அவசர அவசரமாக மஞ்சள் கலருக்கு மாற்றப்படும் தமிழக அரசு பஸ்கள்! தோண்ட தோண்ட வெளிவரும் ரகசியங்களால் மக்கள் ஷாக்!

தமிழகத்தில் தற்போதைய நிலையில் அரசு பஸ்கள் (Government Buses) பல்வேறு நிறங்களில் (Colours) இயக்கப்பட்டு வருகின்றன. பச்சை, வெள்ளை மற்றும் நீலம் நிற பஸ்களை நீங்கள் சாலைகளில் அதிகளவில் காண முடியும். ஆனால் அரசு பேருந்துகளின் நிறம் அவ்வப்போது மாற்றப்படுவது வழக்கம்.

இதன்படி தமிழக அரசு பஸ்கள் தற்போது மஞ்சள் (Yellow) நிறத்திற்கு மாற்றப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை நிரூபிக்கும் வகையில், மஞ்சள் நிற தமிழக அரசு பஸ்களின் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. சமூக வலை தளங்களில் தற்போது அந்த புகைப்படங்கள் வைரல் (Viral) ஆகி கொண்டுள்ளன.

TN Yellow Bus

தமிழக அரசு பஸ்கள் மஞ்சள் நிறத்திற்கு மாற்றப்பட்டு வருவதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. வெறும் அழகிற்காக மட்டுமல்லாது, இதற்கு பின்னால் பாதுகாப்பு காரணங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதாவது வேறு எந்தவொரு நிறத்தை விடவும், மஞ்சள் நிறம் ஒருவரின் கவனத்தை வேகமாக ஈர்த்து விடும்.

அனைவரின் பார்வைக்கும் எளிதாக புலப்படும் வகையில் இருந்தால் மட்டுமே சாலை விபத்துக்களை குறைக்க முடியும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். எனவே பஸ்களை மஞ்சள் நிறத்திற்கு மாற்றுவதன் மூலம், தமிழகத்தில் சாலை விபத்துக்களின் (Road Accidents) எண்ணிக்கையை குறைக்க அரசு விரும்புவதாக கூறப்படுகிறது.

TN Government Bus

ஸ்கூல் பஸ்களை (School Buses) நீங்கள் கவனித்து பார்த்தால், உங்களுக்கு ஒரு விஷயம் புலப்படும். ஸ்கூல் பஸ்கள் அனைத்தும் மஞ்சள் நிறத்தில்தான் இருக்கும். பார்வைக்கு எளிதாக புலப்படும் என்பதால், சாலை விபத்துக்களை தவிர்க்க முடியும் என்பதுதான் ஸ்கூல் பஸ்கள் மஞ்சள் நிறத்தில் இருப்பதற்கு மிக முக்கியமான காரணம்.

எனவேதான் ஸ்கூல் பஸ்களை போலவே, அரசு பஸ்களும் மஞ்சள் நிறத்திற்கு மாறி வருவதாக தெரிகிறது. ஆனால் இதற்கு பின்னால் அரசியல் காரணங்களும் கூட இருக்கலாம் என விபரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். உண்மையை சொல்லப்போனால் இது பச்சை VS மஞ்சள் அரசியல் என்பதே அவர்களின் கருத்து.

தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளான அதிமுக (ADMK) மற்றும் திமுக (DMK) ஆகியவை நிறத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடியவையாக உள்ளன. அதிமுக பச்சை நிறத்திற்கும், திமுக மஞ்சள் நிறத்திற்கும் அதிக முக்கியத்துவம் வழங்கும். முதலில் அதிமுகவை எடுத்து கொள்ளலாம். அதிமுகவின் சின்னமான இரட்டை இலை பச்சை நிறத்தில்தான் இருக்கும்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா (Jayalalitha) பச்சை நிற சேலை அணிவதை மிகவும் விரும்ப கூடியவர். எனவே அதிமுகவின் தேர்தல் பிரச்சார பொது கூட்ட மேடைகள் மற்றும் முக்கியமான கட்சி கூட்டங்களில் வைக்கப்படும் பேனர்கள் பெரும்பாலும் பச்சை நிறத்தில்தான் டிசைன் செய்யப்பட்டிருக்கும்.

மறுபக்கம் திமுக சின்னமான உதய சூரியனில் உங்களால் மஞ்சள் நிறத்தை பார்க்க முடியும். மறைந்த முன்னாள் முதல்வரான கருணாநிதி (Karunanidhi) எப்போதுமே மஞ்சள் துண்டு அணிந்திருப்பார். அவர் மஞ்சள் துண்டு அணியாத புகைப்படங்களை பார்ப்பது மிகவும் அரிது. அதேபோல் திமுகவின் தேர்தல் பிரச்சார பொது கூட்ட மேடைகள் மற்றும் கட்சி கூட்டங்களின் பேனர்களும் பெரும்பாலும் மஞ்சள் நிறத்தில்தான் இருக்கும்.

இதன் காரணமாகவே தமிழகத்தை தற்போது ஆட்சி செய்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் (M. K. Stalin) தலைமையிலான திமுக அரசு, பஸ்களை மஞ்சள் நிறத்திற்கு மாற்றும் பணிகளை தொடங்கியிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அதிமுக மற்றும் திமுக ஆகிய 2 கட்சிகளும் முறையே பச்சை மற்றும் மஞ்சள் நிறங்களை மக்கள் மனதில் பதிய வைப்பதன் மூலம் தங்களது கட்சிகளை வளர்க்க முடியும் என கருதுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பாதுகாப்பு காரணங்களுக்காக அரசு பஸ்களின் நிறத்தை மாற்றினால், அது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான். ஆனால் அரசியல் காரணங்களுக்காக மக்களின் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் செலவு செய்து, பஸ்களின் நிறத்தை மாற்றுவது சரியானது அல்ல. ஏனெனில் மறுபடியும் அதிமுக ஆட்சி அமைந்தால், பஸ்கள் மீண்டும் பச்சை நிறத்திற்கு மாறக்கூடும்!

More from DriveSpark

Article Published On: Thursday, July 13, 2023, 13:35 [IST]
English summary
Tn government buses colour change to yellow here is the real reason
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+