ஐய்யோ... பாகிஸ்தான் கோடீஸ்வரர்கள் உள்ளே இருக்கிறார்களா!! நீர்மூழ்கி கப்பலை 5 நாட்களாக தேடும் அமெரிக்கா...

அட்லாண்டிக் பெருங்கடலில் கடந்த ஜூன் 18ஆம் தேதி தொலைந்து போன அமெரிக்க நீர்மூழ்கி கப்பலை பற்றி தான் இப்போது எங்கும் பேச்சாக உள்ளது. ஏனெனில் இந்த நீர்மூழ்கி கப்பல் தொலைந்துப்போய் 5 நாட்களாகி விட்டது அல்லவா. எவ்வாறு இந்த நீர்மூழ்கி கப்பல் தொலைந்து போனது? கப்பலில் மொத்தம் எத்தனை பேர் இருந்தார்கள்? இதனை கண்டறியும் பணியில் ஈடுப்பட்டு வரும் நாடுகள் எவை? என்பதை இனி பார்க்கலாம்.

அமெரிக்காவை சேர்ந்த ஓசன்கேட் என்ற நீர்மூழ்கி கப்பல்களை உருவாக்குவதில் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது டைட்டானிக் நீர்மூழ்கி கப்பல் ஆகும் (டைட்டானிக் என்று பெயர் வைத்தாலே பிரச்சனை தான் போல). கடந்த ஜூன் 18ஆம் ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்தில் 5 பயணிகளுடன் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலுக்குள் தனது பயணத்தை துவங்கியது.

titanic submarine missing

ஆனால் பயணத்தை துவங்கிய 1 மணிநேரம் 45 நிமிடங்களில் டைட்டானிக் நீர்மூழ்கி கப்பல் தொலைந்துவிட்டதென கப்பல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல்கள் வருகிறது. கட்டுப்பாட்டு அறையில் இருந்த அதிகாரிகளால் நீர்மூழ்கி கப்பலை அதன் சிக்னலை வைத்து அடையாளம் காண முடியவில்லை. 22 அடி நீளத்தில் கார்பன்-ஃபைபர் மற்றும் டைட்டானியத்தால் உருவாக்கப்பட்ட டைட்டானிக் நீர்மூழ்கி கப்பல் தொலைந்துப்போன செய்தி விரைவாகவே அமெரிக்க கப்பற்படை வரையில் எதிரொலித்தது.

ஏனெனில், வழக்கமான கப்பல்கள் தொலைந்து போனது போல் நீர்மூழ்கி கப்பல் தொலைந்து போனதை கருத முடியாது. சாதாரண கப்பல் தொலைந்து போனாலும் சில நாட்களுக்கு, சில மாதங்களுக்கு பிறகு கூட பயணிகளுடன் பத்திரமாக மீண்டும் கிடைத்துள்ளது. ஆனால் நீர்மூழ்கி கப்பல்களில் உள்ள ஒரே மிக பெரிய பிரச்சனை என்னவென்றால், அவற்றுள் பயணிகள் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மூலமாகவே உயிர் வாழ முடியும் என்பதாகும்.

titanic submarine missing

தற்போது தொலைந்து போன டைட்டானிக் நீர்மூழ்கி கப்பலில் இருந்த ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் 5 பயணிகளுக்கு அதிகப்பட்சமாக 96 மணிநேரத்திற்கு உதவும். அதாவது, இன்று (ஜூன் 22) காலை உடன் அந்த 96 மணிநேரங்கள் முடிவடைந்துள்ளன. 96 மணிநேரங்கள் என்பதும் ஆக்ஸிஜனை பயன்படுத்துவதை பொறுத்து அதிகப்பட்சமாக கிடைக்கக்கூடியது எனவும், தொலைந்து போன நீர்மூழ்கி கப்பலில் 96 மணிநேரத்திற்கு சில மணிநேரத்திற்கு முன்பாகவே ஆக்ஸிஜன் தீர்ந்துப்போய் இருக்கலாம் என அதிகாரிகள் பயமுறுத்துகின்றனர்.

நீர்மூழ்கி கப்பலால் கடலுக்குள் வேறெந்த வழியிலும் ஆக்ஸிஜனை பெற முடியாது. இதனாலேயே இந்த விஷயத்தில் அமெரிக்க மற்றும் கனடா நாட்டு படைகள் மிக தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி, கப்பலில் பயணித்ததாக கூறப்படும் 5 பயணிகள் செல்வந்தர்கள் ஆவர். ஓசன்கேட் நிறுவனத்தின் நிறுவனரும், முதன்மை நிர்வாக இயக்குனருமான ஸ்டாக்டன் ரஷ் அவர்கள் தான் டைட்டானிக் நீர்மூழ்கி கப்பலை இயக்கி, கடலுக்குள் கொண்டு சென்றுள்ளார்.

titanic submarine missing

உள்ளே இருந்த மற்ற பயணிகள் வருமாறு: பிரிட்டிஷ் பிஸ்னஸ்மேன் ஹாமிஷ் ஹார்டிங், மற்றொரு பிரிட்டிஷ் பிஸ்னஸ்மேனும் பாகிஸ்தான் நாட்டின் மிகுந்த பணக்காரர்களுள் ஒருவருமான ஷாஸடா தாவுத் மற்றும் அவரது மகன் சுலேமான் மற்றும் பிரெஞ்சு கப்பல் பயண நிபுணர் ஹென்ரி நார்ஜியோலெட். நீர்மூழ்கி கப்பல் தொலைந்துப்போன இடத்தில் இருந்து ஜூன் 18 மற்றும் 19ஆம் தேதிகளில் சத்தம் எழுந்தது. இருப்பினும் கப்பல் இருக்கும் இடத்தை அதிகாரிகளால் கண்டுப்பிடிக்க முடியவில்லை. அதேபோன்றதான சத்தம் மீண்டும் இன்று (ஜூன் 22) அதிகாலையில் கேட்டதாக கூறப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: வடக்கு அட்லாண்டிக் கடலில் பனி பாறைகள் அதிகளவில் இருக்கும். இதனால் இந்த மீட்பு பணியில் கனடா நாட்டின் எம்.வி போலார் பிரின்ஸ் கப்பல் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. 5 நாட்களாக கிடைக்காத நீர்மூழ்கி கப்பலில் இருந்து சத்தம் கேட்டு இருப்பது நல்ல விஷயம் தான். ஆனால் இந்த சத்தம் ஆக்ஸிஜன் தீர்ந்துப்போன காரணத்தினால் ஏற்பட்ட சத்தமாக கூட இருக்கலாம் என மீட்பு பணியில் ஈடுப்படுவோர் கவலை தெரிவித்துள்ளனர்.

More from DriveSpark

Article Published On: Thursday, June 22, 2023, 11:26 [IST]
English summary
Titanic submarine missing new banging sounds detected
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X