ஜப்பான் விமான விபத்தில் 379 பேரின் உயிரை காப்பாற்றியது இப்படிதானா? இவங்க தான் நிஜ ஹீரோக்கள்!
கடந்த இரு நாட்களுக்கு முன்பு ஜப்பான் தலைநகர் டோக்கேவில் நடந்த விமான விபத்தில் முழு விமானமும் தீயில் கருகி நாசமான நிலையில் விமானத்துக்கு உள்ளே இருந்த சுமார் 379 பயணிகள் மற்றும் விமான நிறுவன ஊழியர்கள் அனைவரும் பத்திரமாக உயிருடன் காப்பாற்றப்பட்டார்கள். இவ்வளவு பெரிய விபத்தில் அனைவரும் உயிருடன் காப்பாற்றப்பட்டது எப்படி என்ற விரிவான விபரத்தை தான் இங்கே காணப் போகிறோம்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஹனேடா என்ற விமான நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு ஜேஏஎல் 516 என்ற விமானம் தரையிறங்குவதற்காக அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அப்பொழுது அதே ஓடு பாதையில் கடலோர காவல் படை விமானமும் புறப்படுவதற்காக தயார் செய்யப்பட்டு கொண்டிருந்தது.

கடலோர காவல் படையின் விமானத்தில் மோதாமல் சற்று தள்ளி தரையிறங்க ஜேஏஎல் 516 என்ற விமானத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் விமானம் தரை இறங்கிய போது எதிர்பாராத விதமாக இரு விமானங்களும் மோதின. இதில் 379 பயணிகளுடன் தர இயங்கிய ஜேஏஎல் 516 என்ற விமானம் தீப்பிடித்து ஓடுபாதையில் சில நூறு மீட்டர் தூரம் பயணித்தது.
இதை கவனித்த விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக தீப்பிடித்து எரிந்த விமானத்தில் உள்ளே இருக்கும் பயணிகளை மீட்கும் நடவடிக்கையில் இறங்கினர். முழு விமானமும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த நிலையில் விமானத்தின் பின்பக்க கதவு வழியாக பயணிகள் கீழே இறங்குவதற்கான ஏர் பேக் பாதை விரிக்கப்பட்டது.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட பாதுகாப்பு படை வீரர்கள் உடனடியாக விமானத்திற்கு உள்ளே இருந்த 379 பயணிகள் மற்றும் விமான ஊழியர்களையும் பத்திரமாக உயிருடன் மீட்டார்கள். விமானம் தீ பிடித்த ஒரு சில நிமிடங்களிலேயே அத்தனை பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் கடலோர காவல் படை விமானம் தீப்பிடித்து எரிந்தது. அதன் உள்ளே இருந்த கேப்டன் தவிர மற்ற ஐந்து ஊழியர்கள் பரிதாபமாக தீயில் கருகி பலியானார்கள்.
379 பேர் பத்திரமாக ஒரு சில நிமிடங்களில் மீட்கப்பட்டது எப்படி என்ற ஆச்சரியம் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. இவ்வளவு பெரிய தீ விபத்தில் எப்படி அந்த விமானத்திற்கு உள்ளே இருந்த ஒருவரும் உயிர் இழக்காமல் தப்பினார்கள் என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் அவ்வப்போது பாதுகாப்பு டிரில்களை நடத்தி பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகளை வழங்கியது தான் காரணமாக சொல்லப்படுகிறது.

கடந்த 1985 ஆம் ஆண்டு டோக்கியோவில் இதே போன்ற ஒரு விமான விபத்து நடந்தது. அதில் சுமார் 520 பேர் பலியாகினர். இந்த விபத்து ஒட்டுமொத்த ஏர்லைன் உலகத்தையே புரட்டி போட்டது. ஏர் லைன் துறையிலேயே பாதுகாப்பு குறித்து பல்வேறு மாற்றங்கள் இந்த விபத்திற்கு பிறகு செய்யப்பட்டது. இந்த விபத்துக்கு பிறகு ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் பாதுகாப்பு குறித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க துவங்கியது.
சர்வதேச அளவில் விமானங்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகள் போக ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனியான பாதுகாப்பு வழிமுறைகளையும் வகுத்து அவ்வப்போது அந்நிறுவனத்தின் பாதுகாப்பு ஊழியர்களுக்கான ட்ரில் நடத்தி பாதுகாப்பு விஷயத்தில் மிக கவனமாக இருந்ததால் அனைத்து பாதுகாப்பு ஊழியர்களுக்கும் அவசர காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு இருந்தது.

இதனால் நேற்று முன்தினம் விமானம் தீப்பிடித்து எறிந்த உடன் அவர்கள் உடனடியாக விமானத்திற்கு உள்ளே இருக்கும் பயணிகளை காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தார்கள். ஒரு சில நிமிடங்களில் சுமார் 379 பயணிகள் உட்பட விமானத்தில் உள்ள ஊழியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டார்கள். பாதுகாப்பு விஷயத்தில் விமான நிறுவனங்கள் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் அவ்வளவு கவனமாக இருந்தால் எவ்வளவு பெரிய சேதாரம் தவிர்க்கப்படும் என்பதற்கு இது ஒரு உதாரணமாக அமைந்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விமானங்கள் விபத்தில் சேர்க்கும் போது விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகள் செயல்பாடு மிக முக்கியமாக இருக்கிறது. ஒவ்வொரு அசைவும் அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் பயணிகளின் உயிர் சம்பந்தப்பட்டது என்பதால் அவர்களுக்கு போதுமான அளவு பயிற்சியை வழங்க வேண்டும் இந்த வகையில் ஜப்பான் விமான நிலையம் மற்றும் ஜப்பான் ஏர்லைன்ஸ் ஆகியவை தங்கள் ஊழியர்களுக்கு சிறப்பான பயிற்சியை வழங்கியுள்ளார்கள் என்பது நமக்கு தெரிகிறது.


Click it and Unblock the Notifications









