ரொம்ப ஆபத்தானது... வண்டி ஓட்டும்போது மட்டும் இது வரவே கூடாது.. மீறியும் வந்தா என்ன செய்வது?

வாகனம் ஓட்டும் வரவேக் கூடாத ஒன்றாக உறக்கம் இருக்கின்றது. மதுபோதையில் வாகனத்தை ஓட்டுவதை மிகவும் ஆபத்தானது தூக்க கலக்கத்தில் வாகனத்தை ஓட்டுவது. இதனால்தான் வாகனம் ஓட்டிக் கொண்டிருக்கும்போது தூக்கம் வந்தால், சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு பின்னர் வாகனத்தை இயக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

ஆனால், இங்கு ஒரு சிலர் அதை செய்வதே இல்லை. போகிற அவசரத்தில் நேரமாகிவிடும் என கருதி தூக்க கலக்கத்திலேயே வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். இதனால் ஏற்படும் இழப்பு பல மடங்கு அதிகம். எனவே வாகனம் ஓட்டிக் கொண்டிருக்கையில் தூக்கம் வரும்பட்சத்தில் அந்த பயணத்தை சில மணி நேரங்கள் நிறுத்திவிட்டு, ஓய்வெடுப்பதே நல்லது. இதுதவரி இன்னும் சில வழிகளும் உள்ளன. குறிப்பாக, தூக்கம் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள் சில இருக்கின்றன.

இதுகுறித்த தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதாவது, வாகனம் ஓட்டிக் கொண்டிருக்கும்போது தூக்கம் வந்தால் அதை போக்க என்ன செய்யலாம், தொடர்ச்சியாக விழித்திருக்க வேறு என்ன வழிகள் எல்லாம் இருக்கின்றன என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம். மிக நீண்ட தூர பயணம் போகிறீர்கள் எனில் கட்டாயம் ஓர் நன்கு கார் ஓட்ட தெரிந்த நண்பரை உடன் அழைத்து செல்லுங்கள்.

ஏனெனில் நீண்ட தூர பயணங்களின்போது தூக்கத்தைக் கட்டுப்படுத்துவது இயலாத ஒன்று. கட்டாயம் தூக்கம் வந்துவிடும். இந்த மாதிரியான நேரத்தில் நீங்கள் தொடர்ந்து பயணிக்க விரும்பினால் ஏற்கனவே முழுமையாக ஓய்வெடுத்த நண்பரை அழைத்து கார் ஓட்டுவதை கைமாற்றி விடலாம். பொதுவாகவே நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ளும் சில பயண பிரியர்கள் கையாளும் யுக்தி இதுவாகும். கன ரக வாகன ஓட்டுநர்கள் இந்த யுக்தியைக் கையாண்டே உரிய நேரத்தில் சரக்குகளை உரிய இடத்தில் சென்று சேர்க்கின்றனர்.

ஒரே நாளில் 12 முதல் 15 மணி நேரம் வரை வாகனம் ஓட்டுவது என்பது சற்றே கடினமான ஒன்று. இந்த மாதிரியான அதிக இடைவெளிக் கொண்ட பயணங்களிலேயே ஓட்டுநர்களுக்கு தூக்க கலக்கம் உருவாக வாய்ப்புகள் அதிகம். இதுமாதிரியான நேரங்களில் உங்கள் நன்கு கார் ஓட்ட தெரிந்த நண்பர், உறவினர் அல்லது குடும்ப உறுப்பினரின் உதவியை நாடுவதே மிக சிறந்த யுக்தி ஆகும்.

நல்ல தூங்கிடுங்க:

லாங் டிரைவ் போக போறீங்கனா அதுக்கு முன்னாடியே நல்ல ஓய்வை எடுத்துக்கோங்க. மிக முக்கியமானது, நீண்ட தூர பயணத்திற்கு முன்னர் உடலை மிகவும் வாட்டி வதைத்து கலைப்பாவதைத் தவிர்த்துவிடுங்கள். ஒரு சிலர் பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்வதாகக் கூறி விரைவில் கலைத்துவிடுகின்றனர். இதன் விளைவு காரை எடுத்த சில நிமிடங்களிலேயே அவர்களுக்கு அசதியான உணர்வு ஏற்பட்டு விடுகின்றது. இதன் காரணத்தினாலேயே பயணத்திற்கு முன்னர் நல்ல ஓய்வு அவசியம் என கூறப்படுகின்றது.

ஓய்வெடுக்க சாத்தியமே இல்லை என்றால் குறைந்தபட்சம் வாகனத்தை எடுக்கும் முன் ஓர் குட்டி தூக்கமாவது போட்டுவிடுங்கள். 15 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரையிலான குட்டி தூக்கத்தைப் போட்டுவிடுவது நல்லது. இவ்வாறு செய்த பின்னரும் மெதுவான தூக்க அலைகள் கண்களில் இருக்கும். இருப்பினும், கண் விழிகள் விரைவாக செயல்படும் என 2012 ஆம் ஆண்டில் நடத்திய ஆய்வுகள் சில கூறுகின்றன. ஸ்லீப் அசோசியேஷன் டிரைவிங்கிற்கு முந்தைய தூக்கம் மிக சிறந்த மன நிலைக்கு வழிவகுக்கும் தெரிவித்துள்ளது. எனவே சிறிய தூக்கம் மிக அவசியமானதாக உள்ளது. எழுந்திரிக்க முடியாத தூக்கம் இருக்கின்றது என்றால் அந்த பயணத்தை சில மணி நேரங்களுக்கு தற்காலிகமாக தள்ளி வைப்பதே நல்லது.

இசை:

முன்னதாக பார்த்த எதையும் என்னால் செய்ய முடியவில்லை என கூறக் கூடிய நபர்கள். உங்களை உற்சாகப்படுத்தும் இசைகளை கேட்டவாறு உங்கள் பயணத்தை மேற்கொள்ளலாம். இது உங்களுக்கு ஏற்படும் தூக்க கலக்ககத்தைக் கட்டாயம் குறைக்கும். மேலும், உங்களது மூலையை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கவும் இந்த யுக்தி மிக சிறப்பாகவே செயல்படும். அதேவேலையில், ரொம்ப பிடிக்கும்னு இளையராஜா பாடலை கேட்டுவிட வேண்டாம். அவரோட இசை மனசை லேசாக்கி உங்களுக்கு வர வச்சிடலாம். ஆகையால், நல்ல குத்து பாட்டு, துள்ளல் பாடல்கள் போன்றவற்றை கேட்டவாறு பயணிக்கவும்.

கொஞ்சம் காஃபி:

தூக்கத்தைக் கலைக்க உதவும் மிக சிறந்த கருவியாக காஃபி இருக்கின்றது. இதை கருவி என குறிப்பிட சில காரணங்கள் உள்ளன. இதை பருகுவதனால் தூக்கத்தை உடனுக்குடன் கலைக்க முடியும். மூலையும் உற்சாக செயல்பட தொடங்கும். ஏனெனில் கஃபைன் எனப்படும் ரசாயனம் காஃபி தூள்களில் கலக்கப்படுகின்றது. தூக்கத்தைக் கலைக்கக் கூடிய மிக சிறந்த மூலக் கூறு இதுவாகும். அதேவேளையில் இதனை அதிகளவில் எடுத்துக் கொள்ளக் கூடாது. இது உங்களுக்கு தூக்கமின்மையை ஏற்படுத்திவிடலாம். எனவே தேவையற்ற நேரங்களில் காஃபி பருகுவதை தவிர்த்துவிடுவது நல்லது.

தூக்க கலக்கத்துடன் வாகனத்தை இயக்கும்போது ஏற்படும் ஆபத்துகள்:

மதுபோதையில் வாகனத்தை இயக்குவது எத்தகைய ஆபத்தானதோ அதைப்போல அதிக ஆபத்தானதே தூக்க கலக்கத்தில் வாகனத்தை ஓட்டுவது. இதை சில ஆய்வுகள் ஏற்கனவே உறுதிப்படுத்திவிட்டன. குடிபோதையில் வாகனம் ஓட்டும்போது ஏற்படும் பாதிப்புகளை ஒத்ததாக உறக்கத்தில் வாகனத்தை ஓட்டும்போது ஏற்படும் விபத்துகளும் உள்ளன. மேலும், ஓர் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டும்போது என்ன மாதிரியான சிக்கல்களை எல்லாம் சந்திப்பார்களோ அதே சிக்கல்களையே தூக்க கலக்கத்தில் இருக்கும்போதும் சந்திக்கின்றார்.

இரத்த அழுத்தம், இதயதுடிப்பு வேகம், பார்வை திறன், லைட்டை சரியாக பார்க்க முடியாதது போன்ற பல்வேறு சிக்கல்களை அது ஏற்படுத்தும். இதுபோன்று இன்னும் பல்வேறு சிக்கல்களை தூக்க கலக்கத்தில் இருக்கும்போது நம் உடல் சந்திக்கும். இதனால்தான் வாகனம் ஓட்டும்போது தூக்கம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது. ஒருவேளை உங்களுக்கு வாகனம் ஓட்டும்போதெல்லாம் தூக்கம் வருகிறது என்றால் நீங்கள் சரியான மருத்துவரை அணுக வேண்டும். இதற்கான தீர்வுகளை அங்கிருந்தே உங்களால் பெற முடியும்.

இந்த அறிகுறிகள் எல்லாம் இருந்தா உடனே வண்டிய ஓரங்கட்டிடுங்க:

சில நேரங்களில் மேலே கண்ட யுக்திகள் எதுவும் எடுபடாமல் போகலாம். உங்கள் உடல் முழு சோர்வுடன் இருக்கும் எனில் மேற்கண்ட எதுவும் வேலைக்கே ஆகாது. இதை உறுதிப்படுத்தும் வகையில் உங்கள் சில சமிக்ஞைகளைக் காண்பிக்கும். அவை உங்களுக்கு தென்பட்டால் உடனடியாக வாகனத்தை நிறுத்திவிடுவதே நல்லது.

  • கட்டுப்பாடின்றி கொட்டாவி வருவது
  • சில தூரம் கடந்த பின்னர் அதை எப்போது கடந்தோம் என்கிற நினைவே இல்லாதது
  • சுற்றி நடைபெறுவது மீது கவனம் செலுத்த முடியாமல் போவது
  • கண் இமைகள் வழக்கத்திற்கு மாறாக கனமாக உணர்தல்
  • உங்கள் தலை ஒரு பக்கமாக சாய்ந்து விழுதல்
  • உங்களை அறியாமலே பாதை மாறி மாறி வாகனம் ஓடுவது
  • கடந்து செல்லும் வாகனங்கள் தொடர்ச்சியாக ஹாரனை அடித்த செல்லுதல்

மேற்கண்ட எதை நீங்கள் உணர்ந்தாலும் கட்டாயம், அடுத்த கனமே வாகனம் ஓட்டுவதை நிறுத்திவிடுவது நல்லது. நீங்கள் மிக ஆழமான தூக்க நிலையில் இருக்கின்றீர்கள் என்பதற்கு இதுவே அர்த்தம்.

Most Read Articles
English summary
Tip to stay awake while driving
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X