டெலிவரி எடுத்த 1 மணி நேரத்தில் கார் மொத்தமும் போச்சு.. அந்த மியூசிக் தயாரிப்பாளரின் காரா இது!..
இசைத் தயாரிப்பாளர் ஒருவரின் விலை உயர்ந்த கார் டெலிவரி எடுத்த அடுத்த ஒரு மணி நேரத்திலேயே தீப் பிடித்து எரிந்து நாசமாகியிருக்கின்றது. இந்த சம்பவம் ஜப்பான் தலைநகரம் டோக்கியோவிலேயே அரங்கேறி உள்ளது. அங்கு நடைபெற்ற இந்த சம்பவம் எப்படி இந்தியா வரைக்கு பேசு பொருளாக மாறியிருக்கின்றது என நீங்கள் கேட்கலாம். தீ விபத்தில் சிக்கி இருப்பது ஃபெர்ராரி 458 ஸ்பைடர் (Ferrari 458 Spider) கார் மாடல் ஆகும். உலகில் விற்பனையில் இருக்கும் மிகவும் அரிய வகை கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும்.
இத்தகைய காரே டெலிவரி பெற்ற ஒரு மணி நேரத்திற்குள் தீயில் கருகி போயிருக்கின்றது. இதன் விளைவாகவே உலக அளவில் இந்த நிகழ்வு பேசு பொருளாக மாறியிருக்கின்றது. மேலும், இந்த கார் ஜப்பானின் புகழ்பெற்ற இசைத் தயாரிப்பாளர் ஹான்கான்-க்கு சொந்தமானது என்றும் கூறப்படுகின்றது.
இது அவருடைய கனவு வாகனம் என்றும் கூறப்படுகின்றது. பத்தாண்டுகளாக இந்த காரை வாங்க வேண்டும் என்கிற கனவில் இருந்து சமீபத்திலேயே இதனை அவர் வாங்கி இருக்கின்றார். மேலும், இந்த காரை வாங்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய பத்து ஆண்டுகளாக சம்பாதியத்தையும் அவர் போட்டிருக்கின்றார்.
இத்தகைய காரே அவரிடத்தில் முழுசாக ஒரு நாள் கூட இல்லாமல் போயிருக்கின்றது. இதனாலேயே இந்த சம்பவம் பலரை அதிர்ச்சியிலும் மூழ்க செய்திருக்கின்றது. கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி அன்றே இந்த சோகமான சம்பவம் இசைத் தயாரிப்பாளர் ஹான்கான்-க்கு அரங்கேறியிருக்கின்றது. அவர் ஷூடோ எக்ஸ்பிரஸ் சாலையில் தன்னுடைய புதிய காரை டெலிவரி பெற்று சென்றிருக்கின்றார்.
அப்போது திடீரென எஞ்சினில் இருந்து புகை வெளியேறியிருக்கின்றது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஹான்கான் உடனடியாக காரை நிறுத்திவிட்டு அதில் இருந்து வெளியேறியுள்ளார். அவர் வெளியேறிய அடுத்த சில நிமிடங்களிலேயே கார் முழுக்க தீ பரவியிருக்கின்றது. அதிவேகமாக பரவிய அந்த தீ, காரின் பெரும் பகுதியை ஒரு சில நிமிடங்களிலேயே பதம் பார்த்திருக்கின்றது.
ஆகையால், இப்போது மீண்டும் பயன்படுத்துவதற்கு துளியும் உகந்ததல்லாத வாகனமாக அந்த ஃபெர்ராரி 458 ஸ்பைடர் கார் மாறியிருக்கின்றது. அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. குறிப்பாக, சிறு காயமுமின்றி ஹான்கான் தீ விபத்தில் இருந்து தப்பி இருக்கின்றார்.

புதிய காரில் தீ விபத்து ஏற்பட்டதற்கான துள்ளியமான காரணம் இதுவரை வெளியாகவில்லை. இதை அறிவதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீயில் கருகியிருக்கும் இந்த கார் மாடலின் ஒரே ஒரு யூனிட்டே 3 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது.
இந்த காரின் துல்லியமான இந்திய மதிப்பு பற்றிய விபரங்கள் தெரியவில்லை. இருப்பினும், அதன் மதிப்பு நாட்டில் ரூ. 5 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகின்றது. இத்தகைய கார் மாடலே ஒரு சில நிமிடங்களில் தீயில் கருகி முழுமையாக நாசமாகியிருக்கின்றது. 458 வரிசையில் விற்பனைக்குக் கிடைக்கும் ஃபெர்ராரி கார்களில் ஏற்கனவே தீ விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தன்னுடைய குறிப்பிட்ட சில கார்களில் தீ விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதை உணர்ந்து ஃபெர்ராரி நிறுவனம் அதன் சார்பில் ஏற்கனவே திருப்பி வர அழைப்பு விடுத்திருந்தது. சில ஆயிர யூனிட் கார் மாடல்களுக்கு அழைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த நிலையிலேயே 458 ஸ்பைடர் தீ விபத்து ஜப்பானில் அரங்கேறி இருக்கின்றது. இது அந்த கார் மாடலை பயன்படுத்தி வரும் உரிமையாளர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications









