டிக்-டாக் பிரபலம் அமலா ஷாஜி இந்த காரை வாங்கிட்டாங்களா!.. நடிகையாக ஆகுறதுக்கான அனைத்து தகுதியும் வந்திருச்சு!
சமூக வலைதளங்களில் அதிகம் செல்வாக்குமிக்கவர்களில் ஒருவராக அமலா ஷாஜி அறியப்படுகின்றார். உச்ச நட்சத்திர நடிகர்களைப் போல மிக அதிக ஃபேன்கள் இவருக்கு உள்ளனர். 2கே கிட்ஸான இவருக்கு பல வழிகளில் லட்சக் கணக்கில் பணம் கொட்டிக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்ஸ்டாகிராம், யுட்யூப் என அனைத்திலும் இவர் வருமானம் ஈட்டு வருகின்றார். இதுதவிர, சினிமாவில் குதிப்பதற்கான முயற்சியிலும் அவர் ஈடுபட்டு வருகின்றார். இதற்கான முயற்சிகளில் அவர் சமீப காலமாக மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதன் அடிப்படையிலேயே சமீபத்திய உடை மாற்றும் வீடியோ, மொட்டை மாடி ஃபோட்டோ ஷூட் உள்ளிட்டவற்றை அவர் செய்ததாகக் கூறப்படுகின்றது. எனவே விரைவில் இவர் படங்களில் தன்னுடைய கால் தடத்தைப் பதித்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே அவர் ஓர் எளிமையான காரை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter) காரையே அவர் வாங்கி இருக்கின்றார். இந்தியாவில் தற்போது விலை குறைவாக விற்பனைக்குக் கிடைக்கும் கார் மாடல்களில் எக்ஸ்டர்-ம் ஒன்றாகும். இது ஓர் மைக்ரோ எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். டாடா மோட்டார்ஸின் பட்ஜெட் விலை கார் மாடலான பஞ்ச்-க்கு போட்டியளிக்கும் நோக்கில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டதே இந்த கார் மாடல் என்பது குறிப்பிடத்தகுந்தது.
தற்போது நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் கார் மாடலாக எக்ஸ்டர் மாறி இருக்கின்றது. இந்த நிலையிலேயே அமலா ஷாஜியின் மனதையும் இந்த கார் கவர்ந்திருக்கின்றது என்பது தெரிய வந்திருக்கின்றது. குட்டியான தோற்றம் கொண்ட இந்த எஸ்யூவி கார் மாடலில் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டு விதமான ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
அதேவேளையில், ஹூண்டாய் எக்ஸ்டரை இஎக்ஸ், இஎக்ஸ் (ஓ), எஸ், எஸ் (ஓ), எஸ்எக்ஸ், எஸ்எக்ஸ் (ஓ), எஸ்எக்ஸ் (ஓ) கன்னெக்ட் மற்றும் எஸ் சின்ஜி மற்றும் எஸ்எக்ஸ் சிஎன்ஜி தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில், ஆரம்ப நிலை மாடலான இஎக்ஸ் ரூ. 5.99 லட்சம் என்கிற குறைவான விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.
இது எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. எக்ஸ்டர் ஹூண்டாயின் மற்ற தயாரிப்புகளைக் போலவே அதிக பிரீமியம் அம்சங்கள் நிறைந்ததாகக் காட்சியளிக்கின்றது. அந்தவகையில், 8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர, ஒயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் போன்ற சிறப்பம்சங்களும் எக்ஸ்டர் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதேபோல், இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களும் மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், உயர் வகை பாதுகாப்பை வழங்கும் விதமாக 6 ஏர் பேக்குகள், சிறுவர்களுக்கான ஐசோஃபிக்ஸ் இருக்கை மவுண்ட்டும் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுதவிர, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் (இஎஸ்சி), இரண்டு டேஷ் கேமிராக்கள் மற்றும் ரியர் வியூ கேமிரா போன்ற அட்வான்ஸ்டு அம்சங்களும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஹூண்டாய் எக்ஸ்டரின் வருகை டாடா பஞ்ச் காருக்கு மட்டுமல்ல ரெனால்ட் கைகர், நிஸான் மேக்னைட், சிட்ரோன் சி3 உள்ளிட்டவற்றிற்கும் போட்டியாக அமைந்திருக்கின்றது.
ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் பெட்ரோல் மோட்டார் 19.2 கிமீ முதல் 19.4 கிமீ வரையில் மைலேஜை வழங்கும். அதேவேளையில், இதன் சிஎன்ஜி மோட்டார் ஒரு கிலோவிற்கே 27.1 கிமீ வரையில் மைலேஜ் தரும். இத்தகைய அதிக மைலேஜை வழங்கும் கார் மாடலையே தற்போது டிக்-டாக் புகழ் அமலா ஷாஜி வாங்கி இருக்கின்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இன்ஸ்டா வலைதளத்தில் அதிக ஃபாலோயர்களைக் கொண்ட நபர்களில் ஒருவராக அமலா ஷாஜி இருக்கின்றார். மில்லியன் கணக்கில் அவருக்கு பின் தொடர்பவர்கள் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் எக்ஸ்டர் காரை வாங்கி இருப்பதை முன்னிட்டு ஷாஜிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








