ஸ்டைல் காட்ட நினைக்காதீங்க... நூறு ரூபாயை இழக்க நேரிடும்... அதிரடி காட்ட தயாராகும் தமிழக போலீஸ்!

ஸ்டைல் காட்ட நினைச்சீங்கனா நூறு ரூபாயை போலீஸ்காரங்க கிட்ட இழக்க நேரிடும். இனி காவலர்கள் இந்த விஷயத்திலும் அதிரடி காட்ட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

ஸ்டைல் காட்ட நினைக்காதீங்க... நூறு ரூபாயை இழக்க நேரிடும்... அதிரடி காட்ட தயாராகும் தமிழக போலீஸ்!

வாகனங்களை அடையாளம் காணும் விதமாக வாகனங்களுக்கு பிரத்யேக பதிவெண்கள் வழங்கப்படுகின்றன. குற்றச் சம்பவங்களின்போது எளிதில் அடையாளம் காணவும் இப்-பதிவெண்கள் உதவுகின்றன. இத்தகைய முக்கியமான பதிவெண்களை நம்ம ஊரு ஆட்கள் தங்களுக்கு பிடித்த ஸ்டைல் மற்றும் உருவத்தில் ஒட்டிக் கொள்கின்றனர்.

ஸ்டைல் காட்ட நினைக்காதீங்க... நூறு ரூபாயை இழக்க நேரிடும்... அதிரடி காட்ட தயாராகும் தமிழக போலீஸ்!

இவ்வாறு செய்வதனால் ஸ்டைலான தோற்றத்தில் ஒட்டப்பட்டிருக்கும் பதிவெண்களை அடையாளம் காண்பதில் சற்று சிக்கல் ஏற்படுகின்றது. ஆகையால், பல்வேறு வழக்குகள் தற்போது தீர்வு எட்ட முடியாத நிலை தென்படுகின்றது. இதனைக் களையெடுக்கும் முயற்சியிலேயே தமிழக காவல்துறையினர் களமிறங்கியிருக்கின்றனர்.

ஸ்டைல் காட்ட நினைக்காதீங்க... நூறு ரூபாயை இழக்க நேரிடும்... அதிரடி காட்ட தயாராகும் தமிழக போலீஸ்!

குறிப்பாக, வாகன பதிவெண்கள் அங்கீகரிக்கப்பட்ட வடிவில் மட்டுமே இருக்க வேண்டும். மேலும், பதிவெண்களைத் தவிர வேறு எந்த எழுத்துக்களோ, படங்களோ, பெயர்களோ இருக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை மீறும் வாகன ஓட்டிகளுக்கு ரூ. 100 வரையிலான அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஸ்டைல் காட்ட நினைக்காதீங்க... நூறு ரூபாயை இழக்க நேரிடும்... அதிரடி காட்ட தயாராகும் தமிழக போலீஸ்!

வாகன பதிவெண் விஷயத்தில் பலர் அஜாக்கிரதையாக இருப்பதை நம்மால் காண முடிகின்றது. குறிப்பாக, நம்பர் பிளேட்டில் ஜாதி பெயர், கட்சி பெயர், குடும்பத்தினர் பெயர், வசனம் மற்றும் பதவி பெயர் போன்றவற்றை எழுதியிருப்பதை நம்மால் காண முடிகின்றது. இது தேவையற்றை இடையூறுகளை வழங்கும் வகையில் இருக்கின்றன.

ஸ்டைல் காட்ட நினைக்காதீங்க... நூறு ரூபாயை இழக்க நேரிடும்... அதிரடி காட்ட தயாராகும் தமிழக போலீஸ்!

இதுமட்டுமின்றி, பதிவெண்களை பேன்சியான எழுத்துருக்களில் எழுதும் வழக்கத்தையும் சிலர் கையாள்கின்றனர். இதன் விளையாக அந்த எண் என்ன எண் என்பதைக் கண்டறிவதே மிகவும் கடினமாக மாறிவிடுகின்றது. குறிப்பாக, 8055 எனும் எண்ணை ஒரு சிலர் 'BOSS' (பாஸ்) என எழுதிக் கொள்கின்றனர். இதுபோன்ற நேரங்களில் அது என்ன எண்ண என்பதை மட்டுமல்ல அது என்ன எழுத்து என்பதைக் கண்டறிவதுகூட மிகக் கடினமாக மாறிவிடுகின்றது.

ஸ்டைல் காட்ட நினைக்காதீங்க... நூறு ரூபாயை இழக்க நேரிடும்... அதிரடி காட்ட தயாராகும் தமிழக போலீஸ்!

