டைட்டானிக் கப்பலில் பயன்படுத்தப்பட்ட ஒரே காரணத்திற்காக லட்சங்களை குவித்த காகித துண்டு! ஏல உலகமே மிரண்டுருச்சு!

டைட்டானிக் என்ற உடன் பலரின் நினைவிற்கு வருவது பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் எடுக்கப்பட்ட திரைப்படமாகதான் இருக்கும். இரண்டாவதாகதான் டைட்டானிக் கப்பலும், அதன் விபத்து சம்பவமும் ஞாபகத்திற்கு வரும். அதேவேளையில், இப்போதும் ஒரு சிலர் டைட்டானிக் கப்பலை பற்றியும், அதன் விபத்தையும் நினைவுகூர்ந்த வண்ணம் இருக்கின்றனர்.

ஏனெனில், சென்ற நூற்றாண்டின் மிக மோசமான கப்பல் விபத்துகளில் ஒன்றாக டைட்டானிக் விபத்து பார்க்கப்படுகின்றது. இது ஓர் பிரமாண்ட சொகுசு கப்பல் ஆகும். ஆனால், தன்னுடைய முதல் (கன்னி) பயணத்திலேயே இந்த கப்பல் விபத்தில் சிக்கி பேரழிவை சந்தித்தது. இதனால்தான் டைட்டானிக் கப்பல் விபத்தை இந்த உலகம் கருப்பு தினமாக பார்க்கின்றது.

Titanic

யாராலும் இந்த கப்பலை தகர்க்க முடியாது என கருதப்பட்டநிலையில், சிறிய பனி பாறை மோதியதனால் இந்த கப்பல் முழுவதுமாக ஆழ்கடலில் மூழ்கியது மிகப் பெரிய சோகக் கதை ஆகும். இந்த விபத்தில் இறந்தவர்கள் ஏராளாமனோர். 1,500 க்கும் அதிகமானோர் இறந்திருப்பதாகக் கூறப்படுகின்றது.

1912 ஆம் ஆண்டில் பெரும் பொருட் செலவில் இந்த கப்பல் கட்டுமானம் செய்யப்பட்டது. சுமார் 7.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிலேயே கட்டப்பட்டதாகக் கூறப்படுகின்றது. மிகுந்த ஆடம்பர வசதிகளுடன் உருவாக்கப்பட்ட கப்பல் இதுவாகும். ஆகையால், எண்ணற்ற பெரும் செல்வந்தர்கள் இந்த கப்பலில் தங்களின் பயணத்தை மேற்கொண்டனர்.

Titanic first class dinner menu

இந்த நிலையிலேயே வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் இந்த கப்பல் பனி பாறையுடன் மோதி விபத்தைச் சந்தித்தது. இப்போதும் இந்த கப்பலை ஆழ்கடல் சென்று பார்த்துவிட்டு வருபவர்கள் இருக்கின்றனர். ஆராய்ச்சி மற்றும் பார்வையிடுதல் என பல்வேறு காரணங்களுக்காக மனிதர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் சென்று வருகின்றனர்.

இந்த நிலையிலேயே டைட்டானிக் கப்பலில் வழங்கப்பட்ட முதல் வகுப்பிற்கான டின்னர் மெனு கார்டு ஒன்று சமீபத்தில் ஏலத்திற்கு வந்தது. வெறும் பேப்பர் தானே, இது எங்கேயிருந்து விலைக்கு போகும் என ஒரு சிலர் எண்ணிக் கொண்டிருந்த, இந்த சூழலில், அந்த மெனு கார்டு 66,000 யூரோக்களுக்கு ஏலம் போயிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மெனு கார்டின் பொக்கிஷ தன்மையை உணர்ந்த நபர், இந்த பெரும் தொகையைக் கொடுத்து வாங்கி இருக்கின்றார். இதன் இந்திய மதிப்புல் ரூ. 58,81,543 ஆகும். ஏப்ரல் 11, 1912-க்கான உணவு மெனுவே அது ஆகும். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஓர் ஏல நிறுவனமே இந்த மெனு கார்டை ஏலம் விட்டிருக்கின்றது.

அது முதல் வகுப்பு உணவு மெனு கார்டை மட்டுமல்ல இன்னும் சில டைட்டானிக் கப்பலில் பயன்படுத்தப்பட்ட பொருட்களையும் ஏலம் விட்டிருக்கின்றது. அந்தவகையில், சினை கோன்டோர் கடிகாரம், முதல் வகுப்பில் பயன்படுத்தப்பட்ட போர்வை மற்றும் வெள்ளை நட்சத்திர கொடி என ஒட்டுமொத்தமாக ஏழு பொருட்களை அது ஏலம் விட்டிருக்கின்றது.

அனைத்தும் நல்ல விலைக்கே ஏலம் போயிருக்கின்றன. லைஃப் போட்டில் இருந்து மீட்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் முதல் வகுப்பில் பயன்படுத்தப்பட்ட போர்வை 76 ஆயிரம் யூரோக்களுக்கு ஏலம் போயிருக்கின்றது. இதன் இந்திய மதிப்பு ரூ. 67,72,787 ஆகும். இவ்வாறே அனைத்தும் நல்ல விலைக்கு ஏலம் போயிருக்கின்றன.

ஆயிரத்திற்கும் அதிகமான உயிர்களை பலி வாங்கிய இந்த கப்பலில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் லட்ச கணக்கில் ஏலம் போயிருப்பது பலருக்கு வியப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. ஏலம் போன பொருட்கள் அனைத்தும் வரும் நாட்களில் மியூசியங்கள் அல்லது அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த நூற்றாண்டின் மிக மோசமான கப்பல் விபத்தாக டைட்டானிக் கப்பல் விபத்து பார்க்கப்படுகின்றது. இப்போதும் பலரால் பேசப்படும் கப்பல் விபத்து இதுவே ஆகும். இந்த கப்பலுக்கு கூடுதல் பெருமிதம் சேர்க்கும் விதமாக எடுக்கப்பட்ட படமே டைட்டானிக் ஆகும். காதல் கலந்த திரைக் கதை நல்ல வசூலை உலகளவில் ஈட்டிக் கொடுத்தது குறிப்பிட்தகுந்தது.

Article Published On: Tuesday, November 14, 2023, 16:31 [IST]
English summary
Titanic ship first class dinner menu card sold via auction
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+