2 டன் காரை கட்டி இழுத்த தம்மாத்துண்டு 'எறும்பு' ரோபோக்கள்!

Written By:

மனிதன் செய்யக்கூடிய காரியங்களை, செயற்கை மதிநுட்பத்துடன் செய்யும் ரோபோக்களை உருவாக்கும் முயற்சிகள் பற்றி அனுதினமும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. ஆபத்தான பணிச்சூழல்களிலும், மனிதர்களுக்கு உதவி வேண்டும் இடத்திலும் ரோபோக்களின் பங்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.

இந்தநிலையில், ரோபோ ஆராய்ச்சியில் ஒரு புதிய மைல்கல்லாக, தன்னைவிட 10,000 மடங்கு அதிக எடையுடைய காரை தம்மாத்துண்டு சைஸில் இருக்கும் ரோபோக்கள் இழுத்து சாதனை படைத்துள்ளன. விஞ்ஞானத்தின் உச்சாணி கொம்பை காட்டும் ஒரு கண்டுபிடிப்பாக கருதப்படும் இந்த சிறிய ரோபோக்கள் பற்றிய சுவாரஸ்யங்களை ஸ்லைடரில் காணலாம்.

 அமெரிக்க குழு கண்டுபிடிப்பு

அமெரிக்க குழு கண்டுபிடிப்பு

அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைகழகத்தை சேர்ந்த யுபாட்ஸ் குழுவினர்தான் இந்த எறும்பு ரோபோவை உருவாக்கி அசத்தியிருக்கின்றனர்.

எறும்பை பார்த்து...

எறும்பை பார்த்து...

தன்னை விட பல மடங்கு அதிக எடையுடைய பொருட்களை எறும்புகள் நகர்த்திச் செல்வதை பார்த்து, அதன் ஆராய்ச்சியின் பயனாக இந்த ரோபோவை தயாரித்துள்ளனர். உருவமும் அப்படித்தான் உள்ளது.

நகரும் தன்மை

நகரும் தன்மை

கேக்கே லிசார்டு எனப்படும் பள்ளி வகை உயிரினத்தை போன்று கால்கள் நகரும் வகையில், இந்த ரோபோவை உருவாக்கியிருக்கின்றனர். இதற்காக, இந்த ரோபோக்களுக்கு பசைத் தன்மை கொண்ட கால்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது.

பரிசோதனைகள்

பரிசோதனைகள்

தன் எடையைவிட பன்மடங்கு எடையை இழுக்கும் ரோபோ்க்களை ஸ்டான்ஃபோர்டு பல்கலைகழகத்தின் குழு தொடர்ந்து தயாரித்து, சோதித்து வந்தது. இந்த பல்கலைகழகம் ஏற்கனவே வடிவமைத்த 12 கிராம் எடையுடைய ரோபோ ஒன்று, அதன் எடையைவிட 2,000 மடங்கு கூடுதல் எடையை இழுக்கும் வல்லமை கொண்டதாக இருந்தது. அதாவது, மனிதன் ஒருவன் நீலத் திமிங்கிலத்தை நகர்த்துவதற்கு ஒப்பானது.

புதிய ரோபோக்கள்

புதிய ரோபோக்கள்

தற்போது தயாரிக்கப்பட்டிருக்கும் புதிய எறும்பு ரோபோக்கள் தன் எடையைவிட 10,000 மடங்கு எடையை இழுத்து சாதனை படைத்துள்ளது. அதாவது, 6 ரோபோக்கள் ஒன்றிணைந்து 2 டன் எடையுடைய காரை இழுத்து சாதனை புரிந்துள்ளன.

சைஸு மேட்டரு இல்ல தம்பி...

சைஸு மேட்டரு இல்ல தம்பி...

ஆளை வைத்து எடை போடாதே என்பதை நிரூபிக்கும் வகையில், 2 டன் எடையுடைய காரை இந்த ரோபோக்கள் நகர்த்தியிருப்பது எதிர்கால ரோபோ ஆராய்ச்சியிலும், போக்குவரத்திலும் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

வீடியோ

2 டன் காரை எறும்பு ரோபோக்கள் இழுக்கும் காட்சியை வீடியோவாக காணலாம்.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
uBots from the Stanford university have proved to the world that size does NOT matter. They managed to tow a two ton car using tiny robots that weigh a few grams each. How is that even possible? Let's find out.
Story first published: Thursday, March 17, 2016, 15:48 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark