நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயில் துவங்கும் தேதி அறிவிப்பு! சந்தோஷத்தில் துள்ளிகுதிக்கும் தென்மாவட்ட மக்கள்!
சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயில் சேவை வரும் நவம்பர் மாதம் தான் துவங்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ரயில் சேவை குறித்து பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்த நிலையில் இதன் சேவை துவங்கும் தேதி தள்ளிப் போய் உள்ளது. இதுகுறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
வந்தே பாரத் ரயில்கள் இந்தியா முழுவதும் ஒவ்வொரு நகரங்களாக அறிமுகப்படுத்தப்பட்டு கொண்டே வருகின்றன. இந்த ரயில்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல மவுசு இருக்கிறது. மக்கள் பலர் இந்த வந்தே பாரத் ரயிலில் பயணிக்க விரும்புகின்றனர். வெளிநாடு புல்லட் ரயில்களுக்கு இணையாக இந்த ரயில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தை பொறுத்த வரை இரண்டு வந்தே பார்க்கிறீர்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மைசூரூவிற்கும், ஈரோடு வழியாக கோவைக்கும் இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல மவுசு இருக்கிறது. இதில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் அடுத்த கட்டங்களாக சென்னையிலிருந்து நெல்லைக்கு வந்தே பாரத் ரயிலை அறிமுகப்படுத்தப் போவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. அதற்கான பணிகள் எல்லாம் விரைவாக நடந்த நடத்தப்பட்டன. வந்தே பாரத் ரயில்கள் வேகமாக செல்வதால் அதன் வேகத்தை தாக்கு பிடிக்கும் வகையில் வந்தே பாரத் ரயில் செல்லும் பாதையில் உள்ள தண்டவாளங்கள் எல்லாம் பலப்படுத்தப்பட்டன.
குறிப்பாக பாலங்கள் உள்ள பகுதியில் அதை பலப்படுத்தி சோதனை செய்யும் முயற்சிகள் எல்லாம் நடந்தது. இந்நிலையில் வந்தே பாரத் ரயிலை அறிமுகப்படுத்த அனைத்தும் தயாரான நிலையில், தொடர்ந்து வந்தே பாரத் அறிமுகம் குறித்த தாமதம் இருந்து வருகிறது. ஏற்கனவே கடந்த மாதம் 6ம் தேதியே இந்த ரயில் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் அதுவும் பின்னர் தள்ளி வைக்கப்பட்டது.
தற்பொழுது எப்பொழுது இந்த சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயில் எப்பொழுது அறிமுகம் ஆகும் என்ற பேச்சு எதுவும் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது ரயில்வே அதிகாரிகள் இது குறித்த ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர். அதன்படி சென்னை நெல்லை வந்தே பாரத் ரயில் வரும் நவம்பர் மாதம் தான் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயில் மதுரை, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதால் தென் மாவட்ட மக்கள் இந்த ரயிலை அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். நெல்லையிலிருந்து தற்போது விரைவாக சென்னைக்கு செல்ல விமான சேவை மட்டுமே இருக்கிறது ரயில்களில் அதிக நேரம் எடுப்பதால் பெரும்பாலும் இரவு நேர பயணத்தையே விரும்புகின்றனர். ஆனால் இப்படியாக பயணிக்கும் வியாபாரிகளுக்கு அது தோதுவாக பயணமாக இல்லை.
தங்கள் மற்ற பணிகளை எல்லாம் விட்டுவிட்டு ரயில் பயணத்திற்காக ஓரிரு நாட்களை செலவு செய்ய வேண்டிய நிலை இருக்கிறது. நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டால் இந்த இரு நகரங்களுக்கும் இடையே பயண நேரம் குறையும். தென்மாவட்டங்களில் இந்த ரயில் மூலம் வளர்ச்சி மிக வேகமாக அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நெல்லைக்கு மேலும் கூடுதல் ரயில்கள் இருப்பதால் பயணிகளுக்கு டிக்கெட் கிடைப்பதில் அதிக சிரமம் இல்லாமல் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில் போக விஜயவாடா - சென்னை ரூட்டில் ஒரு வந்தே பாரத் ரயிலும், புதுச்சேரியில் இருந்து திருப்பதிக்கு சென்னை வழியாக ஒரு வந்தே பாரத் ரயிலும் இயக்க திட்டமிட்டு இருப்பதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த ரயில்களுக்கான அறிவிப்பும் வெகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நெல்லை சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் தென் மாவட்ட மக்களுக்காக இயக்கப்படும் முதல் வந்தே பாரத் ரயிலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசு வந்தே பாரத்தில் அப்டேட் செய்து ஆரஞ்சு நேரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவின் முதல் ஆரஞ்சு நிற வந்தே பாரத் துறையில் நெல்லை-சென்னை ரோட்டில் தான் இயங்கும் என்ற பேச்சும் பரவலாக நிலவி வருகிறது.


Click it and Unblock the Notifications