உங்கள் காரை குறைந்த செலவில் சுத்தம் செய்வது எப்படி? சுறுக் நறுக் டிப்ஸ்கள்

கார் வைத்திருப்பவர்கள் தங்கள் காரை எப்படி குறைந்த செலவில் எளிமையாக சுத்தம் செய்யலம் என்ற டிப்ஸை இந்த செய்தியில் வழங்கியுள்ளோம். உங்கள் காரை எப்படி எளிமையாகவும் குறைந்த செலவிலும் சுத்தம் செய்யலாம் என இங்கு பார்ப்போம்.

உங்கள் காரை குறைந்த செலவில் சுத்தம் செய்வது எப்படி? சுறுக் நறுக் டிப்ஸ்கள்

கார் வைத்திருப்பவர்களுக்கு மிகவும் எரிச்சலை தரும் வேலை காரை சுத்தம் செய்வது. பலர் காரை சுத்தம் செய்ய அதிக பொருட்கள் வாங்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே காரை சுத்தம் செய்வதை தள்ளிப்போட்டு கொண்டே போவது வழக்கம்.

உங்கள் காரை குறைந்த செலவில் சுத்தம் செய்வது எப்படி? சுறுக் நறுக் டிப்ஸ்கள்

காரை குறிப்பட்ட பயன்பாட்டிற்கு ஒரு முறை சுத்தம் செய்யவில்லை என்றால் காரின் லுக்கில் மாற்றம் ஏற்பட துவங்கிவிடும் காரை சுத்தம் செய்வது என்பது மிக முக்கியமான வேலை. இது உங்கள் காரின் வாழ்நாளை அதிகரிக்கும் வாய்பை கூட தரும்.

உங்கள் காரை குறைந்த செலவில் சுத்தம் செய்வது எப்படி? சுறுக் நறுக் டிப்ஸ்கள்

இந்த செய்தியில் காரை அதிகம் செலவு இல்லாமல் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே எப்படி சுத்தம் செய்வது, எப்படி சுத்தமாக பராமரிப்பது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

உங்கள் காரை குறைந்த செலவில் சுத்தம் செய்வது எப்படி? சுறுக் நறுக் டிப்ஸ்கள்

காரின் வெளிப்புறத்தை சுத்தம் செய்வது.

ஹேர் கண்டிஷனர்: காரை சுத்தம் செய்ய அதிக கார தன்மையுள்ள சோப்பு மற்றும் லிக்யூட்களை பயன்படுத்தகூடாது. அதற்கு பதிலாக காரில் நீங்கள் வீட்டில் பயன்படுத்தும் ஹேர் கண்டிஷனரை தண்ணீருடன் கலந்து பயன்படுத்தலாம். இது காரை வேக்ஸ் செய்தது போல செயல்படும்.

உங்கள் காரை குறைந்த செலவில் சுத்தம் செய்வது எப்படி? சுறுக் நறுக் டிப்ஸ்கள்

கிளாஸ் கிளினர் : வீட்டில் நீங்கள் கண்ணாடிகளை துடைக்கபயன்படும் லக்யூடை கொண்டு காரின் கதவில் உள்ள கண்ணாடி மற்றும் ஹெட்லைட் கண்ணாடிகளை சுத்தம் செய்யலாம். அதன் பின் அதை துடைத்து விட்டு மீண்டும் ஹேர் கண்டிஷனர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இதை துடைக்கம் போது மெதுவான துணிகள் கொண்டு துடைக்க வேண்டும்.

உங்கள் காரை குறைந்த செலவில் சுத்தம் செய்வது எப்படி? சுறுக் நறுக் டிப்ஸ்கள்

அமோனியா: காரின் வைப்பர் பிளேடுகள், கதவு ஜன்னல் கண்ணாடிகள், விண்டு ஷீல்டு ஆகியவற்றை அமோனியா மற்றும் தண்ணீரை 1:4 என்ற கணக்கில் கலந்து அதை வைத்து சுத்தம் சயய்ய வேண்டும். அமோனியா அதிக நச்சு தன்மை வாய்ந்தது. அதனால் அதை குழந்தைகளிடம் இருந்து தூரமாக வைத்திருங்கள்.

உங்கள் காரை குறைந்த செலவில் சுத்தம் செய்வது எப்படி? சுறுக் நறுக் டிப்ஸ்கள்

வோட்கா: காரின் விண்டு ஷீல்டுகளை காரின் பயணத்தின்போதே சுத்தம் செய்யும் தண்ணீரை நிரப்பும் டேங்கில் 3 கப் வோட்கா, 4 கப் தண்ணீர் மற்றும் 2 ஸ்பூன் சோப் ஆயில் கொண்டு நிரப்புங்கள். இந்த கலவை ஒவ்வொரு முறை நீங்கள் சுத்தம் செய்யும் போதும். உங்களுக்கு நல்ல ரிசல்டை தரும்.

உங்கள் காரை குறைந்த செலவில் சுத்தம் செய்வது எப்படி? சுறுக் நறுக் டிப்ஸ்கள்

கோலா : காரின் கண்ணாடி உள்ள பகுதிகளில் சுத்தம் செய்தும் சில கரைகள் படிந்திருந்தால் அதன் மீது நீங்கள் கோலா அல்லது சோடா ஊற்றி சுத்தம் செய்தால் அந்த கரை நீங்கும். ஆனால் கோலா அல்லது சேடாவை ஊற்றி சுத்தம் செய்த பின் தண்ணீரை கொண்டு மீண்டும் அந்த இடத்தை துடைத்து விடுங்கள்.

உங்கள் காரை குறைந்த செலவில் சுத்தம் செய்வது எப்படி? சுறுக் நறுக் டிப்ஸ்கள்

சேனிட்டரி பேட்: காரின் முகப்பு கண்ணாடியை துடைக்க அதிக விலையுள்ள ஸ்பாஞ்ச், டவல்களை பயன்படுத்துவதை விட சேனிட்டரி நாப்கின்னை பயன்படுத்தலாம். அந்த பேடில் இருக்கும் ஜெல் போன்ற திரவம் கண்ணாடியை சுத்தம் செய்யும் லிக்யூடாக பயன்படும்.

உங்கள் காரை குறைந்த செலவில் சுத்தம் செய்வது எப்படி? சுறுக் நறுக் டிப்ஸ்கள்

மண்ணெண்னை: காரை நீங்கள் சுத்தம் செய்து முடிந்த பின்பு காரின் பளபளப்பை மேலும் அதிகரிக்க தண்ணீருடன் சிறிது மண்ணெண்னை கலந்து. அந்த நீரால் ஸ்பாஞ்ச் மூலம் காரை துடைத்தால் காரை வேக்ஸ் செய்தது போன்ற ஒரு தோற்றத்தை தரும், பளபளப்பு பல மடங்கு அதிகரிக்கும்.

உங்கள் காரை குறைந்த செலவில் சுத்தம் செய்வது எப்படி? சுறுக் நறுக் டிப்ஸ்கள்

காரின் உட்புறத்தை சுத்தம் செய்வது

டூத் பேஸ்ட்: காரில் உட்புறம் சீட் உள்ளிட்ட லெதர் பகுதிகளில் உள்ள கரைகளை டூத் பேஸ்ட்களை கொண்டு அகற்றலாம். அதை பயன்படுத்துவதற்கு முன்பு முதலில் சீட்டில் சிறிய இடத்தில் பயன்படுத்தி இது சரியாக வேலை செய்கிறதா என்பதை செக் செய்யவும், எல்லா டூத் பேஸ்ட்களும் லெதரில் உள்ள கரைகளை அகற்றுவதில்லை.

உங்கள் காரை குறைந்த செலவில் சுத்தம் செய்வது எப்படி? சுறுக் நறுக் டிப்ஸ்கள்

பேக்கிங் சோடா: காரில் உள்ளே அதிக துர்நாற்றம் இருந்தால் பேக்கிங் சோடாவை காரில் உள்ள சீட் மற்றும் கால் வைக்கும் பகுதிகளில் தூவி விட வேண்டும் சில மணி நேரம் கழித்தோ அல்லது இரவு முழுவதும் அதை அப்படியே விட்டுவிட்டு அதை வேக்கம் கிளீனர் கொண்டு சுத்தம் செய்தால் காரில் உள்ள துர்நாற்றங்கள் வெளியேறும்.

உங்கள் காரை குறைந்த செலவில் சுத்தம் செய்வது எப்படி? சுறுக் நறுக் டிப்ஸ்கள்

துணிகளில் உள்ள கரைகள்: உங்கள் காரில் லெதர் சீட் இல்லாமல் துணியால் ஆன சீட் இருந்தால் அதில் உள்ள கரைகளை அகற்ற வினிகரை பயன்படுத்தலாம். வினிகரையும் தண்ணீரையும் சம அளவு கலந்து அதை சீட்டில் உள்ள துணியின் மேல் ஸ்பிரே செய்யுங்கள் சுமார் சில நிமிடங்கள் ஊறிய பிறகு ஈர துணியால் அதை சுத்தம் செய்யுங்கள் துணிகளில் படிந்த கரை ஈசியாக அகலும்.

உங்கள் காரை குறைந்த செலவில் சுத்தம் செய்வது எப்படி? சுறுக் நறுக் டிப்ஸ்கள்

கிளினிங் டிப்ஸ்

மேலே உள்ளபடி நீங்கள் காரை சுத்தம் செய்தால் அதிக செலவு இல்லாமல் காரை ஈசியாக சுத்தம் செய்யலாம். பொதுவாக காரை சுத்தம் செய்யும் போது நேரடியாக சூரிய வெளிச்சத்தில் வைத்தோ அதிகம் சூடாக இருக்கும் நேரத்திலோ சுத்தம் செய்யாதீர்கள். குளிர்ந்த நீரை கொண்டு காரின் வெளிப்பகுதி சூடாக இருக்கும் போது சுத்தம் செய்தால் நல்ல ரிசல்டை தராது.

உங்கள் காரை குறைந்த செலவில் சுத்தம் செய்வது எப்படி? சுறுக் நறுக் டிப்ஸ்கள்

காலை அல்லது மாலை நேரங்களில் காரை சுத்தம் செய்யலாம். அது நல்ல ரிசல்டை தரும். அதே போல் தண்ணீரால் சுத்தம் செய்ததும். காரில் படிந்துள்ள தண்ணீரை ஒரு துணியை கொண்டு துடைத்து விடுங்கள் காரில் படிந்துள்ள தண்ணீர் காற்றில் காய்ந்தால் அதன் கரை தெரிந்துவிடும். பின்னர் நீங்கள் காரை சுத்தம் செய்து பயனே இல்லாமல் போய்விடும்.

Most Read Articles

English summary
How To Clean Your Car With Household Items. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X