முதல்வர் பாதுகாப்பு படையில் 6 இன்னோவா கார்கள்! இதுல இவ்வளவு வசதிகள் இருக்குதா?

தமிழக முதல்வர் ஸ்டாலினின் பாதுகாப்பு பணிக்காக இன்று முதல் ஆறு புதிய கருப்பு நிற இன்னோவா கார்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இந்த கார்களை முதல்வரின் பாதுகாப்பு படையில் இருக்கும் படைவீரர்கள் பயன்படுத்துகின்றனர். இந்த கார் பாதுகாப்பு படை வீரர்களுக்காக கஸ்டமைஸ்டு செய்யப்பட்ட காராக இருக்கிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் பாருங்கள்.

ஒரு மாநிலத்தில் முதல்வர் என்றால் அது மாநிலத்திலேயே மிக முக்கியமான மிகப் பெரிய பொறுப்பாக இருக்கிறது. இதனால் இந்த பொறுப்பில் இருக்கும் நபர்களுக்கு எந்த நேரம் வேண்டுமானாலும் ஆபத்து இருப்பதால் அவர்களுக்கு எப்பொழுதும் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டு கொண்டே இருக்கும். அவர்கள் எங்கு சென்றாலும் அவர்களுடன் செல்ல பாதுகாப்பு படை வீரர்களும் தனியாக வேறு ஒரு காரில் பயணம் செய்வார்கள்.

TN CM Stalin Security Black Innova

இப்படியாக தமிழக முதல்வராக இருக்கும் ஸ்டாலினுக்கு தற்போது பாதுகாப்பு படை வீரர்கள் செல்வதற்காக புதிய ஆறு இன்னோவா கார்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த கார்கள் எல்லாம் கருப்பு நிற இன்னோவா கார்களாக இருக்கிறது. இந்த கார்கள் அனைத்தும் பாதுகாப்பு படை வீரர்கள் பயன்படுத்தும் தொழில்நுட்ப வசதிகள் பொருத்தப்பட்ட காராக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார்கள் அனைத்தும் இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இந்த ஆறு இன்னோவா கார்களிலும் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் முதல்வர் எங்கு பயணம் செய்தாலும் அவர்கள் பயணம் செய்யும் பாதையை முழுமையாக அந்த கேமராக்கள் பதிவு செய்து கொண்டே வரும் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அந்த கேமராக்கள் மூலம் பிரச்சனை செய்த நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வசதியாக இருக்கும் என்பதால் இந்த கேமராக்களை பொருத்தியுள்ளனர்.

TN CM Stalin Security Black Innova

அடுத்ததாக இந்த கார்களில் எல்லாம் ஜாமர் கருவிகள் இருக்கிறது. முதல்வர் பயணத்தின் போது எப்பொழுது வேண்டுமானாலும் ரிமோட் மூலம் எடுக்கக்கூடிய வெடிகுண்டு பொருத்தப்பட்டு ஆப்பரேட் செய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதால் இந்த ஜாமர்கள் மிக முக்கிய பங்கு வைக்கின்றன. இந்த ஜாமர்களை பாதுகாப்பு படை வீரர்கள் ஆன் செய்து விட்டால் அருகில் உள்ள எந்த ஒரு வயர்லெஸ் மூலமாக சிக்னல்களும் செயல்படாமல் தடுக்கப்பட்டு விடும்.

நகர் பகுதியில் முதல்வர் பயணிக்கும் போது கார் மெதுவாக பயணிக்கும் அப்பொழுது எப்பொழுது வேண்டுமானாலும் மக்கள் குறுக்கே வரலாம் அல்லது முதல்வரை நெருக்கலாம் என்ற சூழ்நிலை இருக்கும் போது எப்பொழுதும் பாதுகாப்பு படை வீரர்கள் உடனடியாக முதல்வர் அருகே சென்று பாதுகாப்பு வழங்க வேண்டிய சூழ்நிலையில் அவர்கள் காரில் வெளியில் தொங்கியபடியே பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கும்.

அப்படியாக பயணம் செய்வதற்கு இந்த 6 கார்களிலும் வெளிப்புறத்தில் படிக்கட்டுகள் மற்றும் அவர்கள் பிடித்து செல்வதற்கு மேலே ரூஃப் ரெயில்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இந்த கார் சற்று மாடிஃபிகேஷன் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒரே நேரத்தில் எத்தனை படை வீரர்கள் வேண்டுமானாலும் காருக்குள் இல்லாமல் காரில் வெளியில் தொங்கியபடியே பயணம் செய்ய முடியும்.

இந்த கார்கள் எல்லாம் முதல்வரின் பாதுகாப்பு படையில் உள்ள கார்கள் என்பதாக அனைத்தும் கருப்பு நிறத்தில் கஷ்டமைஸ்டு செய்து பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. மேலும் கார்களில் முன்பக்கம் பைலட் என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த கார்கள் எல்லாம் முதல்வரின் பாதுகாப்பு படை வீரர்கள் பயன்படுத்தும் கார்கள் என்பதை நாம் எளிதாக அறிந்து கொள்ள முடியும்.

இனி தமிழக முதல்வர் எங்கு பயணம் செய்தாலும் அவர்களுக்கு பாதுகாப்பு படைக்காக இந்த கருப்பு நிற இனோவா கார் பயணம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தான் பாதுகாப்பு படை வீரர்கள் பயணம் செய்து முதல்வருக்கு தேவையான அனைத்து விதமான பாதுகாப்புகளையும் வழங்குவார்கள் என கூறப்பட்டுள்ளது. டொயோட்டா நிறுவனம் அரசு பயன்பாட்டிற்கு வழங்குவதற்காகவே சிறப்பு வேறு என்று கார் ஒன்றை தயாரித்து வருகிறது. அதில் ஒன்று தான் இந்த கார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா கார் என்பது அரசியல்வாதிகள் உட்பட அரசு அதிகாரிகள் என பலரும் பயணம் செய்ய ஏற்ற காராக இருக்கிறது. ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான நபர்கள் சொகுசாக பயணம் செய்யலாம். அதிக பொருட்களை எடுத்துச் செல்லலாம் என்பதால் இந்த காரை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில் தான் தமிழக முதல்வருக்கு பாதுகாப்பு வழங்கும் பாதுகாப்பு படையினருக்கும் இந்த கார் வழங்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, January 1, 2024, 19:15 [IST]
English summary
Tn cm stalin security black innova defensive fleet change
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+