பனிமூட்டத்தால் ஏற்பட்ட விபத்தில் 13 உசுரு போயிருச்சு.. நீங்களாவது இத தெரிஞ்சு வச்சுக்கோங்க!

கர்நாடாகவின் சிக்கல்பூர் ஏற்பட்ட மிக மோசமான விபத்தில் 13 பேர் வரை இறந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கொடுமையான விபத்திற்கு அடர் பனியே காரணம் என கூறப்படுகின்றது.

இந்த விபத்து சம்பவம் குறித்த கூடுதல் தகவலையும், பனி நேரத்தில் பாதுகாப்பாக பயணிப்பதற்கான வழிக்காட்டுதல்களைதான் இந்த பதிவில் பார்க்க உள்ளோம். இந்த விபத்து சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கும் வகையில் அரங்கேறி இருக்கின்றது என்று கூறலாம். கர்நாடகாவின் சிக்கல்பூரில் மிக மோசமான வாகன விபத்து அரங்கேறி இருக்கின்றது.

Tips to drive through fog time

இந்த விபத்தில் குறைந்தபட்சம் 13 உயிர்களாவது பலியாகி இருக்கும் என அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இத்தனை உயிர்கள் பலியாவதற்கு முக்கிய காரணமாக பனி மூட்டம் கூறப்படுகின்றது. கடுமையான பனி காரணமாக சாலையை பார்ப்பதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கின்றது. இந்த நிலையிலேயே, இந்த விபத்து அரங்கேறி இருக்கின்றது.

சம்பவ இடத்திலேயே 12 பேர் உயிரிழந்ததாகவும், ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தநிலையில் உயிரிழந்து இருக்கின்றனர். சாலையோரத்தில் நின்றுக் கொண்டிருந்த டேங்கர் மீது மோதியதன் விளைவாகவே இத்தனை உயிர்களும் பலியாகி இருக்கின்றன. சுமார் 7 மணி அளவில் இந்த விபத்து அரங்கேறியதாகக் கூறப்படுகின்றது.

Karnataka chikkaballapur road accident

ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலை 44இல் பெங்களூரு சென்றுக் கொண்டிருந்த போதே இந்த விபத்து அரங்கேறி இருக்கின்றது. கர்நாடகாவின் பெரும்பாலான மாவட்டத்தில் காலை மூடுபனி கடுமையாகக் காணப்படுகின்றது. இந்த நிலை வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

பலர் இதன் காரணத்தினாலேயே தங்களின் விடியற் காலை பயணத்தை தவிர்த்திருப்பதாகக் கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே ஒட்டுமொத்த நாட்டையே உறைய வைக்கும் வகையில் இந்த கார் விபத்து சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலில் விபத்தை தவிர்க்க சில வழிகள் உள்ளன.

Vehicle in fog

மிக முக்கியமான ஒன்று கடுமையான பனி பொழிவு அல்லது பனி மூட்டத்தின்போது பயணங்களை தவிர்ப்பதே மிக மிக சிறந்த வழியாகும். பனி விளகிய பின்னர் உங்களது பயணத்தைத் தொடங்கலாம். என்னதான் பாதுகாப்பு வழிக் காட்டுதல்களைக் கடைப்பிடித்தாலும், ஆபத்தான சூழலை உருவாக்கக் கூடியதாக கடுமையான பனி மூட்டம் இருக்கின்றது.

ஒருவேளை உங்களுடைய பயணம் தவிர்க்க முடியாதது என்றால், அந்த பயணத்தின்போது பனி மின் விளக்கைப் பயன்படுத்தலாம், அல்லது, மிக மிக குறைவான வேகத்தில் உங்கள் பயணத்தை மேற்கொள்ளலாம். இது ஆபத்தான சூழலை சமாளிக்க பெரும் உதவியாக இருக்கும். இதேபோல், லேன்களை அடிக்கடி மாற்றக் கூடாது.

மேலும், ஓவர் டேக்கிங் கூடவே கூடாது. இதுதவிர, லோ பீமை பயன்படுத்துவது, ரோடு சைடு ஃப்ளிங்கர்களை ஃபாலோ செய்வது, போதுமான இடைவெளி உடன் பயணிப்பது மற்றும் விண்ட் ஸ்கிரீன்களை தூய்மையாக வைத்திருப்பது என அனைத்தையும் கடைபிடித்தல் வேண்டும். இவற்றின் வாயிலாக பெருமளவில் பனிமூட்டத்தால் ஏற்படும் விபத்துகளை நம்மால் தவிர்த்துவிட முடியும்.

இதுமட்டுமின்றி வாகனத்தில் லைட்டுகள் அனைத்தும் வேலை செய்யும் நிலையில் உள்ளதா என்பதை பயணத்திற்கு முன்னரே செக் செய்துக் கொள்ள வேண்டும். இத்துடன், அவசர கால லைட்டுகளை ஒளிர விட்ட வண்ணம் பயணிக்க வேண்டும். இது சாலையில் உங்களது இருப்பை தெரியப்படுத்த உதவும்.

இதுமட்டுமில்லைங்க, உடனடி நிறுத்தம், டிரிங்க் அன்ட் டிரைவ் மற்றும் நடு ரோட்டில் வாகனங்களை நிறுத்துவது போன்ற செயல்களை முற்றிலுமாக தவிர்த்துவிட வேண்டும். இதனால்தான் பெரும்பாலான விபத்துகள் நாட்டில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. ஆகையால், அதிக அக்கறை மற்றும் கவனத்துடன் இந்த சமயங்களில் பயணிக்க வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விபத்துகள் நாளுக்கு அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. இந்தியா விபத்துகளை தவிர்க்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும், விபத்தின் எண்ணிக்கைக் குறைந்ததாக தெரியவில்லை. இந்த மாதிரியான சூழலிலேயே இந்த கொடுமையான விபத்து சம்பவம் நாட்டில் அரங்கேறி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, October 26, 2023, 14:41 [IST]
English summary
Tips to drive through fog
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X