தமிழக அரசு கொண்டு வந்த இந்த திட்டத்தை பத்தி தான் ஊரே பேசுது! இலவச பஸ் பாஸ் வாங்குறது இவ்வளவு ஈஸியா?

தமிழக அரசு வழங்கி வரும் இலவச பஸ் பாஸ்களை இனி ஆன்லைன் மூலமே விண்ணப்பித்து பெறலாம் என்ற புதிய ஆப்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இந்த புதிய திட்டத்தை துவக்கி வைத்தார். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

தமிழகப் போக்குவரத்து துறை தமிழ்நாட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழ் அறிஞர்கள் உள்ளிட்ட பலருக்கு இலவச பஸ் பாஸ் திட்டத்தை அறிவித்து வழங்கி வருகிறது. அவர்கள் இந்த பஸ் பாஸ்களை எடுத்துக் கொண்டால் தமிழகம் முழுவதும் பஸ்களில் இலவசமாக பயணித்துக் கொள்ள முடியும்.

free bus pass online

தற்போது வரை இந்த பஸ் பாசை விண்ணப்பிக்க நேரடியாக போக்குவரத்து கழகத்திற்கு தான் இவர்கள் செல்ல வேண்டும். இவர்கள் அங்கு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கி இந்த விண்ணப்பத்தின் மூலம் பஸ் பாசை பெற முடியும். குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த பஸ் பாஸ் கால வரைமுறை முடிவடைந்து விடும் இதன் பின்பு அதை புதுப்பிக்க வேண்டும்.

இந்த நடைமுறை இதுவரை நேரில் போக்குவரத்து கழக அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கும் நடைமுறை மட்டுமே இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன் ஆன்லைன் மூலம் இதை விண்ணப்பிக்கும் புதிய ஆப்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளார். இதற்காக தமிழக போக்குவரத்து துறை தமிழக மின் ஆளுமை முகமையுடன் இணைந்து பணியாற்றுகிறது.

free bus pass online

இதன்படி இவர்கள் இனி பஸ் வசதிகள் எடுக்க வேண்டும் என்றால் அதை ஆன்லைன் மூலம் அவர்களாகவே விண்ணப்பிக்கலாம் அல்லது அவர்கள் இ சேவை மையங்கள் மூலம் கூட விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியாக பெறப்படும் விண்ணப்பங்களை சரிபார்த்து தகுதியுடைய நபர்களுக்கு பஸ் பாஸ் ஒப்புதல் வழங்கப்படும். ஒப்புதல் வழங்கப்பட்டவுடன் அவர்கள் இணையதளம் மூலமாகவே பஸ் பாசை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படியாக மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பம் செய்யும்போது அவர்களது ஆதார் கார்டு, போட்டோ, போனஃபைடு சான்றிதழ், தேசிய அல்லது மாநில ஐடி சான்றிதழ், மருத்துவ அதிகாரியின் உடல் நலக்குறைபாடுக்கான சான்று, இருப்பிடச் சான்று, மற்றும் ரேஷன் கார்டு ஆகியவை ஆவணங்களாக சமர்ப்பிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

free bus pass online

இதுவே சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழ் அறிஞர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் இலவச பஸ் பாஸிற்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு, போட்டோ, அட்டெண்டர் போட்டோ, அரசு ஆணை, பென்ஷன் சான்றிதழ், இருப்பிடச் சான்று ஆகிய சமர்ப்பிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை சரிபார்த்த பின்பு அவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படியாக பஸ் பாஸ் பெறுபவர்கள் நிச்சயம் ஒவ்வொரு முறையும் போக்குவரத்து கழக அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க முடியாதவர்களாகவே இருந்து வந்தனர். இந்நிலையில் இவர்களுக்கான ஆன்லைன் சேவையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது இந்த பஸ் பாஸ் பெரும் பயனாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தை பொறுத்தவரை இதுவரை 3237 பார்வை குறைபாடு உடைய மனிதர்கள், 1468 மாற்று திறனாளிகள், 1180 மனநல குறைபாடு உள்ள மனிதர்கள், 117 சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் மூத்த தமிழறிஞர்கள் ஆகியோருக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இவர்கள் இனி இந்த பஸ் பாஸை ஆன்லைன் மூலமே விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தமிழக அரசின் இந்த முயற்சி நிச்சயம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று தான். மாற்றுத்திறனாளிகள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் எல்லாம் நேரில் வந்து பஸ் பாஸிற்க்கு விண்ணப்பிக்க முடியாத நிலையில் இருப்பவர்கள் இவர்களுக்கு ஆன்லைன் மூலம் சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. நிச்சயம் ஒரு நல்ல பலனை தரும் இதே போல தமிழக முழுவதும் பஸ் டிக்கெட்டுகளையும் ஆன்லைனில் எடுக்கும் முறையை கொண்டு வந்தால் சிறப்பாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Friday, September 8, 2023, 11:43 [IST]
English summary
Tn govt launched a new website to issue free bus passes
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X