இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
கோவை, மதுரை ஆகிய பகுதிகளில் புதிதாக சிட்டி பயன்பாட்டிற்காக பயன்படுத்துவதற்காக 552 புதிய அல்ட்ரா தாழ்த்தள சொகுசு பேருந்துகள் தயாராகி உள்ளன. ஏசி வசதி மற்றும் ஏசி வசதி இல்லாத பேருந்துகள் பயன்பாட்டிற்கு வர உள்ளன. இது ஒட்டுமொத்த நகரத்தின் லுக்கையே மாற்றப் போகிறது என்றால் நம்புவீர்களா? இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
தமிழகம் முழுவதும் இயங்கி வரும் முக்கிய மாநகர பகுதிகளில் உள்ள சிட்டி பயன்பாட்டில் உள்ள பஸ்களை மேம்படுத்துவதற்காக தமிழக போக்குவரத்து துறை முடிவு செய்து அல்ட்ரா தாழ்தள பஸ்களுக்கான ஆர்டரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக அரசு வழங்கியிருந்தது. மொத்தம் 445 பேருந்துகளுக்காக முதலில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு இதற்கான டெண்டர் போடப்பட்டு குறைவான தொகை டென்டருக்கு விண்ணப்பித்த அசோக் லேலேண்ட் நிறுவனத்திற்கு ஆர்டர் வழங்கப்பட்டிருந்தது.

அதன் பின்னர் இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டிருந்தது. அந்த வழக்குக்கு வந்த உத்தரவின் அடிப்படையில் தற்போது உள்ள 442 என்ற எண்ணிக்கையில் இருந்து 25 சதவீதம் பஸ்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி தற்போது 552 பஸ்கள் டெலிவரி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக பஸ்கள் எல்லாம் தற்போது தயாராக உள்ளன.
இந்த பஸ்களில் கட்டமைக்கும் போது இது மாற்றுத்திறனாளிகளுக்கும் முதியவர்களுக்கும் சிறுவர்களுக்கும் ஏற்ற வகையில் உருவாக்கப்பட வேண்டும். இதற்கான சிறப்பு அம்சங்கள் எல்லாம் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் தான் இந்த பஸ்கள் உருவாக்கப்படுவதற்கான ஆர்டர் வழங்கப்பட்டது. அதன்படியே தற்போது புதிய பஸ்களை தனியார் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
இந்த பஸ்களையெல்லாம் வரும் ஏப்ரல் மாதமே பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதன்படி இந்த பஸ்கள் சென்னை கோவை மற்றும் மதுரை ஆகிய பகுதிகளில் பயன்பாட்டிற்கு வர உள்ளன. ஏற்கனவே இந்த பஸ் சென்னை பகுதியில் சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது மதுரையிலும் இந்த பஸ் செயல்படுத்தி சோதனை செய்து வருகின்றனர்.
மொத்தம் 152 பஸ்களை தயாரிப்பதற்கான செலவை தமிழக அரசு ஜெர்மன் நிறுவனமான கேஎஃப்டபிள்யூ என்ற நிறுவனத்தின் உதவியுடன் பெறுகிறது. அதன்படி ஜெர்மன் நிறுவனம் விரைவில் இந்த பஸ்களுக்கான செட்டில்மெண்டை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பஸ்களுக்கான செட்டில்மெண்ட் வழங்கப்படும் பட்சத்தில் இது விரைவில் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பஸ்ஸில் மொத்தம் மூன்று இடங்களில் கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன. பஸ்ஸின் முன்பக்கம் நடுப்பகுதி மற்றும் பின்பக்கம் என கதவுகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் பயணிகளுக்கு வசதியான பயணத்தை உறுதி செய்வதற்காக பல்வேறு பாதுகாப்பு அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன. இதனால் பயணிகளுக்கு பாதுகாப்பாகவும், சுலபமான பயணம் கிடைக்கும்.
தற்போது சோதனை செய்யப்பட்டு வரும் பஸ் வெள்ளை நிறத்தில் இருக்கிறது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. பலர் இந்த புகைப்படங்களை பகிர்ந்து அடுத்து சென்னை கோவை,மதுரை ஆகிய மூன்று நகரங்களில் லுக்கை மாற்ற போகும் பஸ் இதுதான் என பகிர்ந்து வருகிறார்கள். அன்றாடம் பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் இந்த பஸ்ஸை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
மொத்தமா வரும் 552 பஸ்களில் கோவை மற்றும் மதுரை ஆகிய போக்குவரத்து கழகத்திற்கு தலா 100 பஸ்கள் வழங்கப்படுகிறது. பாக்கி உள்ள 352 பஸ்கள் சென்னை மாநகர பகுதியில் இயங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இந்த 552 பஸ்களில் சில பஸ்கள் ஏசி பஸ்களாகவும், சில பஸ்கள் ஏசி அல்லாத பஸ்களாகவும் உருவாக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் ஏசி பஸ் சென்னை மாநகர பகுதியில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தமிழகத்தை பொறுத்தவரை ஒரு நகரின் வளர்ச்சி என்பது அந்நகரில் இயங்கும் பஸ்களை பார்க்கும் போது நமக்கு தெரிந்துவிடும். மக்கள் அதிகம் பஸ்களை பயன்படுத்த துவங்கினால் அந்த நகரம் விரைவில் வளர்ச்சியை சந்திக்கும் அப்படியாக கோவை,மதுரை போன்ற நகரங்கள் நல்ல வளர்ச்சியை சந்தித்துள்ள நிலையில் அங்கு புதிய பஸ்களை அறிமுகப்படுத்துவது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியது.


Click it and Unblock the Notifications








