இன்று முதல் பொது வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி கட்டாயம்

Written By:

பொதுமக்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் விதமாக பள்ளி, கல்லூரி, கல்வி நிறுவன வாகனங்கள் உட்பட பொதுவாகனங்களில் கட்டாயம் ஜிபிஎஸ் கருவி கட்டாயம் பொருத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

இன்று முதல் பொது வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி கட்டாயம்

தமிழகத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமான பொது வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதில் 22,646 அரசு பஸ்கள், 786 தனியார் பஸ்கள், 4218 மினி பஸ்கள், 1000 ஆம்னி பஸ்கள், 39,000 பள்ளி கல்லூரி வாகனங்கள் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமாகன டாக்ஸிக்கள் இதில் உள்ளடக்கம்.

இன்று முதல் பொது வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி கட்டாயம்

ஏற்கனவ பள்ளி, கல்வி நிறுவன வாகனங்களுக்கு ஜி.பி.எஸ்., கருவி கட்டாயாமாக்கப்பட்ட சூழ்நிலையில் மீண்டும் தற்போது பொதுமக்கள் பயன்படுத்தும் அனைத்து வாகனங்களுக்கும் ஜி.பி.எஸை கட்டாயமாக்கியுள்ளது மத்திய அரசு.

இன்று முதல் பொது வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி கட்டாயம்

இந்த உத்தரவு இன்று (ஏப்.,2)தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. கல்வி நிறுவன வாகனங்கள் பெரும்பாலும் பொருத்திவிட்ட நிலையில் மற்ற வாகனங்களின் நிலை குறித்த சரியான தகவல்கள் இல்லை.

இன்று முதல் பொது வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி கட்டாயம்

மக்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை உடனுக்குடன் அமலுக்கு கொண்டும் தமிழக அரசு இந்த விவகாரத்தில் எவ்வாறு செயல்படும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

English summary
TN makes GPS device must in school vehicles private. Read in Tamil.
Story first published: Monday, April 2, 2018, 16:06 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark