சட்டசபைக்கு வெளியிலும் கவனம் ஈர்க்கும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பயன்படுத்தும் சொகுசு EV கார்!

தமிழக அரசியல் களத்தில் அதிகம் கவனம் ஈர்க்கும் முகமாக உருவெடுத்திருக்கிறார் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர். சட்டப்பேரவை நடவடிக்கைகளை அவர் கையாளும் விதம் மட்டுமல்லாமல், அவரது கார் தேர்வும் தற்போது கவனம் பெற்றுள்ளது. அவர் பயன்படுத்தும் கார் எம்ஜி எம்9 எலெக்ட்ரிக் எம்பிவி சொகுசு கார் சபைக்கு வெளியிலும் அவரது செயல்பாட்டை திரும்பி பார்க்க வைத்துள்ளது. சாதாரணமாக ஒரு அரசியல் பிரமுகர் பயன்படுத்தும் சொகுசு கார்களைப் போல இல்லாமல், முழுமையான எலெக்ட்ரிக் வாகனத்தை அவர் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

கடந்த 50 ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்ட ஜேசிடி. பிரபாகர், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருடன் நெருக்கமாக பணியாற்றிய அரசியல் தலைவர். தற்போது முதல்வர் விஜயின் தவெக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட அவர், 17-வது தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

JCD Prabhakar MG M9

சட்டப்பேரவையில் அவரது செயல்பாடுகளும் சமீபத்தில் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. நீண்ட நேர விவாதங்களுக்கு வாய்ப்பு அளிப்பது, அனைத்து உறுப்பினர்களுக்கும் பேசுவதற்கான சந்தர்ப்பம் வழங்குவது உள்ளிட்ட அவரது அணுகுமுறைக்கு எதிர்க்கட்சிகளிடமிருந்தும் பாராட்டுகளை பெற்றுள்ளது. தமிழக மக்கள் மனதிலும் தனி கவனம் பெற்றுள்ள ஜேசிடி. பிரபாகர் பயணிக்கும் கார் எம்ஜி எம்9 எலெக்ட்ரிக் எம்பிவி காரும் இப்போது கவனம் பெற்றுள்ளது.

Also Read

பிரிமீயம் எலெக்ட்ரிக் கார்

சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பயன்படுத்தும் எம்ஜி எம்9 கார் பேட்டரியில் இயங்கும் சொகுசு வகை எலெக்ட்ரிக் கார். டொயோட்டா வெல்ஃபயர், கியா கார்னிவல் போன்ற பிரிமீயம் வகை மாடல்களுடன் போட்டி போட்டாலும், இது சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார கார் மாடலாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.80 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படும் இந்த கார் முழுமையாக கட்டமைக்கப்பட்டு CBU முறையில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், எம்ஜி செலக்ட் பிரீமியம் டீலர்ஷிப்கள் மூலமாக கிடைக்கிறது.

Also Read

இந்த கார் 5.2 மீட்டர் நீளம், 2 மீட்டர் அகலம் மற்றும் 3.2 மீட்டர் வீல்பேஸ் என பெரிய வகை கார் மாடல்களில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. மேலும், மிக விசாலாமான உட்புற இடவசதியுடன், 7 பேர் பயணிப்பதற்கான இடவசதியுடன் கிடைக்கிறது. குறிப்பாக இரண்டாவது வரிசையில் Presidential Captain Seats என்ற மிகவும் சிறப்பான இருக்கை அமைப்பு குறிப்பிடத்தக்கது.

MG M9 EV Car

இந்த இருக்கைகளில் மசாஜ் வசதி, பயணிகளுக்கு சூட்டையும், குளிர்ச்சியையும் வழங்கும் வசதி, எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் உள்ளி்டடவை இடம்பெற்றுள்ளன. இதனால், நீண்ட நேர பயணம் என்றாலும் சரி, சென்னை போக்குவரத்து நெரிசலில் பயணம் என்றாலும் சரி மிகவும் சிறப்பான பயண உணர்வை வழங்கும்.

இந்த காரில் இரட்டை கண்ணாடி கூரை அமைப்பு, 64 நிறங்களில் ஒளிரும் ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், லெதர் மற்றும் Suede பிரிமீயம் இன்டீரியர், எலக்ட்ரிக் ஸ்லைடிங் வசதியுடன் கூடிய கதவுகள் என பல வசதிகள் உள்ளன. மேலும் 12.23 அங்குல திரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதிகளும் உள்ளன. 13 ஸ்பீக்கர்களுடன் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டமும் உள்ளது.

MG M9 EV Car

அதிக ரேஞ்ச் தரும் பேட்டரி

எம்ஜி எம்9 சொகுசு எலெக்ட்ரிக் காரில் 90kWh பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. முன்புறத்தில் பொருத்தப்பட்டுள்ள எலெக்ட்ரிக் மோட்டார் அதிகபட்சமாக சுமார் 245எச்பி பவர் மற்றும் 350என்எம் டார்க்கையும் வழங்குகிறது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் ARAI சான்றுப்படி 548 கிமீ வரை ரேஞ்ச் கிடைக்கும் என்று எம்ஜி நிறுவனம் கூறுகிறது.

இந்த காரின் பேட்டரி 160kW டிசி ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தினால் 0 முதல் 100 சதவீதம் வரை 90 நிமிடங்களில் சார்ஜ் செய்ய முடியும். 11kW ஏசி சார்ஜரில் முழுமையாக சார்ஜ் செய்ய 10 மணி நேரம் தேவைப்படுகிறது. இந்த காரில் 7 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, பார்க்கிங் சென்சார்கள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல், டயரில் காற்றழுத்தத்தை கண்காணிக்கும் டிபிஎம்எஸ் வசதிகளும் உள்ளன.

MG M9 EV Car

அதோடு லெவல் 2 ADAS தொகுப்பும் இடம்பெற்றுள்ளது. முன்னால் செல்லும் வாகனத்திற்கு தக்கவாறு வேகத்தை தானியங்கி முறையில் கட்டுப்படுத்தும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், தடம் மாறுதல் குறித்த எச்சரிக்கை வழங்கும் வசதி, முன்புற மோதல்களை தவிர்க்கும் வசதிகளும் உள்ளன. ஐரோப்பிய க்ராஷ் டெஸ்ட்டில் 5 நட்சத்திர பாதுகாப்பு தர மதிப்பீட்டையும் பெற்றுள்ளது.

தமிழக அரசியலில் புதிய தலைமுறையினரின் வருகையால் கவனம் அதிகரித்து வரும் நிலையில், சட்டப்பேரவையில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கி வருகிறார் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர். அதேபோல், பாரம்பரிய பெட்ரோல் அல்லது டீசல் சொகுசு கார்களுக்கு மாற்றாக, சுற்றுச்சூழல் மாசுபடுவதை குறைக்கும் வகையில், எலெக்ட்ரிக் எம்பிவி காரை அவர் பயன்படுத்தி வருகிறார்.

Article Published On: Tuesday, September 15, 2026, 15:39 [IST]
English summary
Tn assembly speaker jcd prabhakar mg m9 ev luxury car price range features specifications
மேலும்... #mg motor #tamilnadu #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X