டைட்டானிக் ஹீரோயின் இந்த கார்ல தான் வந்திருப்பாங்களோ? ஏலத்திற்கு வரப்போகும் பழைய கார்!
1913ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட கார் ஒன்று தற்போதும் ரன்னிங் கண்டிஷனில் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இந்த காருக்கு டைட்டானிக் கப்பலை விட வயது அதிகமானால் இன்றும் இது தயாரிக்கப்பட்ட போது எப்படி ஓடிக்கொண்டிருந்ததை போலவே ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த காரை விரைவில் ஏலத்திற்கும் கொண்டு வர உள்ளார்கள். இதனால் இந்த காரை ஏலத்தில் எடுக்க பல்வேறு விதமான போட்டிகள் நடந்து வருகிறது. இவ்வளவு ஆண்டுகள் ரன்னிங் கண்டிஷனில் இருக்கும் அளவிற்கு அந்த கார் எப்படிப்பட்ட கார்? இதில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது? என்ற விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
இன்று எலெக்ட்ரிக் கார்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றன. மக்கள் பலர் பெட்ரோல் கார்களை விட்டு விட்டு எலெக்ட்ரிக் கார்களுக்கு மாற வேண்டும் என்ற பிரச்சாரங்களும் நடந்து வருகிறது. ஆனால் எலெக்ட்ரிக் கார் என்றால் ஏதோ புதிய தொழில்நுட்பம் என்று நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறு. எலெக்ட்ரிக் கார் தான் பழைய தொழிற்நுட்பமாக இருக்கிறது.

தற்போது அதிகம் பயன்பாட்டில் உள்ள பெட்ரோல் கார்கள் வடிவமைக்கப்படுவதற்கு முன்னரே எலெக்ட்ரிக் கார்கள் தான் வடிவமைக்கப்பட்டது. இப்படியாக 1913ம் ஆண்டு வேவர்லி மாடல் 93 என்ற எலெக்ட்ரிக் கார் உருவாக்கப்பட்டது. இந்த கார் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. சுமார் 110ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கார் தயாரிக்கப்பட்டு மக்களால் பயன்படுத்தப்பட்டது.
அந்த காலகட்டத்தில் கார் என்றால் அதை அவ்வளவு எளிதாக எல்லாராலும் வாங்கிவிட முடியாது. பணக்காரர்களிலேயே பெரும் பணக்காரராக இருக்கும் ஒருவர்தான் சொந்தமாக கார் வைத்திருப்பார். ஏனென்றால் அப்பொழுதுதான் கார்கள் தயாரிக்கப்பட்ட காலம், அப்பொழுது எலெக்ட்ரிக் மோட்டார்களை கொண்டு தான் கார்கள் வடிவமைக்கப்பட்டன.

பெட்ரோல் இன்ஜின்கள் எல்லாம் அந்த காலகட்டத்தில் பெரிய அளவில் பயன்பாட்டிற்கு வரவில்லை. இந்நிலையில் வேவர்லி மாடல் 93 கார் அப்பொழுது பயன்பாட்டில் இருந்தாலும் பெட்ரோல் இன்ஜின் கார்கள் பயன்பாட்டிற்கு வந்த பிறகு எலெக்ட்ரிக் மோட்டாரில் இயங்கும் கார்கள் எல்லாம் பயன்பாட்டில் இருந்து நிறுத்தப்பட்டு விட்டன. அப்பொழுது பயன்பாட்டில் இருந்த ஒரு சில கார்களும் சரியான பராமரிப்பு இல்லாமல் நிறுத்தப்பட்டது.
ஆனால் அமெரிக்காவின் வெர்ஜினா மாகாணத்தை சேர்ந்த அன் பீஸ் ரெவில் என்பவர் 1913ம் ஆண்டு இந்த வேவர்லி மாடல் 93 என்ற எலெக்ட்ரிக் காரை வாங்கி தொடர்ந்து பராமரித்து வந்தார். அவர் மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தினரும் இந்த வாகனத்தை பராமரித்து வந்தார்கள். சுமார் நூறு ஆண்டுகள் அவரது பரம்பரையே இந்த காரை பராமரித்து வந்தது. பராமரிப்பு என்றால் வெறும் பராமரிப்பு மட்டுமல்லாமல் ரன்னிங் கண்டிஷனில் இந்த காரை வைத்திருந்தது.

இந்நிலையில் கடந்த 2002ம் ஆண்டு முதல் முறையாக இந்த கார் அந்த பரம்பலையிலிருந்து வெளியேறி ஏலத்திற்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது பெரும் தொகையில் இந்த கார் ஏலம் எடுக்கப்பட்டது. எவ்வளவு தொகை என்ற தகவல் வெளியே சொல்லப்படவில்லை. இந்நிலையில் அந்த கார் தற்போது மீண்டும் ஏலத்திற்கு வருகிறது. அமெரிக்காவை சேர்ந்த மேக்கம் என்ற ஏல நிறுவனம்தான் இந்த காரை எலத்துக்கு விடுகிறது.
இந்த கார் தற்போதும் ரன்னிங் கண்டிஷனில் தான் இருக்கிறது. இந்த காரில் பேட்டரி சார்ஜர்கள் வழங்கப்பட்டுள்ள 120 ஓல்டு அவுட்லெட் கொண்ட சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது. இதில் உள்ள எலெக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் சிஸ்டம் எல்லாம் வாங்கும் போது இந்த சிஸ்டம் கிடையாது.
அதற்குப் பிறகு பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு மாற்றப்பட்டு விட்டன. இந்த கார் தயாரிக்கப்படும் போது எப்படி இருந்ததோ அதே போல இப்பொழுது இருக்கும் என சொல்ல முடியாது. ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சில சேதமடைந்த பாகங்கள் எல்லாம் மாற்றி அமைக்கப்பட்டிருக்கலாம்.
இருந்தாலும் இந்த கார் தயாரிக்கப்பட்டபோது என்ன மாதிரியான லுக்கில் இருந்ததோ அதே லுக்கில் தான் இருக்கிறது. தற்போதும் இந்த கார் ரன்னிங் கண்டிஷனில் தான் இருக்கிறது. இந்த கார் தற்போது ஒருமுறை சார்ஜ் போட்டால் 130 முதல் 160 கிலோமீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் தயாரிக்கும் போது வழங்கப்பட்ட ஓனர் மேனுவல் கூட தற்பொழுது இருக்கிறது.
இந்தக் காரின் முன்பக்கம் எலெக்ட்ரிக் ஹெட்லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பக்கம் பொருட்களை வைத்து செல்லும் கேரேஜ் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கமும் பொருட்களை வைக்க இட வசதி இருக்கிறது. இந்த காரின் மேற்பகுதியை தேவையில்லை என்றால் கழட்டிக் கொள்ளும் வகையில் வழங்கப்பட்டுள்ளன. லீப் ஸ்ப்ரிங் சஸ்பென்ஷன் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த காரின் உட்பகுதியில் இரண்டு சீட் சோபா வழங்கப்பட்டுள்ளது. இந்த காரில் ரியாக்டபில் சைடு விண்டோ மற்றும் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் ஆகிய அம்சங்களும் இருக்கிறது. இதனால் இந்த காரை தற்போது ஏலத்திற்கு எடுப்பவர்கள் அதிக தொகை கொடுத்து ஏலம் எடுக்க வாய்ப்புகள் உள்ளது. ஆனால் எவ்வளவு தொகைக்கு ஏலம் எடுக்கப்படுகிறது என்ற விபரம் வெளியில் அறிவிக்கப்படுமா என தெரியவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டைட்டானிக் கப்பல் பயன்படுத்தப்பட்ட காலத்தில் உருவாக்கப்பட்ட கார் இன்றளவும் பயன்பாட்டில் இருப்பது ஆச்சரியமான விஷயம் தான். டைட்டானிக் படத்தில் கூட ஹீரோயின் இப்படியான ஒரு காரில் தான் வந்திருக்கும் காட்சியை நம்மால் பார்க்க முடியும். இந்த காரை யார் ஏலம் எடுக்கப் போகிறார்கள் என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் வரும் ஆகஸ்ட் மாதம் ஏலம் நடக்க உள்ளது.
Image Courtesy: Mecum Auctions


Click it and Unblock the Notifications









