ரூ.3 கோடி செலவில் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வரும் 3 தொடர்வண்டிகள்... தமிழக அரசு ஒப்புதல்..!!
ரூ.3 கோடி செலவில் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வரும் 3 தொடர்வண்டிகள்... தமிழக அரசு ஒப்புதல்..!!
வண்டலூர் உயிரியல் பூங்காவில் 40 பேர் இருக்கைக்கொண்ட புதிய நான்கு சிறிய தொடர்வண்டிகள் வாங்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

சென்னையை அடுத்துள்ள தாம்பரம் அருகே வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா அமைந்துள்ளது.
1300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இது இந்தியாவின் பெரிய உயிரியல் பூங்காவாக திகழ்கிறது.

1657க்கும் மேற்பட்ட விலங்குகள் உள்ள இந்த பூங்காவை காண, ஆண்டிற்கு சுமார் 5 கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர்.
Recommended Video


இந்தியாவில் பெரிய பிரபலத்துவம் பெற்றுள்ள வண்டலூர் பூங்காவை மேம்படுத்தப்பட தமிழக அரசு தற்போது நிதி ஒதுக்கியுள்ளது.

சமீபத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற 19வது ஆட்சி மன்றக் குழுக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, வண்டலூர் பூங்கா உட்பட கிண்டி சிறுவர் பூங்கா மற்றும் சேலம் குரும்படி பூங்கா ஆகியவற்றை மேம்படுத்த ரூ.9.12 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் ரூ.3 கோடி செலவில் 40 இருக்கைகள் கொண்ட நான்கு சிறிய தொடர்வண்டிகள் வாங்கப்படவுள்ளன.

தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளமாக மாறியுள்ள வண்டலூர் பூங்காவில், இனி விலங்குகளை பார்வையாளர்கள் தொடர்வண்டியிலேயே சுற்றி பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








