வாகன சோதனையில் தகாத முறையில் பேசிய காவலர்? வெளுத்து வாங்கிய இளைஞர் - வைரல் வீடியோ..!!

Written By:

இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும், காவல்துறையினருக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் தான். வாகன சோதனையின் போது ஆங்காங்கே உரசல்களும், சர்ச்சைகளும் எழுவது வாடிக்கையாக நடந்து வருகிறது.

தகாத வார்த்தையில் பேசிய போலீசுக்கு அர்ச்சனை: வைரல் வீடியோ..!!

காரில் பயணிப்போரைக்காட்டிலும் இருசக்கர வாகனங்களில் செல்வோரே காவல்துறையினருக்கு இலக்காகி வருகின்றனர் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.

தகாத வார்த்தையில் பேசிய போலீசுக்கு அர்ச்சனை: வைரல் வீடியோ..!!

மேலும் வாகனத்தணிக்கை என்ற பெயரில் காவல்துறையினர் அப்பாவி பொதுமக்களிடம் அடாவடியாக நடந்துகொள்கின்றனர் என்றும் கையூட்டு பெருகின்றனர் என்றும் பரவலான குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

தகாத வார்த்தையில் பேசிய போலீசுக்கு அர்ச்சனை: வைரல் வீடியோ..!!

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் இதே நிலை தான். வாகன தனிக்கையின் போது விபரீதமான சில சம்பவங்களும் சமீபகாலத்தில் நிகழ்ந்துள்ளது நினைவுகூறத்தக்கது.

தகாத வார்த்தையில் பேசிய போலீசுக்கு அர்ச்சனை: வைரல் வீடியோ..!!

கடந்த ஆண்டு சென்னை கே.கே.நகர் பகுதியில் வாகன தனிக்கையின் போது பைக்கில் சென்ற இளைஞர்களை மறிப்பதற்காக காவல் அதிகாரி ஒருவர் ஓட்டுநரை லத்தியால் அடித்ததில் நிலைதடுமாரி செண்டர்மீடியனில் இருந்த கம்பி மீது விழுந்ததில் இளைஞர் ஒருவர் குடல் சரிந்து பலியானார்.

தகாத வார்த்தையில் பேசிய போலீசுக்கு அர்ச்சனை: வைரல் வீடியோ..!!

இதனைக் கண்டித்து அங்கு சாலைமறியல் செய்யப்பட்டது, சம்பவத்தில் ஈடுபட்ட காவல் அதிகாரி பொதுமக்களால் தாக்கப்பட்டார். இச்சம்பவம், காவல்துறையினர் மீதான கொந்தளிப்பை வெளிக்காட்டுவதாக இருந்தது.

தகாத வார்த்தையில் பேசிய போலீசுக்கு அர்ச்சனை: வைரல் வீடியோ..!!

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தற்போது காவல்துறையினர் மீதான வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் வகையில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

தகாத வார்த்தையில் பேசிய போலீசுக்கு அர்ச்சனை: வைரல் வீடியோ..!!

காவல்துறையின் அடாவடியை வெளிப்படுத்தும் வகையில் முகநூலில் பகிரப்பட்டுள்ளது ஒரு வீடியோ. அதில் இளைஞர் ஒருவர் காவலர் ஒருவரை சரமாரியான வார்த்தைகளால் துளைத்து எடுக்கிறார்.

தகாத வார்த்தையில் பேசிய போலீசுக்கு அர்ச்சனை: வைரல் வீடியோ..!!

பொள்ளாச்சி அருகே நடந்ததாக சித்தரிக்கப்படும் இந்த வீடியோவில், வாகன ஓட்டி ஒருவருக்கு காவலர்கள் 100 ரூபாய் அபராதம் விதித்ததாகவும், அதனைத் தொடர்ந்து காவலர் ஒருவர் அந்த வாகன ஓட்டியிடம் மரியாதை குறைவான வார்த்தைகளை பிரயோகித்ததாகவும் தெரியவருகிறது.

தகாத வார்த்தையில் பேசிய போலீசுக்கு அர்ச்சனை: வைரல் வீடியோ..!!

உதவி-ஆய்வாளர் மற்றும் காவலர்கள் சூழ்ந்த அந்த இடத்தில் பொதுமக்கள் முன்னிலையில், அந்த இளைஞர் காவலர் ஒருவரை வெளுத்து வாங்கியுள்ளார். அருகில் இருந்த ஒருவர் இந்த சம்பவத்தை மொபைலில் படம்பிடித்த பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளார்.

தகாத வார்த்தையில் பேசிய போலீசுக்கு அர்ச்சனை: வைரல் வீடியோ..!!

தவறு காவலர்கள் மீதா? அல்லது அந்த இளைஞர் மீதா என தெளிவான தகவல் இல்லாத நிலையில் தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இச்சம்பவம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் டிரைவ் ஸ்பார்க் தளத்தில் விரைவில் வெளிக்கொண்டுவரப்படும். சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள அந்த வீடியோவை மேலே உள்ள ஸ்லைடரில் காணுங்கள்.

English summary
Read in Tamil about frustrated young man scolds police who misbehaved at vehicle check
Story first published: Wednesday, June 21, 2017, 18:36 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos