தமிழ்நாடு அரசின் மானத்தை வாங்கிய கவர்மெண்ட் பஸ்... நடந்த சம்பவத்தை பாத்து ஊரே கை கொட்டி சிரிக்குது...

அரசு பஸ்கள் எல்லாம் மிக மோசமாக பராமரிக்கப்படுவதாக மக்கள் மத்தியில் நீண்ட நாட்களாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த குற்றச்சாட்டிற்கு சான்றாக பல இடங்களில் அரசு பஸ்கள் பல்வேறு விதமான விபத்துகளையும் ரிப்பேர்களையும் சந்தித்து வருகின்றன. இப்படியாக சமீபத்தில் ஓடிக்கொண்டிருந்த அரசு பஸ் வீல் கழன்று தனியாக ஓடிய சம்பவம் நடந்துள்ளது. சினிமா காமெடியில் வரும் காட்சி போல இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

நேற்று மாலை கள்ளக்குறிச்சியிலிருந்து கடலூர் நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்ஸில் சுமுார் 22 பயணிகள் இருந்தனர். இந்த பஸ் சரியாக தியாக துருகம் அருகே சென்ற போது பஸ்ஸின் முன்பகுதியில் உள்ள இடது பக்க வீல் தனியாக கழன்று சென்றுள்ளது. இதனால் வீல் தனியாக பஸ் தனியாகவும் இருந்துள்ளது. வீல் இல்லாததால் பஸ் ஒர பக்கம் சாய்து ரோட்டில் தேய்த்துக்காண்டே சென்றது.

Govt Bus Brakedown in Kallakurichi

இதையடுத்து நிலைமைய உணர்ந்த அரசு பஸ் ஓட்டுநர் எப்படியோ சமாளித்து பஸ்ஸை நிறுத்தினார். இந்த பஸ்ஸில் சுமார் 22 பயணிகள் பயணித்துக்கொண்டிருந்தனர். அதிர்ஷ்ட வசமாக இ்நத பஸ்ஸில் பயணித்த யாருக்கும் எந்த விதமான சேதாரமும் ஏற்படவில்லை. இந்நிலையில் தனியாக சென்ற வீல் அருகில் உள்ள புதர் பகுதியில் உருண்டு சென்று விழுந்தது. இந்த வீலைத அப்பகுதியில் இருந்த மக்களே மீட்டு பஸ் ஊழியர்களிடம் ஒப்படைத்தனர். பஸ்சில் இருந்த பயணிகள் வேறு பஸ்சிற்கு மாற்றிவிடப்பட்டனர்.

இந்த பஸ்ஸில் பயணம் செய்த பயணிகள் அதிர்ஷட வசமாக உயிர் தப்பியுள்ளனர். அரசு பஸ் அடிக்கடி பழுதாகி நடுரோட்டில் நிற்கும் சம்பவத்தை நாம் பார்த்திருப்போம். ஆனால் இந்த சம்பவம் வீல் கழுன்று பெரும் விபத்து ஏற்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.பொதுவாக பஸ்களில் வீல்கள் மிக முக்கியமான பகுதி என்பதால் எளிதில் கழன்றுவிடாதபடி தான் வடிவமைக்கப்பட்டிருக்கும். அதையும் மீறி இந்த சம்பவத்தில் இப்படி நடந்தததற்கான காரணம் என்ன?

பொதுவாக வீல் பகுதிகள் அதிகம் தூசு, சகதி உள்ளிட்ட பல்வேறு விதமான விஷயங்கள் எளிதில் ஆககூடிய வகையில் இருக்கிறது. இதனால் இதை அவ்வப்போது சரியாக பாராமரிக்க வேண்டும். அதில் அதிகமாக தூசு, மண் போன்ற விஷயங்கள் ஏறினால் இதில் வாகனத்தின் உதிரி பாகங்களை டேமேஜ் செய்ய துவங்கிவிடும். நாளடைவில் இது கவனிக்கப்படாமல் இருந்தால் வாகனத்தில் மிகப்பெரிய பிரச்சனை ஏற்படுவதற்கு கூட வாய்ப்பு உள்ளது.

குறிப்பிட்ட இந்த பஸ்சில் நீண்ட நாட்களாக வாகனத்தின் சேஸிஸ் மற்றும் வீல் பகுதி பராமரிக்கப்படாமல் இருந்திருக்க வேண்டும். அப்படி இருந்ததால் வாகனத்தின் வீல் பகுதியில் சேதம் ஏற்பட்டிருக்கும் அதையும் கவனக்காமல் வாகனம் ஓட்டியதால் ஒரு கட்டத்தில் அந்த சேதம் வீலை அது இருந்து பகுதியில் இருந்து கழன்று போகும் அளவிற்கு பலவீனப்படுத்தியுள்ளது. இதனால் தான் அந்த சம்பவம் நடந்துள்ளது.

அரசு பஸ்களில் இது போன்று பாராமரிப்பு குறைபாடு நீண்ட நாட்களாக சொல்லப்பட்டு வருகிறது.மக்கள் பலர் இதனால் அவதிப்பட்டு வருகின்றனர். சில ஆண்டுகளாக அரசு பஸ்கள் நடுவழியில் நிற்கும் அல்லது விபத்தில் சிக்கும் சம்பவம் அதிகம் நடக்கிறது. இதனால் மக்கள் உயிர் போகும் சம்பவம் கூட நடக்கிறது. இதை கருத்தில் கொண்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகனம் என்பது ஒரு தேய்மான சொத்து அதை எந்த அளவிற்கு பராமரிக்கிறோமோ அந்த அளவிற்கு நீண்ட காலம் உழைக்கும், அதே நேரம் ஆபத்துகளையும் குறைக்கும். இதனால் தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் அரசு பஸ்களின் பராமரிப்பை சரியாக செய்தால் நிச்சயம் மிகப்பெரிய அளவில் விபத்துகள் குறையும் இது போன்ற விபத்துகள் பயணிகளின் உயிரையும் காவு வாங்கி விடும் என்பது மட்டும் உண்மை.

Source: Sathiyam

More from DriveSpark

Article Published On: Monday, April 21, 2025, 19:15 [IST]
English summary
Tn govt bus wheel separate while moving know full details
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+