பரபரப்பான சூழலில் பரபரப்பாக வந்து போகும் ஆளுனர் வித்யாசாகர் பயன்படுத்தும் கார்!

தமிழக பொறுப்பு ஆளுனர் வித்யாசாகர் ராவ் பயன்படுத்தும் மெர்சிடிஸ் பென்ஸ் கார் குறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

கடந்த ஆண்டு இதே நாளில் துவங்கிய, தமிழக அரசியல் சூழலின் பரபரப்பு இன்னும் ஓய்தபாடில்லை. அதிலும், கவர்னர் வித்யாசாகர் ராவ் வருகிறார் என்றால், பரபரப்பு ஒரு படி மேலே கூடிவிடுகிறது. இந்த பரபரப்பானது, அரசியல் கட்சிகளுக்கும், ஊடகங்களுக்கும் தானே தவிர்த்து, கவர்னருக்கு இல்லை என்பது பலருக்கும் புரிந்த உண்மைதான்.

ஆளுனர் வித்யாசாகர் பயன்படுத்தும் கார்!

பழுத்த அரசியல் அனுபவம் வாய்ந்த வித்யாசாகர் ராவ் எந்தவொரு பரபரப்பான சூழலிலும் மிக மிக நிதானமாகவே இருக்கிறார். இந்த நிலையில், அவர் தமிழகத்துக்கு வரும்போது பயன்படுத்தும் பென்ஸ் கார் பற்றிய தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

ஆளுனர் வித்யாசாகர் பயன்படுத்தும் கார்!

தமிழகத்தின் பொறுப்பு ஆளுனராக செயல்பட்டு வரும் வித்யாசாகர் ராவ் மராட்டிய மாநிலத்தையும் சேர்த்து கவனித்து வருகிறார். எனவே, அவர் அடிக்கடி இரு மாநிலங்களுக்கு இடையிலும் பறந்து கொண்டிருக்கிறார். தமிழகத்துக்கு வரும்போது அவர் பயன்படுத்துவது மெர்சிடிஸ் பென்ஸ் ஆர் க்ளாஸ் என்ற கார் மாடல்தான்.

ஆளுனர் வித்யாசாகர் பயன்படுத்தும் கார்!

சொகுசு ரக எம்பிவி கார் மாடலையே அவர் பயன்படுத்துகிறார். இந்த கார் பற்றிய சுவாரஸ்யத் தகவல்களையும், தொழில்நுட்ப விபரங்களையும் இந்த செய்தியில் காணலாம்.

ஆளுனர் வித்யாசாகர் பயன்படுத்தும் கார்!

கடந்த 2002ம் ஆண்டு டெட்ராய்ட் ஆட்டோஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த மெர்சிடிஸ் பென்ஸ் விஷன் ஜிஎஸ்டி கான்செப்ட் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கார் மாடல் ஆர் க்ளாஸ். மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் முழுமையான முதல் எம்பிவி கார் மாடலாகவும் குறிப்பிடப்படுகிறது. கடந்த 2006ம் ஆண்டில் சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஆளுனர் வித்யாசாகர் பயன்படுத்தும் கார்!

உலகிலேயே அமெரிக்காவின் அலபாமாவிலுள்ள வான்ஸ் என்ற இடத்தில் உள்ள பென்ஸ் ஆலையில் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவில் இந்த கார் இறக்குமதி செய்தே விற்பனை செய்யப்பட்டது.

ஆளுனர் வித்யாசாகர் பயன்படுத்தும் கார்!

இந்த கார் 2,980மிமீ மற்றும் 3,215மிமீ என இரண்டுவிதமான வீல் பேஸ் கொண்ட மாடல்களில் விற்பனைக்கு வந்தது. இதில், 2,980 மிமீ வீல் பேஸ் கொண்ட மாடல்தான் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டது. மற்றொரு வீல்பேஸ் மாடல் அமெரிக்காவில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது.

ஆளுனர் வித்யாசாகர் பயன்படுத்தும் கார்!

இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டது. பெட்ரோல் மாடலில் 272 பிஎச்பி பவரையும், 357 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்த 3.5 லிட்டர் வி6 எஞ்சினும், டீசல் மாடலில் 261 பிஎச்பி பவரையும், 618 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல 3.0 லிட்டர் வி6 எஞ்சினும் பொருத்தப்பட்டு இருந்தது.

