ஏல தண்ணில முங்குன வண்டி உடனே ஸ்டார்ட் பண்ணாதீகடே! அப்புறம் காயலாங் கடைக்கு தான் போடனும்!

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி,தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல வாகனங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. இப்படியாக வெள்ள நீரில் மூழ்கிய வாகனங்களை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வருவது எப்படி என்ற டிப்ஸை தான் நாம் இங்கே காணப் போகிறோம்.

மன்னார் வளைகுடா பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தம் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்ட பகுதிகளில் இதுவரை வரலாறு காணாத வகையில் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் 80 முதல் 90 சென்டிமீட்டர் மழை ஒரே நாளில் பதிவாகியுள்ளது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் தற்போது நீரில் மூழ்கியுள்ளன. தாமிரபரணி நதிக்கரை ஓரம் உள்ள பகுதிகள் எல்லாம் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

Tirunelveli rains

இந்த மழை வெள்ளத்தில் பல வாகனங்கள் தற்போது தண்ணீரில் மூழ்கியுள்ளன. இந்த காட்சிகளை எல்லாம் நாம் அங்கிருந்து வெளியாகும் வீடியோ மூலம் காண முடிகிறது. சென்னை போலவே திருநெல்வேலி, தூத்துக்குடி,கன்னியாகுமரி மாவட்டங்களிலும் பல்வேறு வாகனங்கள் தற்போது வெள்ள நீரால் பாதிக்கப்பட்டுள்ளன என்ன நமக்கு தெளிவாக தெரிகிறது. இப்படியாக வெள்ள நீரில் பாதிக்கப்பட்ட வாகனங்களை எப்படி பழைய நிலைமைக்கு கொண்டு வருவது என்பதுதான் இங்கே காணப் போகிறோம்.

தற்போது வெள்ளத்தில் மூழ்கியுள்ள வாகனங்களை நீங்கள் வெள்ளம் நீர் குறைந்த பிறகு அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். அப்புறப்படுத்தும் போது எக்காரணத்தை கொண்டு வாகனத்தை ஸ்டார்ட் செய்ய முயற்சி செய்யக் கூடாது. வாகனத்தை மெதுவாக பத்திரமாக தண்ணீர் இல்லாத பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும். உங்கள் வாகனம் வெள்ள நீரில் எவ்வளவு தூரம் மூழ்கி இருந்தது என்பதை நீங்கள் கணக்கில் வைத்துக் கொள்வது நல்லது.

Tirunelveli rains

இப்படியாக வாகனம் மீட்கப்பட்ட பின்பு அதை ஸ்டார்ட் செய்ய எக்காரணத்தை கொண்டும் முயற்சிக்காமல் உங்கள் வாகனம் இன்ஜினுக்கு மேல் தண்ணீர் தேங்கும் அளவிற்கு மூழ்கி இருந்தால் நீங்கள் உடனடியாக அருகில் உள்ள மெக்கானிக்கை தொடர்பு கொள்ள வேண்டும் . அல்லது வாகன தயாரிப்பு நிறுவனங்கள் நடத்தி வரும் ஷோரூமை தொடர்பு கொண்டு வாகனத்தை அங்கு கொண்டு செல்ல வேண்டும்.

வாகனத்தை எடுத்துச் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும். மழை வெள்ள நீரில் ஆங்காங்கே இருக்கும் மெசேஜ் வந்துக்கள் புகலிடம் தேடி உங்கள் வாகனத்திற்குள் சென்று ஒளிந்திருக்க கூடும். இதனால் பாம்பு போன்ற சில விஷ ஜந்துக்கள் உங்கள் வாகனத்திற்குள் இருக்கிறதா என்பதை ஒரு முறை சோதனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள்.

Tirunelveli rains

வாகனத்தின் இன்ஜினியர்கள் தண்ணீர் புகுந்து இருந்தால் வாகனத்தின் எஞ்சின் முழுவதையும் கழட்டி தண்ணீர் முழுவதையும் வெளியேற்றி ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாத நிலையில் அதை மீண்டும் பொருத்தி இயக்கினால் எந்த பிரச்சினையும் வராது. ஒரு வேளை வாகனத்தின் இன்ஜினுக்குள் தண்ணீர் புகுந்து இருக்கும்போது நீங்கள் வாகனத்தை ஸ்டார்ட் செய்ய முயற்சி செய்தால் ஒட்டுமொத்த வாகனமும் சீஸ் ஆகும் நிலைமை ஏற்படும்.

மழை நேரத்தில் உங்கள் வாகனத்தை பாதுகாக்க எப்பொழுதும் பாதுகாப்பான இடத்தில் வாகனத்தை நிறுத்துவது நல்லது. தண்ணீர் புகாத உயரமான இடத்தில் வாகனத்தை நிறுத்த வேண்டும். அப்பொழுதுதான் எந்த பிரச்சினையும் இல்லாமல் இந்த மழை வெள்ளத்தில் உங்கள் வாகனம் பாதுகாக்கப்படும். வேறு வழி இல்லாமல் மழை நீரில் மூழ்கி விட்டாலும் நீங்கள் பதற்றப்படாமல் வாகனத்தை ஸ்டார்ட் செய்யாமல் அங்கீகரிக்கப்பட்ட மெக்கானிக்கிடம் கொண்டு செல்வது மூலம் வாகனத்தை பாதுகாக்க முடியும்.

வெள்ள நீரில் மூழ்கிய வாகனங்களை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவது என்பது சவாலான விஷயம் தான். ஆனால் இது முடியாத விஷயம் ஒன்றும் கிடையாது. அதனால் நீங்கள் முதலில் உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு உங்கள் வாகனம் வெள்ளநீர் வடிந்த பின்பு சரியான மெக்கானிக்கிடம் கொண்டு சென்றால் எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் பாதுகாக்கப்படும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிக கன மழை பெய்து வருவதால் அங்குள்ள வாகனங்கள் பல தண்ணீரில் மூழ்கியுள்ளன. அவர்கள் முறையாக எந்த பிரச்சினையும் இல்லாமல் வாகனத்தை சரி செய்ய வாய்ப்புகள் உள்ளது. இதற்கு முக்கியமாக வாகனத்தை ஸ்டார்ட் செய்யக்கூடாது ஸ்டார்ட் செய்தால் ஒட்டுமொத்த இன்ஜினிற்குள்ளும் தண்ணீர் சென்று வாகனம் பாழாகிவிடும்.

More from DriveSpark

Article Published On: Monday, December 18, 2023, 13:49 [IST]
English summary
Tirunelveli rains saving vehicles tips for southern tamil nadu
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X