடத்தை பிடித்து அசத்தினார். குறைந்த நேரத்தில் சுற்றுகளை கடந்து முன்னிலை வகித்துள்ளார்.

திஜில் ராவ்... கார் ரேஸில் இந்தியாவின் இளம் நம்பிக்கை நட்சத்திரம்!!

கடந்த ஆண்டு சென்னையை சேர்ந்த மொமென்டம் மோட்டார்ஸ்போர்ட்ஸ் அணியில் சேர்ந்த திஜில் ராவ் முதல் ஃபார்முலா எல்ஜிபி 1300 பிரிவு பயிற்சி சுற்றில் கோவை கரி மோட்டார் ஸ்பீடு வே பந்தய களத்தில் ஒரு சுற்றை 1:15 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்தார். பிற போட்டியாளர்களைவிட 5 வினாடிகள் முன்பே சுற்றை கடந்ததும் சாதனையாக பார்க்கப்படுகிறது.

திஜில் ராவ்... கார் ரேஸில் இந்தியாவின் இளம் நம்பிக்கை நட்சத்திரம்!!

அர்ஜுன் மெய்னி, தீபக் சின்னப்பா உள்ளிட்டோர் கொடுத்த சிறந்த பயிற்சி மற்றும் உத்வேகம் தனக்கு ரேஸ்களில் சாதிக்க துணைபுரிவதாக தெரிவிக்கிறார் திஜில் ராவ். அடுத்த சில ஆண்டுகளில் ஃபார்முலா -2 போட்டிகளில் பங்கேற்கும் முனைப்புடன் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

கார் பந்தயத்தின் மீது திஜில் ராவுக்கு அதீத ஆர்வம் இருப்பதாகவும், ரேஸ் கார் ஓட்டும் பயிற்சிக்கான சிமுலேட்டரில் இருக்கும்போது திஜில் ராவ் மட்டற்ற மகிழ்ச்சி அடைவதாகவும் அவரது பெற்றோர் பெருமிதம் தெரிவிக்கின்றனர். பல்வேறு உடல்நல பிரச்னைகளையும் தாண்டி திஜில் ராவ் சாதித்து வருவது பெரும் மகிழ்ச்சி தருவதாகவும், இது பிற மாற்றுத் திறனாளிகள் மற்றும் உடல்நல குறைபாடு இருப்பவர்களுக்கு ஊக்கத்தை தரும் செய்தியாக இருக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். நடப்பதற்கே பிரச்னைக்குரிய ஒரு சிறுவன் தேசிய ரேஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதே மிக ஆச்சர்யமான விஷயமாகவும் இருக்கிறது.

திஜில் ராவ்... கார் ரேஸில் இந்தியாவின் இளம் நம்பிக்கை நட்சத்திரம்!!

திஜில் ராவுக்கு உடல் நல குறைபாடு பிரச்னைகள் ஒருபுறம் இருந்தாலும், கார் பந்தயங்களில் பங்கேற்பதற்கு பொருளாதார நிலையும் துணை இருக்க வேண்டியது அவசியம். வெளிநாடுகளில் இளம் கார் பந்தய வீரர்களை ஊக்குவிக்கும் விதத்தில் பல்வேறு பொருளாதார உதவிகள் கிடைக்கின்றன. ஆனால், இந்தியாவில் பிரபலமாகும் வரை ஸ்பான்சர் கிடைப்பது மிக கடினமான விஷயமாகவே இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டு பந்தயத்தில் பங்கேற்பது உள்ளிட்ட அனைத்து விஷயங்களுக்கும் திஜில் ராவ் பெற்றோர் பல லட்ச ரூபாயை செலவழித்துள்ளனர்.

திஜில் ராவ்... கார் ரேஸில் இந்தியாவின் இளம் நம்பிக்கை நட்சத்திரம்!!

திஜில் ராவின் பெற்றோரார சுமுகா ராவ் மற்றும் சப்னா ராவ் இதுகுறித்து பல்வேறு நடைமுறை சிக்கல்களையும் டிரைவ்ஸ்பார்க் தளத்துடன் பகிர்ந்து கொண்டனர். ரோட்டெக்ஸ் கோ- கார்ட்டிங் பந்தயங்களில் பங்கேற்பதற்கு ரூ.17 லட்சம் செலவழித்துள்ளதாக சுமுகா ராவ் தெரிவித்தார். அதேபோன்று, மொமென்டம் மோட்டார்ஸ்போர்ட்ஸ் அணியில் சேர்ந்து போட்டிகளில் பங்கேற்பதற்காக ஒவ்வொரு சீசனுக்கு ரூ.8 லட்சம் வரை செலவழிப்பதாக கூறுகிறார். பயிற்சி, பதிவு செய்வது, போக்குவரத்து, உணவு மற்றும் பந்தய கள கட்டணம் உள்ளிட்டவற்றிற்கு இந்த அளவு செலவு செய்ய வேண்டியிருக்கிறது.

