தமிழகத்தில் இந்த டாக்ஸிகளுக்கு எல்லாம் அனுமதி இல்லையா? அதிர வைத்த போக்குவரத்துத் துறையின் பதில்...
தன்னாலர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விகளுக்கு தமிழக போக்குவரத்து துறை தமிழகத்தில் பைக் டாக்ஸிகளுக்கு அனுமதியில்லை என பதிலளித்துள்ளது. இது குறித்த முழு விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக தொழிற்நுட்ப வளர்ச்சி காரணமாகப் போக்குவரத்துத் துறை பல மாற்றங்களைச் சந்தித்துள்ளது. புதிது புதிதாகப் பல ஸ்டார்ட் அப்கள் துவங்கப்பட்டு அவர்கள் புதுப்புது ஐடியாக்களுடன் போக்குவரத்துத் துறையில் பெரும் புரட்சியே செய்து வருகின்றனர். எனச் சொல்லாம்.

உதாரணமாக ஓலா நிறுவனம். பொதுவாகத் தனி மனிதர்களால் வாடகை கார், ஆட்டோக்கள் ஓட்டப்பட்டு வந்த நிலையில் அந்த தொழிலில் தொழிநுட்பத்தை புகுத்தி இன்று இந்தியா முழுவதும் தன் தொழிலைப் பரப்பி ஏராளமான மக்கள் தொழில் இந்த தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி அந்நிறுவனம் மூலம் வாடகை கார் வாகனங்களை புக் செய்யத் துவங்கிவிட்டனர்.

இதே போன்ற தொழில் நுட்பத்தில் இந்தியாவில் ஓரிரு கம்பெனிகள் பெற்ற பெரும் வெற்றியைத் தொடர்ந்து, அடுத்தடுத்த சில ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்கள் புதுப்புது ஐடியாக்களுடன் களம் இறங்கத் துவங்கின. பெரு நகரங்களில் BOUNCE, VOGO, உள்ளிட்ட நிறுவனங்கள் பைக்கை வாடகைக்கு விடும் தொழிலை தொழிற்நுட்ப வசதியுடன் துவங்கினர்.

இந்த தொழில் பல பிரச்சனைகளைச் சந்தித்து வந்தாலும் இருசக்கர வாகனம் இல்லாத அல்லது பழுதில் இருக்கும் பலர் இந்த வாய்ப்பை பயன்படுத்தத் துவங்கினர். இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய் Rapido என்ற நிறுவனம் வெறும் தொழிற்நுட்பத்தை மட்டுமே வைத்து மக்களின் வாகனத்தை வாடகை வாகனமாகப் பயன்படுத்தத் துவங்கியது.

அதாவது நீங்கள் இப்பொழுது ஒரு இடத்திலிருந்து வேறு இடத்திற்கு உங்கள் பைக்கில் செல்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். நீங்கள் அந்த ஆப்பில் எங்குச் செல்கிறீர்கள்? எந்த நேரத்தில் செல்கிறீர்கள்? எந்த வாகனத்தில் செல்கிறீர்கள் எனப் பதிவு செய்ய வேண்டும். அந்த ஆப் அதே நேரத்தில் அதே பகுதி வழியாகச் செல்ல விரும்பும் நபரை உங்களுக்குக் கொடுக்கும். அவர்களை நீங்கள் உங்கள் வாகனத்தில் பிக்கப் செய்து டிராப் செய்தால் உங்களுக்கு அதற்கான பணத்தை அவர்கள் வழங்குவார்கள்.

இப்படியாகப் பல வித்தியாச வித்தியாசமான போக்குவரத்து முறைகள் சமீபகாலமாக அதிகமாகிவிட்டது. இப்படியெல்லாம் செய்வதற்கு இந்தியாவில் சட்டம் அனுமதிக்கிறதா? எது எல்லாம் சட்டப்படி சரி எது சட்டப்படி குற்றம்? என்ற குழப்பம் பலருக்கும் இருக்கிறது. இதைத் தெளிவு காணும் வகையில் சமீபத்தில் தன்னார்வலர் ஒருவர் மாநில போக்குவரத்துத் துறையிடம் தகவல் அறிவும் உரிமைச் சட்டத்தின்படி சில கேள்விகளைக் கேட்டுள்ளார். அதற்கு வந்த பதில்கள் தமிழகத்தில் பலருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதில் தமிழகத்தில் வணிக ரீதியிலான டூவீலர்களுக்கு வழங்கப்படும் அனுமதி குறித்துக் கேட்கப்பட்டிருந்து. இதற்குப் பதிலளித்த போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தின் பொது தகவல் அலுவலர் தமிழகத்தில் வணிக ரீதியிலாக போக்குவரத்து வாகனங்களைப் பயன்படுத்த அனுமதியில்லை எனப் பதிலளித்துள்ளார். அதாவது இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துபவர்கள் அதைப் பயன்படுத்துவதாலேயே பணம் சம்பாதிக்கக் கூடாது.

இந்தியாவில் வாகனங்களுக்கான நம்பர் பிளேட்களில் பல வண்ணங்கள் இருக்கிறது. வெள்ளி நிற நம்பர் பிளேட் என்றால் வாகனங்களைச் சொந்த பயன்பாட்டிற்குப் பயன்படுத்துவர். மஞ்சள் நிற நம்பர் பிளேட் டிராவல்ஸ் பயன்பாட்டிற்கு பயன்படுத்தும், பச்சைநிற நம்பர் பிளேட் பசுமை வாகனங்களுக்காகப் பயன்படுத்தவும், கருப்பு நிற நம்பர் பிளேட் வாடகை வாகனங்களுக்காகப் பயன்படுத்தவும் வழங்கப்பட்டுள்ளது.

இதில் மஞ்சள் நிற நம்பர் பிளேட்டை உள்ள வாகனங்கள் தான் டாக்ஸியாக பயன்படுத்த முடியும். தமிழகத்தில் இப்படியாக டூவீலர்களுக்கு மஞ்சள் நிற நம்பர் பிளேட்களுக்கு அனுமதியில்லை எனப் போக்குவரத்து ஆணையர் அலுவலகம் மறுத்துள்ளது. அதனால் தமிழகத்தில் பைக் டாக்ஸி என்று ஏதாவது நிறுவனங்கள் செயல்பட்டால் அது சட்ட விரோதமான நிறுவனங்களாகவே இருக்க முடியும்.

ஆனால் கடந்த 2021ம் ஆண்டே மத்திய அரசு இருசக்கர வாகனங்களை டாக்ஸியாக பயன்படுத்தும் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இது அரசிதழிலும் வெளியான நிலையில் இது குறித்த சட்டம் தமிழகத்தில் இன்னும் வரவில்லை. ஆனால் கோவா உள்ளிட்ட சில சுற்றுலா நகரங்களில் இதற்கான அனுமதியிருக்கிறது. அந்த பகுதிகளில் இவ்வாறான சேவைகள் சட்டரீதியாகவே நடக்கிறது.

அதே போல இந்த கேள்வியில்
ஆன்லைன் டெலிவரிக்காக பல நிறுவனங்கள் இருசக்கர வாகன ஓட்டிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். அதற்கு எவ்வாறான அனுமதி வழங்கப்பட்டுள்ளது? என்ற கேள்விக்குப் போக்குவரத்து ஆணையரகம் அது குறித்த தகவல்கள் தங்களிடம் இல்லை என விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் போக்குவரத்தில் பல நிறுவனங்கள் சட்ட ரீதியிலான அனுமதியில்லாமலேயே நடந்துவருகிறது. பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படி உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருக்கிறதா? உங்கள் சந்தகேத்தை கமெண்டில் கேளுங்கள்.


Click it and Unblock the Notifications








