இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. விமானத்தில் எக்கசக்க லக்கேஜை கொண்டு செல்ல முடியும்...
விமானத்தில் பயணிக்கும் போது அதிகமான லக்கேஜ்களை எப்படி எடுத்து செல்லலாம் என சில டிப்ஸ்களை இங்கே வழங்கியுள்ளோம். இது குறித்த முழு விபரங்களை காணலாம்.

விமானத்தில் பயணம் செய்வது என்றால் யாருக்குத் தான் பிடிக்காது. ஒருவர் விமான பயணம் செல்லவேண்டும் என்றால் எந்த அளவுக்கு சௌகரியமும், புதிய அனுபவமும் கிடைக்குமோ, அதே அளவிற்கு விமான பயணத்தில் பல சிக்கல்களும் இருக்கிறது. இதில் முக்கியமான ஒன்று விமானத்தில் லக்கேஜ்களை எடுத்துச் செல்வது,ஒருவர் விமானத்தில் பயணிக்கிறார் என்றால் நிச்சயம் நீண்ட தொலைவு கொண்ட பகுதிக்குத் தான் பயணிப்பார்.

அப்படியாக அவர் நீண்ட தூரம் செல்ல வேண்டும் என்றால் அவருக்கு நிச்சயம் அதிகம் லக்கேஜ்களை எடுத்துச் செல்ல வேண்டியது இருக்கும். அவருக்கான ஆடைகள், செல்ல வேண்டிய இடத்திற்குக் கொண்டு செல்ல வேண்டிய பொருட்கள் என எல்லாம் அதிகமாகவே இருக்கும். ரயிலில் பயணிக்கும் போது ஒருவர் அதிகமான லக்கேஜ்களை எடுத்துக்கொண்டு பயணிக்க முடியும். ரயிலுக்கும் பயண லக்கேஜ்ஜிற்காக கட்டுப்பாடுகள் இருந்தாலும் அது பெரிய அளவில் சோதனை செய்யப்படுவதில்லை.

ஆனால் விமானங்களில் அப்படியல்ல விமான பயணத்தில் ஒரு பயணிக்கு எவ்வளவு எடை அனுமதிக்கப்படுகிறதோ அதற்குக் கூட 100 கிராம் கூட இருக்கக் கூடாது என அந்த விமான நிறுவனம் சொல்லுகிறது. இதனால் விமான பயணத்தின் போது பயணிகளுக்கு ஏற்பாடும் பெரும் தலைவலியே லக்கேஜ் தான், ஒரு பேக் இவ்வளவு எடை தான் இருக்க வேண்டும் என கராராக இருக்கின்றனர். அதிகமான எடை இருந்தால் அந்த எடைக்கு அதிகமாகப் பணம் செலுத்த வேண்டியது இருக்கும்.

இதனால் இந்த பதிவில் நாம் விமான பயணத்தின் போது எப்படி லக்கேஜ்களை எடுத்துச் செல்ல வேண்டும் முடிந்த அளவிற்கு அதிக பொருட்களை எப்படியெல்லாம் எடுத்துச் செல்லலாம் என இங்கே வழங்கியுள்ளோம். இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

முன்கூட்டிய பணம்
ஒரு வேளை நீங்கள் விமான பயணம் செய்யும் போது உங்களுக்கு வழங்கப்பட்ட லக்கேஜின் எடையை விட அதிக எடை கொண்ட லக்கேஜை நீங்கள் எடுத்துச் செல்ல விரும்பினால் நீங்கள் அந்த எடைக்கான பணத்தையும் செலுத்தத் தயாராக இருந்தால் அந்த எடைக்கான பணத்தை முன்கூட்டியே ஆன்லைன் மூலம் செலுத்திவிடுவது சிறந்தது. இதனால் பயணத்தின் போது தேவையில்லாத சிக்கல் வருவதைத் தவிர்க்க முடியும். சில நேரங்களில் விமான நிறுவனங்கள் போதுமான இட வசதியில்லை என்றால் அதிகமான லக்கேஜை ஏற்ற மறுத்துவிடும், அல்லது அதிகமாகக் கட்டணம் வசூலிக்கும். இதனால் முன் கூட்டிய பணம் கட்டுவது தான் சிறந்த ஐடியா

எடை சோதனை
நீங்கள் விமான நிலையத்திற்குச் செல்லும் முன்பே நீங்கள் இருக்கும் இடத்திற்கு அருகே உள்ள கடைகளிலோ அல்லது எங்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கே உங்கள் லாக்கேஜின் எடையைப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இதனால் எந்த பொருளை எடுத்துச் செல்லலாம் எதை விட்டுச் செல்லலாம் என நீங்கள் நிதானமாக யோசிக்க நேரம் கிடைக்கும். விமான நிலையத்திற்குள் சென்றதும் நீங்கள் சோதித்தால் பின்னர் அவசர அவசரமாக பேக்கை திறந்து சில பொருட்களை வெளியே வீச வேண்டியது இருக்கும். முன்னரே சோதித்தால் அதை பார்சல் மூலம் அனுப்ப ஏற்பாடு செய்துவிடலாம். மார்கெட்டில் குறைந்த விலையில் எடையை அளக்கும் கருவிகள் இருக்கிறது அதையும் வாங்கி பயன்படுத்தலாம்.

லக்கேஜை பகிருங்கள்
ஒருவேளை நீங்கள் ஒரு குழுவாகவோ குடும்பமாகவோ செல்கிறீர்கள் என்றால் விமான நிறுவனங்களைப் பொருத்தவரை ஒருவருக்கு இவ்வளவு லக்கேஜ் என்ற கணக்கு தான் இருக்கும். ஆனால் நீங்கள் குழுவாகச் செல்லும் போது மற்றவர்கள் லக்கேஜில் எடை குறைவாகவும், உங்கள் லக்கேஜில் எடை அதிகமாகவும் இருந்தால் நீங்கள் அதிகமாக உள்ள லக்கேஜை உங்களுக்கு நம்பிக்கையான நபரின் லக்கேஜ் உடன் பகிரலாம். இதனால் நீங்கள் தேவையில்லாமல் அதிகமான பணம் செலுத்த வேண்டிய தேவையிருக்காது.

குறைந்த எடை பேக்
நீங்கள் லக்கேஜ்களை எடுத்துச் செல்ல பயன்படுத்தும் பேக்கின் எடையும் மொத்த எடையுடன் தான் கணக்கிடப்படும். இதனால் நீங்கள் அதிக எடை கொண்ட பேக்கில் உங்கள் லக்கேஜை வைத்துவிட்டால் அந்த பேக்கின் எடை நீங்கள் எடுத்துச் செல்ல நினைக்கும் பொருட்களின் அளவை குறைக்கக் கூடும். இதனால் நீங்கள் விமான பயணத்திற்காக லக்கேஜை எடுத்துச் செல்லும் பேக்கை தேர்வு செய்யும் போது குறைந்த எடை பேக்கை பயன்படுத்துங்கள். இதனால் நீங்கள் எளிமையாக அதிகமான பொருட்களை எடுத்துச் செல்ல முடியும்.

ஹேண்ட் லக்கேஜ்
வழக்கமாக விமான நிறுவனங்கள் இரண்டு விதமாக லக்கேஜ்களை பிரிக்கின்றனர். ஒன்று வழக்கமான லக்கேஜ் மற்றொன்று கையில் வைத்துக்கொள்ளும் ஹேண்ட் லக்கேஜ், என இரண்டு விதமான லக்கேஜ்கள் இருக்கிறது. இரண்டிற்கும் தனித்தனியாக அதிகபட்ச எடை அளவு இருக்கிறது. இந்நிலையில் ஒருவேளை உங்கள் ஹேண்ட் லக்கேஜில் குறைவாக எடை இருந்து, பேக்கேஜ் லக்கேஜில் அதிக எடை இருந்தால் பேக்கேஜ் லக்கேஜில் உள்ள சில பொருட்களை நீங்கள் ஹேண்ட் லக்கிற்கு மாற்றிக்கொள்ளுங்கள். பலர் இந்த விஷயத்தை மறந்துவிடுவார்கள்.

இப்படியாக விமான பயணம் செய்பவர்களுக்கு ஒரு முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. நீங்கள் விமான டிக்கெட் எடுத்தவுடன் அதில் லக்கேஜ் எவ்வளவு எடுத்துச் செல்லலாம் என்பதை செக் செய்து கொள்ளுங்கள். ஒவ்வொரு விமான நிறுவனமும் ஒவ்வொரு விதமாக லாக்கேஜ் அளவுகளை வைத்திருக்கிறது. நீங்கள் இதற்கு முன்பு வேறு நிறுவன விமானத்தில் பயணம் செய்த அனுபவத்தில் அதே அளவு லக்கேஜை இந்த விமான நிறுவனத்திலும் இருக்கும் என டிக்கெட்டை செக் செய்யாமல் கொண்டு செல்ல வேண்டாம். பின்னர் சிக்கலாகிவிடும். இதைப் பின்பற்றினால் நீங்கள் இலவசமாகவே அதிக எடை மற்றும் பொருட்களை விமானத்தில் லக்கேஜாக கொண்டு செல்ல முடியும்.


Click it and Unblock the Notifications