ஆளுனர் வித்யாசாகர் பயன்படுத்தும் கார்!

இந்த காரில் 7 ஸ்பீடு ஜி ட்ரோனிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டது. பெட்ரோல் மாடல் அதிகபட்சமாக மணிக்கு 229 கிமீ வேகம் வரையிலும் டீசல் மாடல் 209 கிமீ வேகம் வரையிலும் செல்லும் திறன் பெற்ற எம்பிவி கார் மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆளுனர் வித்யாசாகர் பயன்படுத்தும் கார்!

மெர்சிடிஸ் பென்ஸ் ஆர் க்ளாஸ் கார் ஓட்டுனரை சேர்த்து 7 பேர் செல்வதற்கான இருக்கை வசதி கொண்டது. ஒவ்வொரு இருக்கைகளுக்கும் தனி பொழுதுபோக்கு திரை வசதிகளும் கொடுக்கப்பட்டிருக்கும்.

ஆளுனர் வித்யாசாகர் பயன்படுத்தும் கார்!

அமெரிக்காவில் நடத்தப்பட்ட க்ராஷ் டெஸ்ட் சோதனைகளிலும் சிறப்பான மதிப்பீடுகளை பெற்ற பாதுகாப்பான கார் மாடல். இந்த காரில் இருக்கும் ப்ரீ சேஃப் என்ற பாதுகாப்பு நுட்பம், கார் மோதப் போகிறது என்பதை சென்சார்கள் மூலமாக உணர்ந்து கொண்டு சீட் பெல்ட்டுகளை இறுக செய்யும். சன்ரூஃப் மற்றும் கண்ணாடிகள் திறந்திருந்தால் தானாக மூடிக்கொள்ளும்.

ஆளுனர் வித்யாசாகர் பயன்படுத்தும் கார்!

பார்க்கிங் செய்யும்போது முன்னால் இருக்கும் பொருட்கள் குறித்து எச்சரிக்கும் வசதியும் உண்டு. இந்த காரின் டெயில் கேட்டை ஒரு பட்டனை தட்டினால் திறந்து கொள்ளும். இந்த காரில் தெர்மோட்ரோனிக் என்ற நவீன ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளது.

ஆளுனர் வித்யாசாகர் பயன்படுத்தும் கார்!

வெளிப்புற வெப்ப நிலைக்கு தக்கவாறு உட்புறத்தில் குளிர்ச்சியை தக்க வைக்கும். அத்துடன், பயணிகள் தங்களுக்கு விருப்பமான அளவில் குளிர்ச்சியை வைத்துக் கொள்வதற்கு இது உதவுவதுடன், கார்பன் மோனாக்சைடு அல்லது நைட்ரஜன் ஆக்சைடு அளவு கேபினுக்குள் அதிகரித்தால், உடனடியாக ரீ சர்க்குலேசன் மோடு தானியங்கி முறையில் இயங்க ஆரம்பித்துவிடும்.

ஆளுனர் வித்யாசாகர் பயன்படுத்தும் கார்!

அதிக இடவசதி, பாதுகாப்பு வசதிகள், சக்திவாய்ந்த எஞ்சின், சொகுசு அம்சங்கள் நிறைந்த இந்த கார் ரூ.61 லட்சம் முதல் ரூ.71 லட்சம் வரையிலான விலையில் இந்தியாவில் விற்பனைக்கு கிடைத்தது. இறக்குமதி செய்யப்பட்டதால் விலை அதிகம் நிர்ணயிக்க வேண்டிய நிர்பந்தம்.

ஆளுனர் வித்யாசாகர் பயன்படுத்தும் கார்!

இதனால், இந்த காரின் விற்பனை சொல்லிக் கொள்ளும்படி இல்லை. எஸ்யூவி கார்களுக்கான மகிமையும் தொடர்ந்து அதிகரித்ததால், கடந்த 2013ம் ஆண்டில் இந்தியாவிலிருந்து விலக்கப்பட்டது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
TN Governer Vidyasagar Rao Mercedes Benz R Class Car - Special Review.
Story first published: Friday, September 22, 2017, 13:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X