TN ரிஜிஸ்ட்ரேஸனை பார்த்தாலே ஃபைன் போடுவாங்க போல! கேரள அதிகாரிகளின் லட்சணத்தை வீடியோவாக வெளியிட்ட தமிழன்!
தமிழகத்திலிருந்து கேரளா சென்ற பொலிரோ காருக்கு மாடிஃபிகேஷன் செய்யப்பட்டதால், கேரளா மாநில போக்குவரத்து துறை அதிகாரிகள் அபராதம் விதித்ததாகவும், அதே நேரம் கேரளப்பதிவு எண்ணில் வந்த அதே மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட காரை அபராதம் விதிக்காமல் விட்டதாகவும் சமூக வலைதளங்களில் தற்போது வீடியோ ஒன்று வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவுக்கு பின்னால் இருக்கும் உண்மை என்னை யார் மேல் தவறு இருக்கிறது என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
சமூக வலைதளங்களில் அவ்வப்போது வாகன தணிக்கையில் சட்டவிரோதமாக செயல்படும் வாகனங்களுக்கு மோட்டார் வாகன அதிகாரிகள் அபராதம் விதிக்கும். சம்பவம் வீடியோவாக வெளியாகி வைரலாக பரவும். இதில் சில நேரம் வாகன ஓட்டிகள் மீது தவறி இருக்கும். சில நேரம் அபராதம் விதித்த அதிகாரிகள் மீது தவறு இருக்கும். இப்படியாக ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோ எம்பிஎஸ் முருகேசன் என்ற பெயரில் உள்ள பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பக்கத்தை சென்று பார்க்கும் போது அவர் ஏற்கனவே டிராவல்ஸ் நடத்தி வருவது நமக்கு தெரிகிறது. இதனால் அவர் போக்குவரத்து ஃபீல்டில் இருப்பதால் இந்த மோட்டார் வாகன சட்டம் ஓரளவுக்கு தெரிந்தவராக இருக்க வாய்ப்புள்ளது. இவர் பகிர்ந்துள்ள வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோவில் பேசுபவர் கேரள மாநில அதிகாரிகள் இவர்கள் சென்ற காரை மடக்கி பிடித்து இவர்கள் மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட அலாய் வீல்களை பொருத்தியதாலும், வாகனத்தின் பின்பக்கம் உள்ள நம்பர் பிளேட்டை மோட்டார் வாகன சட்டப்படி பொருத்தப்படவில்லை என்பதாலும், வாகனத்தின் கண்ணாடிகளில் ஒட்டப்பட்டுள்ள சன் ஃபிலிம் விதிமுறைகளை மீறி ஒட்டப்பட்டுள்ளதாலும் இவை அனைத்திற்கும் சேர்த்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இதன்படி இவர் வாகனத்தில் மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட ஒரு வீலுக்கு ரூபாய் 5000 வீதம் பொருத்தப்பட்டுள்ள நான்கு வீல் போக வாகனத்தின் பின்னால் உள்ள ஐந்தாவது வீலுக்கும் சேர்த்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுபோக நம்பர் பிளேட் மற்றும் சன் ஃபிலிம் ஆகியவற்றிற்கும் சேர்த்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஒட்டுமொத்தமாக அபராத தொகை எவ்வளவு என்ற விபரம் வீடியோவில் தெரிவிக்கப்படவில்லை.
இந்த வீடியோவில் இவர் இறுதியாக இதே போன்ற மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட வீல்களுடன் வந்த ஃபார்ச்சூனர் காரை கேரள மாநில போக்குவரத்து துறை அதிகாரிகள் அபராதம் மிதிக்காமல் விட்டு விட்டதாகவும் தமிழ்நாட்டு வாகனத்திற்கு மட்டும் அபராதம் விதிப்பதாகவும், கேரள மாநில அதிகாரிகள் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும் புகார் தெரிவித்து இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவுக்கு பின்னால் உள்ள உண்மை விபரங்களை இனி காண்போம்.

மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட வீல்களை பயன்படுத்துவது மோட்டார் வாகன சட்டப்படி தண்டனையான விஷயம் கிடையாது. ஆனால் என்ன அளவிலான வில்களை பயன்படுத்துகிறோம் என்ற விதிமுறை இருக்கிறது. குறிப்பிட்ட வாகனத்திற்கு ஃபேக்டரி ஃபிட்டிங்கில் வரும்போது எத்தனை இன்ச் அளவு கொண்ட வீல் பொருத்தப்படுகிறதோ அதே அளவு கொண்ட அலாய் வீலை பயன்படுத்தினால் அதில் எந்தவிதமான பிரச்சினையும் கிடையாது. அதைவிட கூடுதல் அல்லது குறைவான அளவு கொண்ட வீல்களை பயன்படுத்தும் போது பிரச்சனை ஏற்படும்.
குறிப்பிட்ட இந்த வீடியோவில் பொலிரோ காரில் பொருத்தப்பட்டுள்ள முன்பக்க வீல்களை பார்க்கும்போது அது வாகனத்தின் பாடி பகுதிக்கும் வெளியில் நீட்டி கொண்டு இருப்பதாக தெரிகிறது. இது சட்டப்படி தவறான ஒரு விஷயமாகும். இப்படியாக பாடிக்கு வெளியே டயர் நீட்டிக் கொண்டிருக்கும்போது இந்த கார் சேல்ஸ் சகதி நிறைந்த பாதைகளில் பயணித்தால் இந்த வாகனத்தின் அருகே வருபவர்கள் மீது சேற்றை வாரி இறைக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளன.

