விரைவில் அறிமுகமாகும் பேருந்துகளுக்கான ஆப்... ஓலா, ஊபரை வீழ்த்த தமிழக அரசு அதிரடி!!!

ஓலா மற்றும் ஊபர் ஸ்மார்ட் ஆப்-பினை மிஞ்சும் வசதிக் கொண்ட ஆப்பினை தமிழக அரசு தயாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

விரைவில் அறிமுகமாகும் பேருந்துகளுக்கான ஆப்... ஓலா, ஊபரை வீழ்த்த தமிழக அரசு அதிரடி!!!

இந்தியாவில் வாகனங்களுக்கு நிலவும் வரவேற்பைப் போலவே, செல்போன்களுக்கும் நல்ல டிமாண்ட் நிலவி வருகின்றது. அந்தவகையில், உலக நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயனர்கள் அதிகமாக காணப்படுகின்றனர்.

விரைவில் அறிமுகமாகும் பேருந்துகளுக்கான ஆப்... ஓலா, ஊபரை வீழ்த்த தமிழக அரசு அதிரடி!!!

ஆகையால், பெருவாரியான நிறுவனங்கள் இந்தியாவில் அதன் புத்தம் புதிய ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

அதேபோன்று, ஸ்மார்ட்போன் வளர்ச்சியில் முக்கிய பங்கினை இணைய தள சேவை வகிக்கின்றது. ஆகையால், பெருவாரிய நிறுவனங்கள் இதனை மையமாகக் கொண்டே தங்களின் வர்த்தகத்தை தொடங்குகின்றனர்.

விரைவில் அறிமுகமாகும் பேருந்துகளுக்கான ஆப்... ஓலா, ஊபரை வீழ்த்த தமிழக அரசு அதிரடி!!!

இந்நிலையில், நாட்டில் கால் டாக்ஸி சேவையில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஓலா மற்றும் ஊபர் ஆகிய நிறுவனங்களின் மென்பொருளை மிஞ்சுகின்ற வசதி கொண்ட செல்போன் ஆப்பினை தமிழக அரசு தயார் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்த தகவலை ஆட்டோ எகனாமிக் டைம்ஸ் ஆங்கில செய்தி தளம் வெளியிட்டுள்ளது.

விரைவில் அறிமுகமாகும் பேருந்துகளுக்கான ஆப்... ஓலா, ஊபரை வீழ்த்த தமிழக அரசு அதிரடி!!!

தமிழக அரசின் இந்த புத்தம் புதிய ஆப் மற்ற கால் டாக்ஸி சேவை நிறுவனங்களின் மென்பொருளைக் காட்டிலும் சிறப்பானதாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓலா மற்றும் ஊபர் கால் டாக்ஸியை புக் செய்தால், நமக்கான வாகனம் எங்கிருக்கின்றது என்ற ஆப் நமக்கு திரை மூலம் காண்பிக்கும். அதுபோலவே, தமிழக அரசு தற்போது தயாரித்து வரும் இந்த புதிய ஆப்-பும், நமக்கான பேருந்து எங்கிருக்கின்றது என்ற தகவலை வழங்கும்.

விரைவில் அறிமுகமாகும் பேருந்துகளுக்கான ஆப்... ஓலா, ஊபரை வீழ்த்த தமிழக அரசு அதிரடி!!!

இதனை விரைவில், ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் இயங்குதளங்களில் இருந்து இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். லொகேட் அண்ட் அக்சஸ் மை பஸ் (LAMB) என்பதன் அடிப்படையில் இந்த ஆப் தயாரிக்கப்பட்டு வருகின்றது.

விரைவில் அறிமுகமாகும் பேருந்துகளுக்கான ஆப்... ஓலா, ஊபரை வீழ்த்த தமிழக அரசு அதிரடி!!!

அதேசமயம், இந்த ஆப் பேருந்துகளின் நேரடி இருப்பிடத்தை காண்பிப்பதுடன், அருகிலுள்ள பேருந்து நிறுத்தங்கள்குறித்த தகவலையும் நமக்கு வழங்கும். அத்துடன், எந்த பேருந்து எந்த இடத்திற்கும் செல்லும் என்பது போன்ற தகவலையும் வழங்கும்.

தொடர்ந்து, மெட்ரோ ரயில்களில் வழங்கப்படும் தகவல்களைப் போன்றே, அடுத்த ஐந்து நிறுத்தங்கள்குறித்த தகவலை, ஒரு பேருந்தில் பயணிக்கும்போது பெற்றுக் கொள்ள முடியும்.

விரைவில் அறிமுகமாகும் பேருந்துகளுக்கான ஆப்... ஓலா, ஊபரை வீழ்த்த தமிழக அரசு அதிரடி!!!

உதாரணமாக, நீங்கள் சென்னை மாநகரப் பேருந்தில் பயணிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளவும். அது 29சி என்ற பேருந்து என்றால், அது பெசன்ட்நகரில் இருந்து மயிலாப்பூர் மற்றும் ஜெமினி வழியாக பெரம்பூர் வரை செல்லும். இந்த வழி தடத்தில் உள்ள அனைத்து நிறுத்தங்கள்குறித்த தகவலும் விரல் நுனியில் நமக்கு கிடைக்கும்.

விரைவில் அறிமுகமாகும் பேருந்துகளுக்கான ஆப்... ஓலா, ஊபரை வீழ்த்த தமிழக அரசு அதிரடி!!!

இந்த ஆப், 3,300 சென்னை மாநகர பேருந்துகளின் தகவல் மட்டுமின்றி, மாநிலத்தின் மற்ற முக்கிய பகுதிகளில் இயங்கும் 21,800 பேருந்துகளின் நேரடி தகவலையும் வழங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆப்பில் பேருந்துகளின் நேரம் மற்றும் பாதை மாற்றுதல் உள்ளிட்டவை தொடர்பான தகவலும் வழங்கப்பட உள்ளது.

விரைவில் அறிமுகமாகும் பேருந்துகளுக்கான ஆப்... ஓலா, ஊபரை வீழ்த்த தமிழக அரசு அதிரடி!!!

தமிழக அரசின் இந்த பிரத்யேக ஆப்பினை சலோ இந்தியா என்ற தனியார் மென்பொருள் நிறுவனம் உருவாக்கி வருகின்றது. இது இன்ஸ்டியூட் ஆஃப் ரோட் டிரான்ஸ்போர்ட் அமைப்புடன் இணைந்து இப்பணியை மேற்கொண்டு வருகின்றது.

விரைவில் அறிமுகமாகும் பேருந்துகளுக்கான ஆப்... ஓலா, ஊபரை வீழ்த்த தமிழக அரசு அதிரடி!!!

இந்த ஆப்பின் வருகை மக்களை திட்டமிட்டு பணி மேற்கொள்ள உதவும். மேலும், தேவையில்லாமல் பேருந்திற்காக காத்திருந்து நேரத்தை வீணடிக்கும் அவலநிலை இனி தவிர்க்கப்படும்.

எனவே, புதிய ஆப் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில், மக்கள் பொது பேருந்துகளை அதிகம் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விரைவில் அறிமுகமாகும் பேருந்துகளுக்கான ஆப்... ஓலா, ஊபரை வீழ்த்த தமிழக அரசு அதிரடி!!!

இந்த ஆப்-பினை உருவாக்குவதுகுறித்த அறிவிப்பு சிறிது காலத்திற்கு முன்பே வெளியிடப்பட்டிருந்தாலும், அதற்கான பணிகள் இந்த ஆண்டுதான் தொடங்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துக் கழகங்களின் ஊழியர்கள் ஒவ்வொரு பேருந்து நிறுத்தங்களுக்கும் ஒரு தனித்துவமான குறியீட்டை உருவாக்கியுள்ளனர். இவை ஜி.பி.எஸ்., சாதனத்துடன் இணைந்து பணிபுரியும். ஆகையால், இனி வரும் காலங்களில் தனியார் வாகனங்களை கண்கானிப்பது போலவே, நமது அரசு பேருந்துகளையும் கண்கானிக்க முடியும்.

More from DriveSpark

Article Published On: Monday, September 30, 2019, 14:17 [IST]
English summary
TN Government Develops New App For Public Service Bus. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+