ரயில்களில் லக்கேஜ்களை கொண்டு போகும்போது இவ்வளவு கவனமா இருக்கனுமா? ஒரு நிமிஷம் அசந்தாலும் அவ்வளவுதான்!
ரயில்களில் லக்கேஜ்களை எப்படிப் பாதுகாப்பாகக் கொண்டு போக வேண்டும் என்ற டிப்ஸ்களை பற்றிக் காணலாம். இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

நாம் எல்லோரும் வாழ்வில் ஒரு முறையேனும் ரயிலில் பயணம் செய்திருப்போம். நீண்ட தூர ரயில் பயணம் என்பதே மிகவும் அலாதியானது தான். ரயில் பயணங்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவம் ஏற்படும். பலருக்கு நல்ல அனுபவங்கள் ஏற்பட்டாலும் சிலருக்குத் திருட்டு, அல்லது அதிக விலைமதிப்புள்ள பொருட்களைத் தொலைத்து விடுதல் உள்ளிட்ட சில மோசமான அனுபவமும் ஏற்படும். அந்த வகையில் இந்த பதிவில் நாம் ரயில்களில் லக்கேஜ்களுடன் செல்லும் போது எப்படிப் பாதுகாப்பாகப் பயணிப்பது என்பதைத் தான் காணப்போகிறோம்.

பொதுவாக நாம் நீண்ட விடுமுறை, அல்லது வேலை தொடர்பாக வெளியூருக்கு ரயிலில் பயணித்தோம் என்றால் நம் அதிகமான லக்கேஜ்களை ரயில்களில் கொண்டு செல்லாவோம். இந்த மாதரியான பயணத்தில் நாம் பெரும்பாலும் ரயில்களில் நாம் கொண்டு செல்லும் லக்கேஜ்களை நம்முடனேயே வைத்துக்கொள்வோம். அப்படியாக வைத்திருக்கும் போது தான் இரவு நேரங்களில் லக்கேஜ்கள் தொலைந்து போவது, அல்லது திருடு போவது போன்ற சம்பவங்கள் ஏற்படலாம்.

லக்கேஜ்களுக்கு பார்சல் புக்கிங்
ரயில்களில் பலர் எவ்வளவு லக்கேஜ்களை வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம் என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் ரயில்களிலும் லக்கேஜ்களை கொண்டு செல்ல சில விதிமுறைகள் இருக்கிறது. ஏசி முதல் வகுப்பில் 70 கிலோ, ஏசி 2ம் வகுப்பில் 50 கிலோ, ஏசி 3ம் வகுப்பில் 40 கிலோ, சிலீப்பர் கிளாஸில் 40 கிலோ 2ம் வகுப்பு பெட்டியில் 35 கிலோ என வரையறையிருக்கிறது. நீங்கள் பயணத்தில் அதிகமான லக்கேஜை கொண்டு செல்கிறீர்கள் அதுவும் பயண நேரத்தில் தேவைப்படாத பொருள் தான் அதில் இருக்கிறது என்றால் அந்த லக்கேஜை எக்ஸ்ட்ரா பணம் கொடுத்து பார்சலில் புக் செய்தால் லக்கேஜ் பாதுகாப்பாக நாம் செல்லும் இடத்திற்கு வரும். இதற்குக் கொஞ்சம் அதிகம் செலவாகும்.

முடிந்தளவுக்கு அதிக எடை
ரயில்களில் சிலீப்பர் கிளாஸிலேயே 40 கிலோ வரை எடை கொண்ட லக்கேஜ்களை கொண்டு செல்லலாம். நீங்கள் முடிந்த வரை லக்கேஜ்களை தனித்தனியாக அதிகமாக பேக்களில் இல்லாமல் ஒரே பேக்கில் வைத்தால் எடை அதிகமாக இருக்கும். அதைத் திருடர்கள் தனியாகத் தூக்கிச் செல்வது கடினம். இதனால் பாதுகாப்பாக லக்கேஜ் உங்களுடன் பயணிக்கும் திருட்டு பயமும் இருக்காது. நீங்களும் ஒரே லக்கேஜை பாதுகப்பாது எளிது.

லேபிள் முக்கியம்
ரயில்வேயில் பொதுவாக லக்கேஜ்கள் திருடப்படுவதை விட அதிகம் தொலைந்து தான் போகிறது. இதனால் நாம் முக்கியமாக ரயில் பயணத்தைத் துவங்கும் முன்பு நாம் எடுத்துச் செல்லும் எல்லா லக்கேஜ்ஜிலும் நமது பெயர், விலாசம் மற்றும் தொடர்பு எண்களை எழுதி வைக்க வேண்டும் ஒருவேலைத் தொலைந்து போனாலும், அல்லது நாமே மிஸ் செய்துவிட்டால் யாராவது கண்டெடுத்து போலீசில் ஒப்படைத்தால் அவர்கள் நம்மைத் தொடர்பு கொண்டு நம் பொருளை நம்மிடம் ஒப்படைக்க வசதியாக இருக்கும்.

லக்கேஜ்களுக்கு லாக்
நீங்கள் சூட்கேன் பேக் போன்ற லக்கேஜ்களை கொண்டு செல்லும் போது அதைக் கட்டாயம் சிறிய பூட்டுப்போட்டு யாரும் திறக்க முடியாதபடி பூட்டிக்கொள்ளுங்கள் இதனால் இரவில் சில திருடர்கள் நைசாக லக்கேஜை திறந்து உள்ளே இருக்கும் பொருட்களை மட்டும் திருடிச்செல்வதைத் தவிர்க்க முடியும். இது மட்டுமல்ல உங்கள் லக்கேட்ஜ்களுக்கு ஒரு செயின் போட்டு அதை உங்கள் சீட்டிலேயே கட்டி வைத்த பூட்டுப்போட்டு சாவியை நீங்கள் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள் இதனால் நீங்கள் தூங்கிக்கொண்டிருக்கும் போது திருடர்கள் உங்கள் லக்கேஜ்களை திருட முயன்றாலும் தப்பித்துக்கொள்ளலாம்.

செல்போன், பர்ஸ், லேப்டாப்கள்
ரயில்களில் பலருக்கு இரவில் தூங்கும் போது செல்போனை பார்த்துவிட்டு பின்னர் தூங்குவது வழக்கமாகிவிட்டது. அப்படித் தூங்கும்போது பலர் தாங்கள் தூங்குவதற்கு அருகிலேயே செல்போன் அல்லது லேப்டாப்களை வைத்து விட்டுத் தூங்குகின்றனர். இது திருடர்களுக்கு பெரும் வசதியாகிப் போய்விடுகிறது. எளிதாக திருட்டைவிட்டுச் சென்றுவிடுகின்றனர். ரயிலில் தூங்கும் முன்பு செல்போன் லேப்டாப் உள்ளிட்ட பொருட்களைப் பத்திரமாக வைத்துவிட்டு பின்னர் தூங்க வேண்டும். முடிந்தால் செல்போனை கழுத்தில் மாட்டும் ரோப் வாங்கி அதில் மாட்டிக்கொள்ள வேண்டும்.

கவனக்குறைவைத் தவிர்க்கவும்
சிலர் ரயில்களில் செல்லும் போது தனியாகச் சென்றால் தான் கொண்டு வந்த லேப்டாப்களை பயன்படுத்தும்போது அவர்களுக்குக் கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படும் அப்பொழுது அருகில் இருப்பவரிடம் தன் பொருட்களைப் பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டுச் சென்றுவிடுவார். திரும்பி வந்து பார்க்கும் போது அருகிலிருந்தவரும் இருக்கமாட்டார் அவர் கொண்டு வந்த பொருளும் இருக்காது. அதனால் நீங்கள் தனியாகப் பயணிக்கும்போது கவனமாக இருங்கள் உங்களுக்கு முன்பின் தெரியாத யாரையும் நம்ப வேண்டாம்.


Click it and Unblock the Notifications