ஆட்டோ வாங்க 1 லட்ச ரூபாய் தரும் தமிழக அரசு.. சூப்பரான திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!
முதல் அமைச்சர் முக ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு புதிய திட்டம் ஒன்றை தற்போது மாநிலத்தில் அறிமுகம் செய்திருக்கின்றது. புதிதாக ஆட்டோவை வாங்குபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை வழங்க இருப்பதாக அது அறிவித்து இருக்கின்றது. ஆனால், பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மட்டுமே இந்த திட்டம் பொருந்தும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு மாநிலத்தில் பொறுப்பை ஏற்றதில் இருந்து பல்வேறு சூப்பரான மக்கள் நல திட்டங்களை அமல்படுத்தி வருகின்றது. குறிப்பாக பெண்களை ஈர்க்கின்ற வகையிலான திட்டங்கள் பலவற்றை திமுக அரசாங்கம் மாநிலத்தில் அறிமுகம் செய்துக் கொண்டு இருக்கின்றது.

அந்தவகையில், அவர்கள் அமல்படுத்தியதில் மிக முக்கியமான திட்டமாக பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து திட்டம் இருக்கின்றது. இதற்கு பெண்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்புக் கிடைத்துக் கொண்டு இருக்கின்றது. குறிப்பாக, குடும்ப தேவைக்காக பணிக்குச் சென்று வரும் பெண்களுக்கு பெரும் உதவியாக இந்த திட்டம் உள்ளது.
மாதந்தோறும் பெரும் தொகையை சேகரிக்கவும் கட்டணமில்லா பேருந்து திட்டம் அவர்களுக்கு பெரும் உதவி வருகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே பெண் ஆட்டோ ஓட்டுநர்ளுக்கு ஆட்டோ வாங்க ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்கிற அறிவிப்பை முக ஸ்டாலின் தலைமையிலான அரசு அறிவித்து இருக்கின்றது.
இந்த திட்டம் முழுக்க முழுக்க பெண்களுக்கானது மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. தமிழ்நாடு ஓட்டுநர்கள் மற்றும் ஆட்டோமொபைல் ஒர்கஷாப் தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்கும் பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் அரசின் இந்த ஸ்கீமில் பயன்பெர விண்ணப்பிக்கலாம். 500 பெண் ஆட்டோ ஓட்டுநர்களால் மட்டுமே இதனால் பலனடைய முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஆமாங்க, 500 பேர் மட்டுமே பலன் அடையும் வகையில் இந்த திட்டம் அமைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த திட்டத்தின்கீழ் ஏற்கனவே பத்து பெண்களுக்கான ஆட்டோ பதிவு சான்று வழங்கப்பட்டு இருக்கின்றது. இதனை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பலனாளிகளுக்கு நேரில் வழங்கி அவர்களைச் சிறப்பித்தார்.
இந்த நிகழ்வு மிக சமீபத்திலேயே அரங்கேறியது என்பது குறிப்பிடத்தகுந்தது. கடந்த காலங்களில் ஆட்டோமொபைல்ஸ் துறையில் பெண்களின் ஆதிக்கம் மிகவும் குறைவாகவே தென்பட்டது. ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. வாகன உற்பத்தியில் மட்டுமல்ல டிரைவர்களாகவும் பெண்கள் செயல்பட தொடங்கி இருக்கின்றனர். நகரத்தின் பல பகுதிகளில் ஆட்டோக்களை பெண்கள் இயக்கிச் செல்வதை நம்மால் பார்க் முடிகின்றது.
இதுதவிர கோவை ஷர்மிளா போல் பல பெண்கள் ஹெவி வாகனங்களை இயக்கவும் முன் வந்த வண்ணம் இருக்கின்றனர். இந்த மாதிரியான சூழலிலேயே பெண் ஆட்டோ ஓட்டுநர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசு 500 பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் புதிதாக ஆட்டோ வாங்கி சொந்த காலில் நிற்க உதவி செய்யும் விதமாக ரூ. 1 லட்சம் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கின்றது.
இந்த திட்டத்துடன் சேர்த்து 1,250 பட்டியலின சாதியினரின் வழிப்பாட்டுத் தளங்கள் மற்றும் கிராமப்புறங்களில் இருக்கும் கோயில்களை புணரமைக்கும் பொருட்டு ரூ. 2 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. புதுப்பித்தல், கும்பாபிஷேகம் மற்றும் அடிப்படை வசதிகளை உருவாக்குதல் உள்ளிட்டவற்றிற்கு இந்த நிதியைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போதைய நிலவரப்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரு நாளைக்கு ஆட்டோ வாடகையாக ரூ. 200 முதல் ரூ. 300 வரை வசூல் செய்யப்படுகின்றது. இதனால் வருமானத்தில் பெரும் தொகையை வாடகைக்கே ஓடிவிடும் சூழல் உள்ளது. இதில் இருந்து பெண் ஆட்டோ ஓட்டுநர்களை விடுவிக்கும் பொருட்டே அரசு தனது உதவி கரத்தை நீட்டி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









