ஒடம்பு ஃபுல்லா மச்சம்! ஹோட்டல்ல பிரியாணி சாப்பிட்டவருக்கு இப்படி ஒரு பரிசா! என்னனு தெரிஞ்சா பொறாமைப்படுவீங்க
பிரியாணி (Biryani) நம் வாழ்வில் இரண்டற கலந்து விட்ட ஒரு உணவு. பிரியாணி பிடிக்காது என்று சொல்பவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த அளவிற்கு பிரியாணியை இந்திய மக்கள் நேசிக்கின்றனர். ஸ்விக்கி (Swiggy) மற்றும் ஜொமேட்டோ (Zomato) போன்றவற்றில் அதிகம் ஆர்டர் செய்யப்படும் உணவுகளில் ஒன்றாக பிரியாணி உள்ளது.
பார்ட்டிகள், திருமணங்கள் மற்றும் அரசியல் கட்சி கூட்டங்கள் என எதுவானாலும், பிரியாணி இன்றியமையாத ஒன்றாக தற்போது மாறி விட்டது. அப்படிப்பட்ட பிரியாணியை சாப்பிட்ட ஒருவருக்கு, தற்போது மிகப்பெரிய அதிர்ஷ்டம் ஒன்று அடித்துள்ளது. இது குறித்த சுவாரஸ்யமான தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.

ஆந்திர பிரதேச (Andhra Pradesh) மாநிலத்தில் உள்ள திருப்பதி (Tirupati), புனித நகரங்களில் ஒன்று. இங்குள்ள ஹோட்டல் (Hotel) ஒன்று கடந்த செப்டம்பர் மாதம் புதுமையான திட்டம் ஒன்றை அறிவித்தது. இதன்படி சாப்பிட வருபவர்களுக்கு, கூப்பன் ஒன்று வழங்கப்படும். இதை நிரப்பி கொடுத்து விட்டு சென்று விட வேண்டும்.
அந்த கூப்பன்களில் இருந்து, குலுக்கல் (Lucky Draw) முறையில் தேர்வு செய்யப்படும் நபருக்கு கார் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திருப்பதியை சேர்ந்த ராகுல் என்பவர் தற்போது இந்த குலுக்கலில் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு நிஸான் மேக்னைட் (Nissan Magnite) கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த காரின் விலை (Price) 7 லட்ச ரூபாய் என ஹோட்டல் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாக 23 ஆயிரம் கூப்பன்கள் சேகரிக்கப்பட்டிருந்த நிலையில், ராகுல் பரிசை தட்டி சென்றுள்ளார். இவர் இடைப்பட்ட ஒரு நாளில் அந்த ஹோட்டலில் பிரியாணி சாப்பிட்டதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புத்தாண்டை (New Year) முன்னிட்டு குலுக்கல் நடத்தப்பட்ட நிலையில், அவருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. அவருக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ள நிஸான் மேக்னைட், சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது ஆகும். நிஸான் மேக்னைட் கார், இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது.
இந்திய சந்தையில் கியா சொனெட் (Kia Sonet), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), டாடா நெக்ஸான் (Tata Nexon), மஹிந்திரா எக்ஸ்யூவி300 (Mahindra XUV300) மற்றும் ரெனால்ட் கைகர் (Renault Kiger) போன்ற கார்களுடன், நிஸான் மேக்னைட் போட்டியிட்டு வருகிறது.
தற்போதைய நிலையில் நிஸான் மேக்னைட் காரின் ஆரம்ப விலை வெறும் 6 லட்ச ரூபாய் மட்டுமே. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 11.02 லட்ச ரூபாயாக உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹோட்டல் பிரபலமாக வேண்டும் மற்றும் விற்பனை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கங்களில் இந்த குலுக்கல் நடத்தப்பட்டிருக்கலாம். இதை பின்பற்றி இன்னும் பல்வேறு ஹோட்டல்களும் இது போன்ற குலுக்கல் திட்டங்களை வரும் காலங்களில் அறிமுகம் செய்யலாம் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








