டுகாட்டி ஸ்பெஷல் எடிசன் கைக்காடிகாரங்கள்: டைட்டான் அறிமுகம்!
நாட்டின் புகழ்பெற்ற கடிகார தயாரிப்பு நிறுவனமான டைட்டான் டுகாட்டி பிராண்டுடன் இணைந்து புதிய கைக்கடிகாரங்களை அறிமுகம் செய்துள்ளது. டைட்டான் ஹீலியோஸ் பிராண்டில் இந்த புதிய வாட்சுகள் விற்பனைக்கு கிடைக்கும். மொத்தம் 8 ஸ்பெஷல் எடிசன் கைக்கடிகாரங்களை இந்த நிறுவனம் டுகாட்டியுடன் இணைந்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
இதுகுறித்து டைட்டான் நிறுவனத்தின் தலைமை சந்தைப்படுத்துதல் அதிகாரி ரோனி தலட்டி கூறுகையில்," உலகின் மிகவும் பழமையும், பெருமையும் மிகுந்த டுகாட்டியுடன் இணைந்து கைக்கடிகாரங்களை அறிமுகம் செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். டுகாட்டி பைக்குகளின் ஸ்டைல், தொழில்நுட்பத்தை பரைசாற்றும் வகையில், இந்த உயர் ரக கைக்கடிகாரங்களை அறிமுகம் செய்துள்ளோம்," என்றார்.
டுகாட்டி பிராண்டு மேம்பாட்டு இயக்குனர் லூசியோ அட்டினா கூறுகையில்," டைட்டான் போன்ற மதிப்பு வாய்ந்த நிறுவனம் எங்களது பிராண்டை தேர்வு செய்திருப்பது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லைகளை கடந்து டுகாட்டியின் தயாரிப்புகள் மீதான நம்பிக்கைதான் இதற்கு காரணம். இந்தியாவில் இந்த ஸ்பெஷல் எடிசன் ஸ்போர்ட்ஸ் கைக்கடிகாரங்கள் மிகுந்த வரவேற்பை பெறும்," என்றார்.

உயர் ரகம்
டுகாட்டியின் நேக்டு பைக் ஸ்டைலின் சாரம்சங்களை மனதில் வைத்து இந்த 8 கைக்கடிகாரங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. கைக்கடிகாரத்தின் கேஸ் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொண்டும், டயல்களில் கார்பன் ஃபைபரும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

விலை
ரூ.22,995 முதல் ரூ.26,995 வரையிலான விலைகளில் இந்த கைக்கடிகாரங்கள் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன. மும்பை, டெல்லி, பெங்களூரில் உள்ள டைட்டான் ஹீலியோஸ் விற்பனை மையங்களில் இந்த கைக்கடிகாரங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








