ஒரு வண்டிக்கு ரூ5 லட்சம் செலவு! ஆனா இப்ப ரூ92 லட்சம் மிச்சமாகிடுச்சு! தமிழக அரசின் மகத்தான சாதனை!

சென்னை அரசு போக்குவரத்து கழகத்தில் பஸ்கள் சிஎன்ஜி எரிபொருள் மூலம் இயங்கியதால் ரூ92.04 லட்சம் மிச்சமாகியுள்ளதாக தமிழக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இது எப்படி சாத்தியமானது? பெட்ரோல் மூலம் சிஎன்ஜிக்கு மாற்றியதால் லாபமா நஷ்டமா? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

கடந்தாண்டு சென்னை போக்குவரத்து கழகம் சார்பில் சென்னையில் இயங்கி வரும் பஸ்களில் சிஎன்ஜி எரிபொருள் கிட்டை பொருத்தி சிஎன்ஜி மூலம் வாகனங்களை இயக்கினர். முதலில் இது சோதனை கட்டமாக துவங்கப்பட்ட நிலையில் அது வெற்றிகரமாக மாறியது. இதன்பிறகு கடந்த ஜூன் மாதம் இந்த திட்டத்தை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டது.

TN CNG Bus

தற்போது வரை 38 பஸ்களில் சிஎன்ஜி கிட் பொருத்தப்பட்டுள்ளது. சிஎன்ஜி எரிபொருளின் விலை குறைவு மற்றும் அதில் வாகனம் இயங்கும்போது அதிக மைலேஜ் என்ற காரணத்தினால் இது அதிக செலவு குறையும் என்ற காரணத்திற்காகவும்,காற்று மாசுவை குறைக்கும் காரணத்திற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிஎன்ஜியில் இயங்கும் பஸ்களால் ரூ92.04 லட்சம் மிச்சமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிஎன்ஜியில் இயங்கும் பஸ்கள் பெட்ரோலில் இயங்கும் பஸ்களை விட கி.மீக்கு ரூ3.94 வரை மிச்சமாகியுள்ளதாகவும். இதன் மூலம் கடந்த 6 மாதத்தில் அதே பஸ்களில் டீசலில் இயங்கியிருந்தால் ஆகும் செலவை விட சிஎன்ஜியில் இயங்கிதால் ரூ92.04 லட்சம் குறைவாக செலாவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படிப்படியாக சிஎன்ஜி பொருத்தப்பட்ட பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது. விரைவில் டீசல் பஸ்கள் எல்லாம் சிஎன்ஜி பஸ்களாக மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பஸ்க்கு சிஎன்ஜி கிட்டை பொருத்த ரூ5-6 லட்சம் வரை செலவாகும் என தெரிகிறது. கி.மீக்கு 3.94 ரூபாய்

இப்படியாக ஒரு பஸ்க்கு கூடுதலாக ரூ5 லட்சம் செலவு என கணக்கிட்டால் கூட அந்த செலவை ஈடு செய்யவே அந்த பஸ் 1.26 லட்சம் கிமீ இயங்க வேண்டும். அதன் பிறகு தான் உண்மையான லாபம் என்பதை பார்க்க முடியும். ஆனால் ஒரு பஸ் ஒர நாளுக்கு சராசரியாக 300 கி.மீ இயக்கப்படுகிறது என கணக்கிட்டாலும் தொடர்ந்து 423 நாட்கள் இயங்கினால் தான் லாபத்தை நோக்கி அந்த பஸ்ஸால் பயணிக்க முடியும்.

தற்போது சிட்டி பஸ்களில் மட்டுமே இந்த கிட் பொருத்தப்படுகிறது. ஆனால் நீண்ட தூரம் பயணிக்கும் ரக பஸ்களில் இந்த கிட்டை பொருத்தி ஆங்காங்கே சிஎன்ஜியை நிரப்பும் மையங்களை நிறுவினால் நீண்ட தூரம் பயணிக்கும் பஸ்கள் சிறப்பாக எரிபொருள் செலவை மிச்சம் செய்ய முடியும். நீண்டதூரம் பயணிக்கும் பஸ்கள் ஒரு நாளுக்கு 500 கி.மீ கூட பயணிக்கும் இப்படியான பஸ்கள் அதிக மைலேஜை தரும் மேலும் சீக்கரமே சிஎன்ஜி கிட் பொருத்தப்பட்ட காசை எடுக்க வழி வகுக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சிஎன்ஜி என்பது ஒரு வரப்பிரசாதமாக மாறியுள்ளது. இது வாகன ஓட்டிகள் மத்தியில் பெரிய புரட்சியை செய்து வருகிறது. பெரிய பஸ்களில் மட்டுமல்ல சிஎன்ஜி பொருத்தப்பட்ட கார்களும் சிறப்பான மைலேஜை பெற்று வருகின்றன. தமிழக அரசு எடுத்துள்ள இந்த முயற்சி நிச்சயம் வரவேற்க்க தக்கது தான்.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 22, 2025, 14:25 [IST]
English summary
Tn govt saves 92 lakh with cng buses know how
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+