ரயிலில் ஸ்பீடா போகும் போது கிளாஸ் நிறைய தண்ணி வச்சாலும் ஒரு சொட்டு கூட சிந்தாது! வருது புது வந்தே பாரத்
இந்தியாவில் வரும் 2025-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வரவுள்ள நூறு வந்தே பாரத் ரயில்களில் டில்டிங் தொழில்நுட்பம் பொருத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இந்திய ரயில்வே வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு இந்த தொழில்நுட்பத்தை தயார் செய்துள்ளது. டில்டிங் தொழில்நுட்பம் என்றால் என்ன? ஏன் 100 ரயில்களுக்கு மட்டும் இந்த தொழில்நுட்பம் பொருத்தப்படுகிறது? இதனால் என்ன பயன் என்ற விரிவான விபரங்களை எல்லாம் காணலாம் பாருங்கள்.
தற்போது இந்தியா முழுவதும் வரிசையாக வந்தே பாரத ரயில்கள் அறிமுகமாகி கொண்டே இருக்கின்றன. பல முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. வந்தே பாரத் ரயில் சாதாரண ரயிலை விட அதிக வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் அதிக வசதிகள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் இருப்பதால் இந்த ரயில் வெளிநாட்டு புல்லட் ரயில்களுக்கு இணையாக பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு இந்த வந்த ரயில் திட்டத்தை விரிவாக செய்ய வேண்டும் என முடிவெடுத்தபோது மொத்தம் 400 ரயில்களை உருவாக்க வேண்டும் என்ற முடிவை எடுத்தது. அதில் 100 ரயில்கள் தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட வேண்டும் என முடிவெடுத்தது. அது என்ன டில்டிங் தொழில்நுட்பம் என உங்கள் எல்லோருக்கும் ஒரு ஆச்சரியம் ஏற்படலாம் அதைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளும் முன்னர் சில விஷயங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த டேட்டிங் தொழில்நுட்பம் என்பது இந்தியாவிற்கு ஒன்றும் புதுமையான விஷயம் அல்ல. தொழில்நுட்பம் ஏற்கனவே உலகில் 11 நாடுகளில் பயன்பாட்டில் இருக்கிறது. இத்தாலி போர்ச்சுகல், ஸ்லோவேனியா, பின்லாந்து, ரஷ்யா, செக் குடியரசு, லண்டன், ஸ்விட்சர்லாந்து, சீனா, ஜெர்மனி, ரோமானியா, ஆகிய நாடுகளில் இந்த தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ரயில்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன.

இவ்வளவு பெரிய அளவில் பேசப்படும் அளவிற்கு இந்த தொழில்நுட்பம் என்னதான் செய்யும் என முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். தற்போது உள்ள வந்தே பாரத் ரயில் என்னதான் 170 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருந்தாலும் இந்த ரயில் கிளம்பியது முதல் சென்று சேரும் இடம் வரை தொடர்ந்து 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல வாய்ப்பே இல்லை. இதன் அதிகபட்ச வேகம் தான் 160 கிலோமீட்டர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ரயில் மட்டுமல்ல இந்தியாவில் இயங்கி வரும் அத்தனை ரயில்களும் ஒவ்வொரு பகுதியிலும் தண்டவாளங்களின் அமைப்புக்கு ஏற்ப தனது வேகத்தை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். தண்டவாளங்களில் திருப்பம் இருந்தால் ரயில் தனது வேகத்தை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். இது ரயிலை ஓட்டும் ஓட்டுநர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விதி. இதற்கான காரணம் மைய நோக்கு விசை என்ற அறிவியல் தான்.

நாம் கார், பஸ்களில் செல்லும்போது வேகமாக சென்று கார் பஸ் திரும்பும் போது நாம் சீட்டில் அமர்ந்திருந்தால் அது கார்,பஸ் திரும்பும் திசையை நோக்கி நம் உடலை திருப்பும். கார்பஸ் போன்ற சிறிய ரக வாகனங்களில் பெரிய அளவு பிரச்சினையை ஏற்படுத்தாது. ஆனால் ரயில் போன்ற வாகனங்களில் இதனால் ரயில் கவிழ்ந்து விடக்கூட வாய்ப்பிருக்கிறது. இதனால் இப்படியான திருப்பங்கள் இருக்கும் பகுதியில் கவிழாமல் செல்ல வேண்டுமென்றால் அதன் வேகத்தை கட்டுப்படுத்துவார்கள்.
இதனால் பயண நேரம் என்பது அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் இந்த பிரச்சனையை சமாளிக்க தான் பில்டர் ரயில் தொழில்நுட்பத்தை பொருத்துகிறார்கள். அதாவது ரயிலில் பாடிக்கும் ரயிலின் தண்டவாளத்திற்கும் இடையே ஒரு ஸ்ப்ரிங் போன்ற அமைப்பை உருவாக்குகிறார்கள். இதனால் ரயில் என்னதான் வேகமாக வந்து திருப்பங்களை திரும்பினாலும் தண்டவாளத்தை விட்டு ரயிலின் சக்கரங்கள் வெளியே வராது. அதே நேரம் ரயிலுக்குள்ளே இருப்பவர்களுக்கு மைய நோக்கு விசையின் தாக்கம் இருக்காது.
சீட்டில் அமர்ந்திருப்பவர்கள் எந்த பக்கமும் சாய வேண்டிய அவசியம் இருக்காது ரயில் உள்ளே இருக்கும் லக்கேஜ் எல்லாம் பாதுகாப்பாக அப்படியே இருக்கும். இந்த தொழில்நுட்பம் தற்போது இந்தியாவில் இல்லை இதற்காக இந்திய ரயில்வே நிர்வாகம் வெளிநாட்டில் உள்ள சில நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு இந்த தொழில்நுட்பத்தை இந்தியாவில் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயில்களில் புகுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி 100 வந்தே பாரத் ரயில்கள் இந்த தொழில்நுட்பத்துடன் பயன்பாட்டிற்கு வர உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகமாகும் போது அது அதிக வேகத்தில் பயணித்து பயணிகளுக்கான பயண நேரத்தை குறைக்கும் என்ற ரீதியில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இது போன்ற தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக ஏற்படும் காலதாமதத்தை குறைப்பதற்கு இந்த தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் பயன்படும். இது முக்கியமான ரூட்களில் இயங்கும் வந்தே பாரத் ரயில்களில் மட்டும் பொருத்தப்படும் தொழில்நுட்பமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









