வந்தே பாரத் எல்லாம் ஓரம் போ! 150 கி.மீ தூரத்தை வெறும் 60 நிமிடங்களில் கடக்கும் ரயிலை கொண்டு வரும் தமிழக அரசு
தமிழக பட்ஜெட்டில் தற்போது டெல்லி - மீரட் இடையே இயங்கி வரும் ஆர்ஆர்டிஎஸ் ரயில் போல தமிழக அரசு தமிழகத்தில் ஒரு ரயில்வே பாதையை உருவாக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சற்று தொலைவில் உள்ள இரண்டு நகரங்களை இணைக்கும் விதமாக இந்த ரயில்வே நெட்வொர்க் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
தமிழக அரசு சார்பில் தற்போது 2025-26ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் ஏகப்பட்ட புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அதில் முக்கியமான அறிவிப்பு தமிழக அரசு சார்பில் தமிழகத்தில் ஆர்ஆர்டிஎஸ் போன்ற ரயில் பாதை ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ஆர்டிஎஸ் ரயில் பாதை என்றால் என்ன? சாதாரண ரயிலுக்கும், இந்த ரயிலுக்கும் என்ன வித்தியாசம்? முழுமையான விபரங்களை இங்கே காணலாம் வாருங்கள்.

தற்போது மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள ரயில்வே நெட்வோர்க் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கட்டமைக்கப்பட்டது. அப்பொழுது உள்ள நகரப்புகளை மையமாக வைத்து ரயில் பாதைகள் போடப்பட்டுள்ளன. மேலும் நீண்ட தூரங்களில் இருக்கும் நகரங்களை இணைக்கும் வகையில் இந்த ரயில் பாதைகள் போடப்பட்டது. இந்நிலையில் இந்த பாதைகளில் ரயில்கள் எல்லாம் தற்போது தீவிரமாக இயங்கி வருகிறது.
இந்நிலையில் இதற்கு மாற்றாக ஒரு சிட்டிக்குள்ளேயே வேகமாக பயணிக்க மெட்ரோ ரயில்கள் கொண்டு வரப்பட்டன. இந்த மெட்ரோ ரயில்கள் சிட்டி பயன்பாட்டிற்கு மட்டுமே தற்போது உதவி வருகிறது. இதுவும் பெரிய வெற்றி பெற்ற திட்டமாக மாறியுள்ளது. இந்நிலையில் சற்று தொலைவில் உள்ள இரண்டு நகரங்களுக்கு இடையேயான வேகமான பயணத்திற்கு இதுவரை ரயில் வசதிகள் பெரிய அளவில் இல்லை.

இந்நிலையில் இந்தியாவிலேயே முதன் முறையாக ரீஜினல் ரேப்பிட் டிரான்சிஸ்ட் சிஸ்டம் என்ற ஆர்ஆர்டிஎஸ் முறையில் ரயில் பாதை ஒன்று டில்லி - மீரட் பகுதியில் தற்போது செயல்பட்டு வருகிறது. இது சுமார் 100 - 200 கீமீ தூரம் உள்ள நகரங்களை இணைப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. ஆர்ஆர்டிஎஸ் என்பது டில்லியை மையமாக கொண்டு சுற்றியுள்ள நகரங்களை இணைப்பதற்காக கொண்டு வரப்பட்டதிட்டமாகும்.
இந்த ரயிலுக்காக தனியாக பாதை அமைக்கப்படுகிறது. இந்த ரயில் மணிக்கு 180 கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கும். இதற்காக அமைக்கப்படும் பாதையில் எந்த குறுக்கீடும் இல்லாத வகையில் வடிவமைக்கப்படும். 180 கி.மீ வேகத்தில் தொடர்ந்து பயணிக்க நல்ல விசிபிளிட்டி இருக்கும் வகையில் பாதைகள் அமைக்கப்படும். இதற்காக அமைக்கப்பட்ட ரயில் பாதையில் வேறு ரயில்கள் பயணிக்காது.

இதனால் இந்த ரயில் அதிவேகமாக பயணிக்கும். அதே நேரம் இந்த ரயில்களின் உட்கட்டமைப்புகளும் சிறப்பாக இருகு்கும். ஒரே நேரத்தில் அதிகமான பயணிகளை ஏற்றி செல்ல முடியும். சுமார் 150 கி.மீ தூரத்தில் உள்ள நகரத்தை கூட வெறும் 60 நிமிடங்களில் சென்று சேரும் வகையில் இ்நத ரயில் பயணிக்கும். இது போன்ற ஒரு ரயில்வே சிஸ்டத்தை தமிழக அரசு தமிழகத்தில் கொண்டு வரப்போவதாக அறிவித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தமிழகத்தில் சென்னையை இணைக்கும் வகையில் இந்த ரயில் பாதை திட்டமிடப்படலாம். தற்போது வந்தே பாரத் ரயில் என்னதான் 160 கி.மீ வேகத்தில் பயணிக்கும் என்றாலும் எல்லா இடத்திலும் அதற்கான சாத்தியம் குறைவு தான். ஆனால் இந்த ரயில் வந்தே பாரத்தை மிஞ்சும் அளவிற்கு சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