இது சட்டப்படி தவறான ஒரு விஷயம் தான். ஆனால் இந்த வீடியோவில் உள்ள படி இந்த பொலிரோ காரின் முன் பக்க வீல்கள் மட்டுமே பாடிக்கு வெளியே இருக்கிறது. பின்பக்க வீல்கள் வெளியே இல்லை பாடிக்கு உள்ளே தான் இருக்கிறது. அதனால் அந்த வீல்களுக்கு அபராதம் விதிப்பது முறை கிடையாது.
இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள நம்பர் பிளேட்டை பார்க்கும் போது வாகனத்தின் பின்பக்கம் உள்ள நம்பர் பிளேட்டை கட்டாயம் ஸ்க்ரூ கொண்டு பொருத்தப்பட வேண்டும் என்ற மோட்டார் வாகன சட்டம் இருக்கிறது. ஆனால் இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள நம்பர் பிளேட்டை பார்க்கும் போது ஸ்க்ரூ பொருத்தப்படவில்லை. இதனால் இது சட்டப்படி தவறான விஷயம் தான். இதற்கு மோட்டார் வாகன அதிகாரிகள் அபராதம் விதித்ததும் சரியான விஷயம் தான்.
வாகனத்தின் சன் ஃபிலிமை பொறுத்தவரையில் வீடியோவில் சன் ஃபிலிம் எந்த அளவிற்கு மோட்டார் வாகன சட்டப்படி இருக்கிறது என்பதை தெளிவாக காட்டவில்லை. இதனால் இது குறித்த கருத்துக்களை நாம் வீடியோவை வைத்து முடிவு செய்து விட முடியாது. என்ன இருந்தாலும் இந்த வாகனத்தின் பின்பக்க டயர்களுக்கும் சேர்த்து அபராதம் விதித்து இருந்தால் அது போக்குவரத்து துறை அதிகாரிகள் செய்த தவறுதான்.
அடுத்ததாக இந்த வீடியோவில் பேசுபவர் சொல்லும் புகாரின் படி கேரள பதிவில் கொண்ட மற்றொரு ஃபார்ச்சூனர் காரில் இதே போன்ற மாடிஃபிகேசன் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதை போக்குவரத்து அதிகாரிகள் அபராதம் விதிக்காமல் விட்டுவிட்டார்கள் என புகார் கூறுகிறார். இதையும் நாம் சற்று அலசி பார்க்க வேண்டும். இதில் முதல் புகார் என்னவென்றால் வாகனத்தின் முன்பக்கம் எக்ஸ்ட்ரா மஞ்சள் நிற லைட்டுகள் பொருத்தப்பட்டு இருப்பதாக குறிப்பிடுகிறார்.
நாம் இந்த வீடியோவில் பார்த்தது படி இந்த பார்ச்சூனர் காரில் முன்பக்கம் லைட் பொருத்தப்பட்டிருந்தாலும் அது முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது. இது மோட்டார் வாகன படி சரியான விஷயம் தான். இப்படியாக லைட் மூடப்பட்டு இருந்தால் அதற்கு அபராதம் விதிக்க முடியாது. இது சட்ட விதிமுறை மீறல் கிடையாது. இதற்காக மோட்டார் வாகன விதிமுறையை மீறியதாக அந்த பார்ச்சூனர் காரின் உரிமையாளர் மீது அபராதம் விதிக்க வாய்ப்பில்லை.
அடுத்ததாக ஃபார்ச்சூனர் காரில் செய்யப்பட்டுள்ள அலாய் வீல் மாடிஃபிகேஷனை பொருத்தவரை அந்த காரின் பாடி பேனலை விட்டு வெளியே வராத சைஸில்தான் பொருத்தப்பட்டுள்ளதாக நமக்கு வீடியோவில் தெரிகிறது. இருந்தாலும் வீடியோ தெளிவாக இல்லாததால் இதை நம்மால் உறுதி செய்ய முடியவில்லை. மோட்டார் வாகன அதிகாரிகள் சோதனை செய்யும் போது அதை அந்த அலாய் வீல்கள் பாடி பேனலுக்கு வெளியே வராத நிலையில் இருந்தால் அது முற்றிலும் சட்டபூர்வமாக செய்யப்பட்ட மாடிஃபிகேஷன்.
இதனால் இந்த வீடியோவில் சொன்னது படி கேரள மாநில வாகனங்களுக்கு அபராதம் விதிக்காமல் தமிழ்நாடு வாகனங்களை குறி வைத்து கேரளா அதிகாரிகள் அபராதம் விதிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டிற்கு இங்கு போதுமான ஆதாரங்கள் எதுவுமே கிடையாது. இவர்கள் பயணித்த வாகனம் முன்பக்க வீல்கள் நம்பர் பிளேட் உள்ளிட்ட விஷயங்கள் எல்லாம் மோட்டார் வாகன சட்டத்தை மீறியதாகவே இருக்கிறது. அதே நேரம் பின்பக்க வீல்கள் சட்ட விரோதமாக பொருத்தப்படவில்லை எனவும் தெரிகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகன ஓட்டிகள் பலருக்கு இந்த வாகனங்களை மாடிஃபிகேஷன் செய்வதில் உள்ள சட்ட சிக்கல்கள் குறித்த போதுமான விழிப்புணர்வு இல்லை. குறிப்பாக அலாய் வீல் விவகாரத்தில் பலர் தவறான புரிதலை கொண்டிருக்கிறார்கள். அலாய் வீல் மாற்றுவதே சட்டவிரோதமானது என கருதுகிறார்கள். ஆனால் சட்டம் அப்படி சொல்லவில்லை. அதன் அளவுகளில் மட்டுமே .கட்டுப்பாடுகளை வைத்துள்ளது. இதனால் நீங்களும் உங்கள் காரில் இது போன்ற சட்டவிரோதமான மாடிஃபிகேஷன் எதையும் செய்யாமல் இருங்கள்.


Click it and Unblock the Notifications