இத்தகைய சூழலுக்கு முற்று புள்ளி வைக்கும் வகையிலேயே வாகன பதிவெண் விஷயத்தில் தீவிரம் காட்ட தமிழக போலீஸ் தயாராகி வருகின்றது. போக்குவரத்து சட்டம் பிரிவு 177இன் கீழ் இந்த விதி மீறலுக்கு ரூ. 100 வரை அபராதம் வழங்கப்பட இருக்கின்றது. நம்பர் பிளேட்டில் பேன்சி எண்கள் பயன்படுத்தியிருந்தாலோ அல்லது கண்டறிவதில் சிக்கலை ஏற்படுத்தும் வகையில் இருந்தாலோ இந்த அபராதம் வழங்கப்படும்.

ஸ்டைல் காட்ட நினைக்காதீங்க... நூறு ரூபாயை இழக்க நேரிடும்... அதிரடி காட்ட தயாராகும் தமிழக போலீஸ்!

நம்பர் பிளேட் எப்படி இருக்க வேண்டும்?..

தனி நபர் வாகனம் எனில் அந்த வாகனத்தில் இடம் பெற்றிருக்கும் நம்பர் பிளேட் பின்னணியில் வெள்ளை நிறத்தையும், எழுத்துக்கள் மற்றும் எண்கள் கருப்பு நிறத்திலும் இருக்க வேண்டும். இதுவே, பொது பயன்பாட்டு (வணிக) வாகனம் எனில் பின்னணியில் மஞ்சள் நிறம் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். எழுத்து மற்றும் எண்கள் கருப்பு நிறத்தில் இடம் பெற்றிருக்க வேண்டும்.

இதேபோல், எலெக்ட்ரிக் வாகனங்களில் நம்பர் பிளேட்டில் பச்சை நிற பின்னணி வண்ணாகவும், வெள்ள நிற எழுத்துத்துக்கள் மற்றும் எண்கள் இடம் பெற்றிருக்க வேண்டும் என்பது விதியாகும்.

ஸ்டைல் காட்ட நினைக்காதீங்க... நூறு ரூபாயை இழக்க நேரிடும்... அதிரடி காட்ட தயாராகும் தமிழக போலீஸ்!

இதேபோன்று, இரண்டு (பைக் மற்றும் ஸ்கூட்டர்) அல்லது மூன்று சக்கர (ஆட்டோ ரிக்ஷா) வாகனங்களில் நம்பர் பிளேட்டானது 200X100 மிமீ அளவில் இருக்க வேண்டும் என்பது விதியாகும். இதில், இருசக்கர வாகனங்களின் நம்பர் பிளேட்டில் 40 மிமீ உயரத்திலும், 7 மிமீ தடிமனிலும், 5 மிமீ இடைவெளியிலும் எழுத்துக்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். இது பின்பக்க பிளேட்டில் இடம் பெற்றிருக்க வேண்டிய எண்களின் அளவாகும். முன்பக்கத்தில் எழுத்து மற்றும் எண்கள் 30 மிமீ உயரத்திலும், தடிமன் மற்றும் இடைவெளி 5 மிமீ அளவிலும் இருக்க வேண்டும்.

ஸ்டைல் காட்ட நினைக்காதீங்க... நூறு ரூபாயை இழக்க நேரிடும்... அதிரடி காட்ட தயாராகும் தமிழக போலீஸ்!

மூன்று சக்கர வாகனத்தின் பின்புற நம்பர் பிளேட்டில், எண்கள் மற்றும் எழுத்துக்கள் 35 மிமீ அளவிலும், தடிமன் 7 மிமீ அளவிலும், இடைவெளி 5 மிமீ கொண்டதாகவும் இருக்க வேண்டும். கார்களுக்கு முன் மற்றும் பின் ஆகிய இரண்டிற்கும் ஒரே மாதிரியான அளவுகளே கொடுக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் கார்களில் இடம் பெறும் நம்பர் பிளேட்டுகளில் எழுத்துகள் மற்றும் எண்கள் 40 மிமீ உயரத்திலும், 7 மிமீ தடிமனிலும், 5 மிமீ இடைவெளியிலும் இருக்க வேண்டும்.

ஸ்டைல் காட்ட நினைக்காதீங்க... நூறு ரூபாயை இழக்க நேரிடும்... அதிரடி காட்ட தயாராகும் தமிழக போலீஸ்!

Source: Dinamalar

இலகு ரக வாகனம்; 340X200மிமீ அல்லது 500X120 மிமீ என்ற அளவில் நம்பர் பிளேட் இடம் பெற்றிருக்க வேண்டும். இந்த நம்பர் பிளேட்டில் இருக்கும் எழுத்துக்கள் மற்றும் எண்கள் 65 மிமீ உயரம், 10 மிமீ தடிமன் மற்றும் இடைவெளியுடன் இருக்க வேண்டும். பின் மற்றும் முன் ஆகிய இரு பக்க நம்பர் பிளேட்டிலும் இந்த அளவிலேயே எழுத்து மற்றும் எண்கள் இருக்க வேண்டும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Tn police announced number plate should not have fancy style number
Story first published: Thursday, September 2, 2021, 11:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X