இதுக்கு அப்புறம் ஸ்கூட்டர் பிஸ்னஸ் ஓஹோனு போகும்! பெட்ரோல் போட தேவையில்ல, மொத்தமும் எலக்ட்ரிக்!

இந்தியாவில் மட்டுமின்றி, உலகிலேயே அதிக நன்கொடைகள் குவியும் மத தளங்களில் முக்கியமானது, திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோவில் ஆகும். ஆந்திரா மற்றும் தமிழ்நாடு எல்லையில் கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரில் பிரம்மாண்டமாக அமைந்துள்ள இந்த பெருமாள் கோவிலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் (Tirumala Tirupati Devasthanams) என்கிற அமைப்பு நிர்வகிக்கும் விஷயங்கள் எல்லாம் ஏற்கனவே உங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன்.

மக்களிடம் இருந்து கோவிலுக்கு எவ்வளவு நன்கொடைகள் (Donations) கிடைக்கிறது, அதை வழங்கியவர்கள் யார் என்கிற விபரங்களை குறித்து வைத்து கொள்வது திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பணி ஆகும். இது மட்டுமின்றி, இதுகுறித்த விபரங்களையும் இந்த தேவஸ்தான அமைப்பு தனது அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் செய்தியாக வெளியிடுகிறது.

tirumala tirupati devasthanam receives electric scooter as donation

அந்த வகையில், தற்போது ஒரு தகவல் திருமலை திருப்பதி தேவஸ்தான இணையத்தள பக்கத்தின் மூலமாக நமக்கு தெரியவந்துள்ளது. அது என்னவென்றால், இந்தியாவில் எலக்ட்ரிக் 2-வீலர்களை விற்பனை செய்துவரும் ஸ்டார்ட்-அப் நிறுவனம் (Start-up Company) ஒன்று, ரூ.1.20 லட்சம் மதிப்பிலான எலக்ட்ரிக் ஸ்கூட்டரை (Electric Scooter) திருப்பதி தேவஸ்தான அமைப்பிற்கு நன்கொடையாக வழங்கி உள்ளது.

அப்போது ஸ்கூட்டருக்கு தீப ஆரார்த்தனை காட்டப்பட்டு நன்கொடையாக பெற்றுக் கொண்ட போது எடுக்கப்பட்ட படங்களையும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த நன்கொடையை வழங்கி இருக்கும் அந்த இவி ஸ்டார்ட்-அப் நிறுவனம் வேறு எதுவும் இல்லை, குவாண்டம் எனர்ஜி (Quantum Energy) ஆகும்.

tirumala tirupati devasthanam receives electric scooter as donation

எலக்ட்ரிக் பைக்குகளையும் எதிர்காலத்தில் அறிமுகம் செய்யும் திட்டத்தில் இருந்தாலும், தற்போதைக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்து விற்பனை செய்துவரும் குவாண்டம் எனர்ஜி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் ஸ்ரீனிவாஸ் மற்றும் சக்கரவர்த்தி அவர்கள் நேரில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று ஸ்கூட்டரை நன்கொடையாக வழங்கி ஆசீர்வாதம் பெற்றுள்ளனர்.

பின்னர், ஸ்கூட்டரின் சாவி திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் கூடுதல் நிர்வாக அதிகாரி ஸ்ரீ வெங்கையா சௌத்ரியிடம் வழங்கப்பட்டது. அப்போது, திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் அறங்கட்டளை உறுப்பினர் ஸ்ரீ பானு பிரகாஷ் அவர்களும் உடன் இருந்தார். விஜயவாடாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் குவாண்டம் எனர்ஜி நிறுவனத்தில் இருந்து திருப்பதி தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டர், பிஸ்னஸ் எக்ஸ்பி (BZiness XP) ஆகும்.

tirumala tirupati devasthanam receives electric scooter as donation

அமேசான் (Amazon) ஆன்லைன் ஷாப்பிங்கிலும் ஒரு சமயத்தில் கிடைத்துவந்த இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை குவாண்டம் எனர்ஜியின் டீலர்ஷிப் ஷோரூம்களில் (Dealership Showrooms) வாங்கலாம். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரும் விலை (Ex-showroom Price) ரூ.1.20 லட்சமாக தற்சமயம் உள்ளது. இது இல்லாமல், பிஸ்னஸ் எக்ஸ் என்கிற எலக்ட்ரிக் ஸ்கூட்டரையும் குவாண்டம் எனர்ஜி நிறுவனம் விற்பனை செய்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: திருப்பதி ஏழுமலையானுக்கு நன்கொடையாக ஸ்கூட்டர் வழங்கப்படுவது இது ஒன்றும் முதல்முறை அல்ல. எலக்டரிக் ஸ்கூட்டர்கள் கூட இதற்கு முன்னர் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, திருப்பதியை சுற்றியுள்ள பகுதிகளில் தோன்றும் இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தாங்கள் உருவாக்கிய வாகனத்தை வெங்கடாசலபதிக்கு நன்கொடையாக அளித்த பிறகே எந்தவொரு முக்கியமான காரியத்தையும் மேற்கொள்கின்றன.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 6, 2025, 16:14 [IST]
English summary
Tirumala tirupati devasthanams receives quantum bziness xp electric scooter as donation
மேலும்... #donation #electric scooter #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X