திஜில் ராவ்... கார் ரேஸில் இந்தியாவின் இளம் நம்பிக்கை நட்சத்திரம்!!

இது ஒரு பக்கம் என்றால், மோட்டார் பந்தய வீரர்களுக்கு உடல் தகுதி மிக மிக முக்கியம். பயிற்சி மற்றும் போட்டிகள் இல்லாத நேரத்தில் உடல் மற்றும் மன வலிமைக்கான பயிற்சிகளை பெறுவதும் அவசியமாகிறது. அதேபோன்று, உணவுமுறை மற்றும் உணக்கட்டுப்பாடுகளையும் கடைபிடிக்க வேண்டியதும் அவசியமாகிறது.

அடுத்த கட்ட மோட்டார் பந்தயங்களுக்கு செல்லும்போது அங்குள்ள கடினமான சூழல்களை தாக்குப்பிடிக்கும் விதத்தில், திஜில் ராவ் உடல்நிலையையும் கட்டுக்கோப்பாக பேணிகாப்பதும்அவசியம். இதற்கும் கணிசமாக செலவிடும் நிலை உள்ளதாக திஜில் ராவ் பெற்றோர் தெரிவிக்கின்றனர். திஜில் ராவின் தனி உடற்பயிற்சி நிபுணர் ரக்ஷித், திஜிலின் தினசரி உணவு மற்றும் உடல்நலத்தை தினசரி கண்காணித்து பயிற்சி அளித்து வருவதாகவும் அவரது பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

திஜில் ராவ்... கார் ரேஸில் இந்தியாவின் இளம் நம்பிக்கை நட்சத்திரம்!!

இளம் வீரர்களுக்கு ஸ்பான்சர் கிடைப்பதில் பெரும் நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. இதுபோன்ற இளம் வீரர்களுக்கு ஸ்பான்சர் கிடைக்கும் பட்சத்தில், அவர்களது பொருளாதாக பிரச்னை தீர்ந்து, பயிற்சி மற்றும் போட்டிகளில் கூடுதல் கவனம் செலுத்த வாய்ப்பு கிடைக்கும். திஜில் ராவ் போன்ற இளம் வீரர்களுக்கு ஸ்பான்சர் கிடைத்தால் நிச்சயம் அவர்கள் அடுத்த கட்டத்திற்கு செல்லும் வாய்ப்புகளும் பிரகாசமாக உள்ளது.

திஜில் ராவ்... கார் ரேஸில் இந்தியாவின் இளம் நம்பிக்கை நட்சத்திரம்!!

திஜில் ராவ் பயிற்சி பெற்று வரும் சென்னையை சேர்ந்த மொமென்டம் மோட்டார்ஸ்போர்ட்ஸ் அணியை ரஷீத் கான் துவங்கினார். இளம் வீரர்களுக்கான அணியாக செயல்படும் இந்த அணி 2016ம் ஆண்டு தேசிய ரேஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல்முறையாக பங்கேற்றது. இந்த அணியானது ஃபார்முலா எல்ஜிபி 1300 ரூக்கி கிளாஸ் எனப்படும் முதல்முறை களம் காணும் வீரர்களுக்கான பிரிவில் பங்கேற்றதும் குறிப்பிப்பட்டது. 2017ம் ஆண்டு மொமென்டம் மோட்டார்ஸ்போர்ட்ஸ் அணியானது தேசிய ஓபன், ரூக்கி மற்றும் ஸ்டூடன்ட் ஓபன் ஆகிய அனைத்து பிரிவுகளிலும் முதலிடம் பிடித்தது.

திஜில் ராவ்... கார் ரேஸில் இந்தியாவின் இளம் நம்பிக்கை நட்சத்திரம்!!

இந்த அணி சார்பில் தேசிய ரேஸிங் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்றிருக்கும் திஜில் ராவும் எதிர்காலத்தில் மிகச் சிறந்த கார் பந்தய வீரராக ஜொலிப்பார் என்பதுடன், சர்வதேச அளவில் நடைபெறும் கார் பந்தயங்களில் சாதித்து நாட்டிற்கு பெருமை சேர்ப்பார் என்று நம்பலாம்.

Most Read Articles

Tamil
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Tijil Rao, from Bangalore, has become the youngest racer to participate in the MRF MMSC FMSCI Indian National Racing Championship 2018. At just 15, Tijil will be racing for Momentum Motorsports under the guidance of four-time National Racing Champion, Deepak Paul Chinnappa.
Story first published: Friday, July 20, 2018, 11:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more