நடுரோட்டில் தீபிடித்து எரிந்த அரசு பஸ்! இது தான் உண்மையான காரணம்!
திருப்பூரில் நேற்று இரவு அரசு பஸ் zன்று நடு ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்ததால் பஸ்ஸில் இருந்த பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டனர். இந்த பஸ் முழுவதுமாக தீப்பிடித்து எரிந்தது. அதிர்ஷ்டவசமாக 52 பயணிகள் காப்பாற்றப்பட்டனர். இந்த சம்பவம் எப்படி நடந்திருக்கும்? இதற்கு பின்னால் என்ன காரணம் இருக்கும்? பஸ் நடுரோட்டில் தீப்பிடிக்கும் சம்பவம் குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
திருப்பூரில் இருந்து நேற்று இரவு தமிழக அரசின் பஸ் ஒன்று திருச்செந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் தாராபுரம் பைபாஸ் சாலை வழியாக சென்று கொண்டிருந்தது. பஸ்ஸில் சுமார் 52 பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தார்கள் பஸ் ஓட்டுநர் கணேசமூர்த்தி கொண்டிருந்தார். பஸ்ஸில் கண்டக்டராக பணியாற்றி வந்த சிகாமணி என்பவர் பயணிகளுக்கு டிக்கெட் வழங்கிக் கொண்டிருந்தார்.

பஸ் நடு ரோட்டில் பயணம் செய்து கொண்டிருந்தபோது பஸ்ஸில் இன்ஜின் பகுதியில் இருந்து கரும்புகை ஒன்று கிளம்பியுள்ளது. இதை பார்த்ததும் பஸ்ஸின் டிரைவர் கணேசன் மூர்த்தி உடனடியாக சுதாரித்துக் கொண்டார். இன்ஜினில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்பதை உணர்ந்த அவர் உடனடியாக பயணிகளை உஷார் படுத்தி அனைத்து பயணிகளையும் பத்திரமாக பஸ்ஸிலிருந்து இறக்கிவிட்டு விட்டார். பஸ்ஸிலிருந்து பயணிகள் இறங்கும் போது இந்த கரும்புகை மெல்ல மெல்ல தீயாக மாறிவிட்டது.
அடுத்த ஒரு சில நிமிடங்களில் பஸ் முழுவதும் இந்த தீ பரவியது அதிர்ஷ்டவசமாக டிரைவர் சுதாரித்ததால் உடனடியாக பயணிகள் உஷார்படுத்தப்பட்டு அனைத்து பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனால் பயணிகளுக்கு எந்த விதமான காயமோ உயிர் சேதமோ ஏற்படவில்லை. ஆனால் பஸ்ஸில் எழுந்த தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. உடனடியாக அங்கு இருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வாகனம் பஸ்ஸில் இருந்து கொண்டிருந்த தீயையும் முழுவதுமாக அணைத்தது. ஆனால் இதெல்லாம் நடப்பதற்குள் பெரும்பாலான பகுதி தீயில் கருகி நாசம் ஆகிவிட்டன. இந்த சம்பவம் தற்போது பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இரவு நேரங்களில் தினம் தோறும் ஆயிரக்கணக்கான பஸ்கள் பயணம் செய்து வருகின்றன. இதில் லட்சக்கணக்கான பயணிகள் பயணிக்கிறார்கள்.
இப்படியான நேரத்தில் பஸ் தீப்பிடித்து இருந்தால் மக்களுக்கு பயம் வருவது சகஜம் தான். ஆனால் இந்த தீ எப்படி பிடித்து இருக்க வாய்ப்பு இருக்கிறது என்பதை பற்றி நாம் முதலில் யோசித்துப் பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் இது போன்ற சம்பவம் இனி நடக்காமல் இருப்பதற்கான வழியை செய்ய முடியும். இப்படியாக பதில் தீப்பிடிப்பதற்கு ஒரு சில காரணங்கள் தான் இருக்கும்.
பஸ்ஸில் பேட்டரி அல்லது எலெக்ட்ரிக் பாகங்களில் ஏதாவது ஷார்ட் சர்க்யூட் இருந்தால், இப்படியாக அது அதிக வெப்பமாகி அருகில் இருக்கும் எளிதில் தீப்பிடிக்கும் பொருளை மூலம் தீ ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. இப்படியாக தீ விபத்து ஏற்பட்டாலும் பஸ் முழுவதும் தீப்பிடித்து எறிவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இப்படியாக தீ பரவினால் இது வேகமாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பரவி விடும்.
குறிப்பிட்ட சம்பவத்தில் பஸ்ஸில் கியர் பாக்ஸ் பகுதியில் இருந்து கரும்புகை கிளம்பியதாக தெரிகிறது. அப்படியாக பார்த்தால் கியர் பாக்ஸ் பகுதியில் தீப்பிடித்து இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இங்கு தீப்பிடிப்பதற்கான முக்கியமான காரணம் இரண்டு தான். ஒன்று போதுமான அளவுக்கு லூப்ரிகேஷன் இல்லாமல் அதிக வெப்பம் ஏற்பட்டு தீப்பிடித்திருக்க வாய்ப்பிருக்கிறது.
பொதுவாக வாகனம் பயணிக்கும் போது நகரும் பாகங்கள் ஒன்றோடு ஒன்று உரசும்போது வெப்பம் அதிகமாக இருக்கும். இந்த வெப்பத்தை குறைப்பதற்காக லூபிரிகேஷனை பயன்படுத்துவார்கள். லூப்ரிகேஷனை பயன்படுத்தும் போது வெகுவாக வெப்பம் ஏற்படுவது குறைந்து விடும். ஆனால் இந்த லூப்ரிகேஷன் சரி இல்லை என்றால் அதிக வெப்பம் ஏற்பட்டு இதனால் தீ பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
மேலும் கியர்பாக்ஸ் பகுதியை அவ்வப்போது பராமரிக்க வேண்டும். பராமரிக்கப்படாத கியர் பாக்ஸ்கள் அதிக உழைப்பை செலுத்தி சேதாரமாகி இந்த சிறிய பிரச்சனை லூப்ரிகேஷனை குறைத்து அதிக வெப்பத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. இப்படி நடந்தாலும் தீப்பிடித்து எரிவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. குறிப்பிட சம்பவத்தில் சரியான பராமரிப்பு இல்லாத காரணமாக பஸ் தீப்பிடித்திருக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தமிழக அரசு பஸ்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் நீண்ட நாட்களாக இருக்கிறது. இப்படியான சம்பவம் காரணமாக கூட இந்த விபத்து நிகழ்ந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. அதிர்ஷ்டவசமாக டிரைவர் சுதாரித்துக் கொண்டதால் பஸ்ஸிலிருந்து 52 பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டது. இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
Source: Dinamalar


Click it and Unblock the Notifications








