காருக்குள் கதவு லாக்காகி சிக்கிய குழந்தை, இந்த ஒரு பட்டனை அழுத்தியதும் ஈஸியா காப்பாத்திட்டாங்க! வீடியோ வைரல்
குழந்தைகளுடன் காரில் பயணிக்கும் போது இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை குழந்தைகள் தனியாக காருக்குள் லாக்காிவிடுவது தான். இந்தியா மட்டுமல்லமல் பல இடங்களில் குழந்தைகள் தனியாக காருக்குள் லாக்காகும் சம்பவம் பல நடந்துள்ளது. இது குறித்த வீடியோவும் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இதனால் பல குழந்தைகள் காருக்குள் முச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவங்களும் அதிகம் நடந்துள்ளன. இப்படியாக குழந்தை காருக்குள் சிக்கி அந்த குழந்தையே தன்னை காப்பாற்றிய சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
காருக்குள் பயணிகள் அமர்ந்திருக்கும் போது கார் ஆஃப் செய்யப்பட்டு கதவுகள் அடைக்கப்பட்டால் கார் தானாக லாக்காவிடும். அப்பொழுது காருக்குள் இருக்கும் நபர்கள் உள்ளே இருந்து லாக்கை அன்லாக் செய்தால் தான் கார் கதவு திறக்க முடியும். பெரியவர்களாக இருந்தால் சுலபமாக காரின் உள்ளே இருந்து வெளியே வந்துவிடலாம். ஆனால் குழந்தைகள் காருக்குள் சிக்கிக்கொண்டால் அவர்களுக்கு காரின் உள்ளே இருந்து அன்லாக் செய்ய முடியாது.

இப்படியாக பல சம்பவங்கள் காருக்குள் குழந்தைகள் மட்டும் தனியாக சிக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில் தற்போது ஒரு வீடியோ வைரலாகியுள்ளது. அதன்படி ரியாஸ் மாலிக் என்ற பெயரில் உள்ள இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் 2-3 வயது மதிக்க தக்க குழந்தை ஒன்று டிரைவர் சீட்டில் வநன்று கொண்டிருக்கிறது. இந்த கார் ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா காராக இருக்கிறது. காரின் இக்னீஷியன் ஆஃப் செய்யப்பட்ட நிலையில் இருக்கிறது.
இந்த காருக்குள் குழந்தை லாக்காகி இருக்கும் நிலையில் வெளியில் இருந்து காரை திறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தை சிக்கியது. பொதுவாக இப்படியான சூழ்நிலையில் காருக்கு வெளியில் இருப்பவர்கள் பதற்றமடைவார்கள். ஆனால் இந்த வீடியோவில் காரின் வெளியே இருப்பவர்கள் பதற்றப்படாமல் சூழ்நிலையை உணர்ந்து காருக்குள் இருக்கும் குழந்தையை காப்பாற்றும் நோக்கத்தோடு சரியாக செயல்பட்டது தெரிகிறது.

காருக்குள் இருப்பவர் குழந்தையை காரின் இன்ஜினை ஸ்டார்ட் செய்ய சொல்லி கொடுக்கிறார். காரின் இன்ஜின் ஸ்டார்ட் ஆகிவிட்டால் காரின் கதவுகள் அன்லாக்காகி விடும். குறிப்பிட்ட சம்பவத்தில் அந்த குழந்தை வெளியில் இருந்து சொன்னதை கேட்டு சரியாக காரின் புஷ் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டனை அழுத்தியது. கார் ஸ்டார்ட் ஆனதும் காரில் உள்ளே இருந்து குழந்தையை பத்திரமாக அங்கிருந்தவர்கள் மீ்ட்டனர்.
குறிப்பிட்ட ஹூண்டாய் கிரெட்டா காரில் புஷ் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் இருந்ததால் அந்த குழந்தையால் எளிதாக காரை ஸ்டார்ட் செய்ய முடிந்தது. இல்லை என்றால் காரின் ஜன்னல் கண்ணாடியையோ அல்லது கதவையோ உடைத்து தான் குழந்தையை காப்பாற்ற வேண்டும். இதனால் நீங்கள் காரில் செல்லும் போது எக்காரணத்தை கொண்டும் குழந்தையை தனியாக காருக்குள் விட்டு செல்லாதீர்கள். இது பிரச்சனையை ஏற்படுத்திவிடும்.
இப்படியான பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. இதனால் வாகனங்களில் பயணிக்கும் போது நாம் குழந்தைகளுடன் பயணித்தால் கவனமாக இருக்க வேண்டும். இந்த பிரச்சனையை பலர் சந்தித்து வருகின்றனர் நீங்கள் குழந்தைகளுடன் வாகனங்களில் செல்லும் போது இப்படியாக பிரச்சனைகளை சந்திக்க வேண்டாம் என்றால் குழந்தைகளை எக்காரணத்தை கொண்டும் காருக்குள் விட்டுவிட்டு தனியாக இறங்கி செல்லாதீர்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: குறிப்பிட்ட சம்பவத்தில் குழந்தையும் சரி வெளியில் இருந்த பெரியவர்களும் சரி பதற்றப்படாமல் இருந்ததால் எந்த சேதாரமும் இன்று குழந்தை உயிர் தப்பியது. காருக்கும் சோதரம் ஏற்படவில்லை. இனி பெற்றோர்கள் குழந்தைகளுடன் பயணிக்கும் போது கவனமாக பயணிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








