பேசாம வண்டிய சேல்ஸ் பண்ணீரலாம்... தமிழ்நாட்ல டோல்கேட் கட்டணம் எகிற போகுதாம்... எவ்ளோனு தெரிஞ்சா கோவப்படுவீங்க

தமிழ்நாட்டில் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் டோல்கேட் கட்டணம் உயரவுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பேசாம வண்டிய சேல்ஸ் பண்ணீரலாம்... தமிழ்நாட்ல டோல்கேட் கட்டணம் எகிற போகுதாம்... எவ்ளோனு தெரிஞ்சா கோவப்படுவீங்க

இந்தியாவில் உள்ள டோல்கேட்களில் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதாக வாகன உரிமையாளர்கள் மிக நீண்ட காலமாக புகார் தெரிவித்து வருகின்றனர். அத்துடன் டோல்கேட்களை அகற்ற வேண்டும் என்பதும் வாகன ஓட்டிகளின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. ஆனால் அந்த கோரிக்கை நிறைவேற்றப்படுவதற்கு எந்த அறிகுறிகளும் தென்படவில்லை.

பேசாம வண்டிய சேல்ஸ் பண்ணீரலாம்... தமிழ்நாட்ல டோல்கேட் கட்டணம் எகிற போகுதாம்... எவ்ளோனு தெரிஞ்சா கோவப்படுவீங்க

எனவே குறைந்தபட்சம் டோல்கேட் கட்டணத்தையாவது குறைக்க வேண்டும் என வாகன உரிமையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இந்த கோரிக்கைக்கு நேர்மாறாக குறிப்பிட்ட கால இடைவெளிகளில் டோல்கேட் கட்டணம் தொடர்ச்சியாக உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் தமிழ்நாட்டில் வெகு விரைவில் டோல்கேட்களில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

பேசாம வண்டிய சேல்ஸ் பண்ணீரலாம்... தமிழ்நாட்ல டோல்கேட் கட்டணம் எகிற போகுதாம்... எவ்ளோனு தெரிஞ்சா கோவப்படுவீங்க

தமிழ்நாட்டில் மொத்தம் 14 டோல்கேட்களில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது. 8 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிகிறது. அத்துடன் வரும் செப்டம்பர் 1ம் தேதியில் இருந்து இந்த கட்டண உயர்வு அமலுக்கு கொண்டு வரப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேசாம வண்டிய சேல்ஸ் பண்ணீரலாம்... தமிழ்நாட்ல டோல்கேட் கட்டணம் எகிற போகுதாம்... எவ்ளோனு தெரிஞ்சா கோவப்படுவீங்க

இது வாகன உரிமையாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் கட்டண உயர்வு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகவில்லை. எனினும் அடுத்த வாரத்தில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை முறையாக வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேசாம வண்டிய சேல்ஸ் பண்ணீரலாம்... தமிழ்நாட்ல டோல்கேட் கட்டணம் எகிற போகுதாம்... எவ்ளோனு தெரிஞ்சா கோவப்படுவீங்க

நாங்கள் ஏற்கனவே கூறியபடி 14 டோல்கேட்களில் கட்டணம் உயரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி திண்டிவனம்-உளுந்தூர்பேட்டை சாலையில் செயல்பட்டு வரும் விக்கிரவாண்டி டோல்கேட், உளுந்தூர்பேட்டை-பாடலூர் சாலையில் இயங்கி வரும் திருமாந்துறை டோல்கேட் ஆகியவற்றில் கட்டணம் உயரவுள்ளதாக கூறப்படுகிறது.

பேசாம வண்டிய சேல்ஸ் பண்ணீரலாம்... தமிழ்நாட்ல டோல்கேட் கட்டணம் எகிற போகுதாம்... எவ்ளோனு தெரிஞ்சா கோவப்படுவீங்க

இதுதவிர சென்னை-தடா சாலையில் இயங்கி கொண்டுள்ள நல்லூர் டோல்கேட், சேலம்-குமாரபாளையம் சாலையில் இருக்கும் வைகுந்தம் டோல்கேட் ஆகியவற்றிலும் கட்டணம் உயரவுள்ளதாக தெரிகிறது. அத்துடன் சேலம்-உளுந்தூர்பேட்டை சாலையில் செயல்பட்டு வரும் மேட்டுப்பட்டி டோல்கேட்டிலும் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என கூறப்படுகிறது.

பேசாம வண்டிய சேல்ஸ் பண்ணீரலாம்... தமிழ்நாட்ல டோல்கேட் கட்டணம் எகிற போகுதாம்... எவ்ளோனு தெரிஞ்சா கோவப்படுவீங்க

மேலும் திருச்சி-திண்டுக்கல் சாலையில் உள்ள பொன்னம்பலப்பட்டி டோல்கேட் மற்றும் தஞ்சாவூர்-திருச்சி சாலையில் இருக்கும் வாழவந்தான்கோட்டை டோல்கேட் என ஒட்டுமொத்தமாக 14 டோல்கேட்களில் கட்டணம் உயரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே பல்வேறு நெருக்கடிகளில் உள்ள வாகன உரிமையாளர்களுக்கு இந்த தகவல் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

பேசாம வண்டிய சேல்ஸ் பண்ணீரலாம்... தமிழ்நாட்ல டோல்கேட் கட்டணம் எகிற போகுதாம்... எவ்ளோனு தெரிஞ்சா கோவப்படுவீங்க

குறிப்பாக பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகன உரிமையாளர்கள் ஏற்கனவே மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் பல்வேறு நகரங்களில் தற்போது ஒரு லிட்டர் எரிபொருளின் விலை 100 ரூபாய்க்கும் மேல் விற்பனையாகி கொண்டுள்ளது. எனவே வரிகளை குறைக்க வேண்டும் என ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு வாகன உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பேசாம வண்டிய சேல்ஸ் பண்ணீரலாம்... தமிழ்நாட்ல டோல்கேட் கட்டணம் எகிற போகுதாம்... எவ்ளோனு தெரிஞ்சா கோவப்படுவீங்க

தமிழ்நாட்டை பொறுத்தவரை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சமீபத்தில் பெட்ரோல் விலையை ஒரு லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்தது. இந்த விலை குறைப்பு உடனடியாக அமலுக்கும் கொண்டு வரப்பட்டு விட்டது. தமிழ்நாட்டை சேர்ந்த வாகன உரிமையாளர்களுக்கு இந்த விலை குறைப்பு சற்றே நிவாரணத்தை வழங்கியுள்ளது.

பேசாம வண்டிய சேல்ஸ் பண்ணீரலாம்... தமிழ்நாட்ல டோல்கேட் கட்டணம் எகிற போகுதாம்... எவ்ளோனு தெரிஞ்சா கோவப்படுவீங்க

இதேபோல் ஒன்றிய அரசும் விலையை குறைக்க வேண்டும் என வாகன உரிமையாளர்கள் தற்போது வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையாவது நிறைவேற்றப்படுமா? என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்களின் கவனம் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி திரும்பி வருகிறது.

பேசாம வண்டிய சேல்ஸ் பண்ணீரலாம்... தமிழ்நாட்ல டோல்கேட் கட்டணம் எகிற போகுதாம்... எவ்ளோனு தெரிஞ்சா கோவப்படுவீங்க

அதற்கேற்ப தற்போது இந்திய சந்தையில் பல்வேறு எலெக்ட்ரிக் வாகனங்கள் தொடர்ச்சியாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இதில், Ola Electric S1, S1 Pro மற்றும் Simple One உள்ளிட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பொதுமக்களின் கவனத்தை அதிகம் கவர்ந்துள்ளன. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்றுதான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன.

பேசாம வண்டிய சேல்ஸ் பண்ணீரலாம்... தமிழ்நாட்ல டோல்கேட் கட்டணம் எகிற போகுதாம்... எவ்ளோனு தெரிஞ்சா கோவப்படுவீங்க

பெட்ரோல் விலை உயர்வு காரணமாக இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு அமோக வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு தற்போது அதிக எண்ணிக்கையில் முன்பதிவுகள் குவிந்து வருகின்றன. சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு இது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Toll fee to be hiked in 14 plazas in tamil nadu from september 1 here are all the details
Story first published: Friday, August 20, 2021, 15:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X