உரிய ஆவணம் இன்றி இயங்கிய டேக்ஸி பைக்குகள் பறிமுதல்: சென்னையில் காவல்துறை அதிரடி!

சென்னையில் உட்பட பல்வேறு பகுதிகளில் உரிய ஆவணங்கள் இன்றி இயங்கி வந்த 18க்கும் மேற்பட்ட கால் டேக்ஸி பைக்குகளை போக்குவரத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

வாடிக்கையாளரைப் போல் நூதனமாக நடித்து பைக் டேக்ஸிகள் பறிமுதல்: சென்னை போலீஸார் அதிரடி நடவடிக்கை!

சென்னை உட்பட பல்வேறு முக்கிய நகரங்களில் கால் டேக்ஸி சேவை இயக்கப்பட்டு வருகின்றது. இந்த சேவை மூலம் விரும்பிய இடத்திற்கு பயணம் செய்ய, ஆன்லைன் அல்லது மொபைல் ஆப் மூலம் வாகனங்களை புக் செய்து கொள்ளலாம். அதன்படி, நாம் இருக்கும் இடத்திற்கே வந்து வாகனங்கள் நம்மை பிக்அப் செய்துகொள்ளும்.

வாடிக்கையாளரைப் போல் நூதனமாக நடித்து பைக் டேக்ஸிகள் பறிமுதல்: சென்னை போலீஸார் அதிரடி நடவடிக்கை!

இந்த சேவையில் கார், ஆட்டோ உள்ளிட்ட சில வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தற்போது இரு சக்கர வாகனங்களும் இதில் பயன்டுத்தப்பட்டு வருகின்றன. கார் கால் டேக்ஸியைக் காட்டிலும் மிகவும் குறைந்த கட்டணத்தில் இந்த சேவை இயக்கப்படுவதால், பெரும்பாலான மக்கள் இதனை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

வாடிக்கையாளரைப் போல் நூதனமாக நடித்து பைக் டேக்ஸிகள் பறிமுதல்: சென்னை போலீஸார் அதிரடி நடவடிக்கை!

குறுக்கு, நெடுக்கு என அனைத்து பாதையிலும் பைக் புகுந்து செல்வதால், குறைவான நேரமே டிராப் செய்ய எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதனால், பெரும்பாலான பயணிகள் இந்த சேவையை அதிகம் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

வாடிக்கையாளரைப் போல் நூதனமாக நடித்து பைக் டேக்ஸிகள் பறிமுதல்: சென்னை போலீஸார் அதிரடி நடவடிக்கை!

பைக் கால் டேக்ஸி சேவையினால் கார் கால் டேக்ஸி பெரிய அளவில் பாதிப்பைச் சந்தித்திருப்பதாக கால் டேக்ஸி ஓட்டுநர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்தச் சேவையை எதிர்த்து அண்மையில் போராட்டத்திலும் ஈடுபட்டனர். பின்னர், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி கால் டேக்ஸி ஓட்டுநர்கள் சார்பாக போக்குவரத்து இணை ஆணையர் கிருஷ்ணமூர்த்தியிடம் புகார் கொடுக்கப்பட்டது.

வாடிக்கையாளரைப் போல் நூதனமாக நடித்து பைக் டேக்ஸிகள் பறிமுதல்: சென்னை போலீஸார் அதிரடி நடவடிக்கை!

இதைத்தொடர்ந்து, இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி, வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். இதனடிப்படையில், கேகே நகர் ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் வாடிக்கையாளர்களைப் போல் பைக் டேக்ஸியை புக் செய்தனர். அப்போது, பிக்அப்புக்காக வந்த பைக் டேக்ஸியைப் பறிமுதல் செய்து சோதனையைச் செய்தனர்.

வாடிக்கையாளரைப் போல் நூதனமாக நடித்து பைக் டேக்ஸிகள் பறிமுதல்: சென்னை போலீஸார் அதிரடி நடவடிக்கை!

பொதுச் சேவையில் ஈடுபடும் வாகனங்கள் மஞ்சள் நிற நம்பர் பிளேட்டைக் கொண்டதாக இருக்க வேண்டும். அதேபோல், பின்னால் அமர்பவர்களுக்கென தனி காப்பீடு, சனி சாலை வரி, இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை வாகன காப்புச் சான்றிதழ் பெறுவது உள்ளிட்ட பல நடைமுறைகள் உள்ளன. ஆனால், இதில் எந்த விதியையும் கடைப்பிடிக்காமல் தனியார் வாகனங்கள் இதில் பயன்படுத்தப்படுத்துவது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அந்த பைக் செய்த பறிமுதல் செய்த போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்தனர்.

வாடிக்கையாளரைப் போல் நூதனமாக நடித்து பைக் டேக்ஸிகள் பறிமுதல்: சென்னை போலீஸார் அதிரடி நடவடிக்கை!

அதேபோல், இந்திய மோட்டார் வாகனச் சட்டப்படி பைக்குகளை டேக்ஸியாக இயக்குவது குற்றம் எனக் கூறப்படுகிறது. இதனை மீறி சமீபகாலமாக தமிழகத்தின் தலைநகரான சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் இருசக்கர வாகன டேக்ஸி சேவை இயக்கப்பட்டு வருகிறது.

வாடிக்கையாளரைப் போல் நூதனமாக நடித்து பைக் டேக்ஸிகள் பறிமுதல்: சென்னை போலீஸார் அதிரடி நடவடிக்கை!

இந்த நிலையில், பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் பைக் டேக்ஸி நிறுவனம், அதன் சேவையை சில நாட்களுக்கு முன்பு சென்னையில் அறிமுகம் செய்தது. இதில், வேலையில்லாமல் சுற்றித் திரிந்த பல பட்டதாரி இளைஞர்கள் தற்காலிக பிழைப்பிற்காக தங்களை இணைத்துக் கொண்டனர்.

வாடிக்கையாளரைப் போல் நூதனமாக நடித்து பைக் டேக்ஸிகள் பறிமுதல்: சென்னை போலீஸார் அதிரடி நடவடிக்கை!

அதில், பலர் உரிய ஆவணம் இன்றி தங்களது பைக்குகளை டேக்ஸியாகப் பயன்படுத்தி வருகின்றனர். இதனடிப்படையில், நடத்தப்பட்ட ஆய்வில் கேக நகர் மற்றும் வெஸ்ட் சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 18க்கும் மேற்பட்ட பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
TN Transport dept Seizes Bike Taxis In Chennai. Read IN Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X